Pages

Sunday, January 08, 2012

15 Lion Comics # 210–Lion Comeback Special Jan 2012 லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல்

Dear ComiRades,

என்று தமிழில் அழைக்க முடியாதமையை பற்றி சென்ற பதிவில் கூறி இருந்தது நினைவிருக்கலாம். ஆகையால் மிகவும் ஆக இந்த முறை ஆங்கிலத்தில் ஆரம்பித்து விட்டு பதிவில் நுழைகிறேன். ஜெஹாங்கிர் அவர்கள் If there is heaven on earth, it’s here; it’s here; it’s here என்று கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த புகழ்பெற்ற வசனத்தை நான் மறுபடியும் ஒரு முறை, ஆனால் காமிக்ஸ் கண்ணோட்டத்தில், கூறுகிறேன்:  சொர்க்கம் என்று ஒன்று பூமியில் இருந்தால், அது இங்கேதான் இருக்கிறது, இங்கேதான் இருக்கிறது, இங்கேதான் இருக்கிறது. ஏனெனில் இன்றுதான் சொர்க்கம் என்றால் என்ன என்பதையும் கண்ணால் கண்டேன் - லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் வழியாகவும், கணக்கிலடங்கா ரசிகர்களின் அன்பு மழையிலும்.

இந்த பதிவில் செல்லும் முன், இந்த புத்தகத்தை பற்றிய நம்முடைய முன்னோட்ட பதிவினை ஒருமுறை பார்த்துவிட்டால், இந்த புத்தகத்தை பற்றிய பின்னணி விவரங்கள் சுலபமாக புரியும். ஏனெனில் இந்த முறை பதிவினில் நான் ஒன்றுமே கூறப்போவதில்லை. சினிமா மற்றும் காமிக்ஸ் - இவை இரண்டுமே விஷூவல் மீடியா என்பது நண்பர் மிஷ்கின் அவர்களின் கருத்து. இந்த ஒரு முறையாவது அந்த கருத்திற்கிணங்க இந்த பதிவினை ஒரு விஷூவல் டிரீட் ஆக அளிக்க முயன்றுள்ளேன். ஆகையால் நோ மொக்கை இன் திஸ் போஸ்ட்.

Lion Comics Issue No 210 CBS Front Cover – Jan 2012 Lion Comics Issue No 210 CBS Back Cover – Jan 2012
Lion Comics Issue No 210 CBS Front Cover Lion Comics Issue No 210 CBS Back Cover

லயன் காமிக்ஸ் வாங்கும் ரசிகர்கள் உடனயாக படிப்பது நம்ம எடிட்டர் சாரின் ஹாட் லைன் பக்கங்களைத்தான். நம்முடைய நெடுநாள் தோழனொருவன் தோளில் கை போட்டுக்கொண்டு ஆற அமர ஒரு சங்கதியை கூறுவது போன்ற மாயையை எடிட்டர் அவரது ஹாட் லைன் மூலமாக உருவாக்கிக்கொண்டு இருக்கிறார் என்பது நிதர்சன உண்மை. ஆகையால் மற்றவர்களைப்போல நானும் இந்த இதழின் ஹாட் லைனை தான் முதலில் படித்தேன். அதுவும், ட்ராபிக் காரணமாக பைக்கில் பின் சீட்டில் உட்கார்ந்துக்கொண்டு படித்தேன். நீங்களும் படியுங்கள் (பின் சீட்டில் அல்ல).

Lion Comics Issue No 210 – Jan 2012 ome Back Special CBS Pg No 003 Editor SV's Hotline 01
Lion Comics Issue No 210 CBS Pg No 003 Editor SV's Hotline 01

அண்ணன் லக்கியாரை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது (ஹல்லோ, அந்த லக்கி இல்லீங்க, இது காமிக்ஸ் லக்கி லுக்).ஆகையால் இந்த இதழின் முதல் கதையாக லக்கியாரின் கதையையே பிரசுரித்து இருப்பது சிறப்பு. அந்த கதையின் முதல் பக்கம், பளிச்சிடும் சுப்பர் ரின் வெண்மையில், ச்சே, பளிச்சிடும் சூப்பர் ஆர்ட் பேப்பரில்.

Lion Comics Issue No 210 – Jan 2012 – Come Back Special - CBS Pg No 004 Lucky Lukes Otrargal Orayiram Page 01
Lion Comics Issue No 210 CBS Pg No 004 Lucky Lukes Otrargal Orayiram Page 01

தமிழில் கேப்டன் பிரின்ஸ் கதையை முழு வண்ணத்தில் படிக்கவேண்டும் என்கின்ற காமிக்ஸ் ரசிகனின் ஆசையை இந்த இதழில் எடிட்டர் பூர்த்தி செய்துள்ளார். அட்டகாசமான வேகத்தில் நகரும் இந்த கதையின் முதல் பக்கம்:

Lion Comics Issue No 210 – Jan 2012 – Come Back Special - CBS Pg No 048 Bernard Prince Kaanagathil Kalebaram
Lion Comics Issue No 210 CBS Pg No 048 Bernard Prince Kaanagathil Kalebaram

லைப் பிகின்ஸ் அட் பார்ட்டி (40) என்று அல்டிமேட் ஸ்டார் அஜித் மங்காத்தா படத்தில் கூறினாலும் கூறினார், இந்த நாப்பது வயசுக்காரங்களின் தொந்தரவு தாங்கமுடியாத அளவுக்கு போய் விட்டது. இப்போது தன்னுடைய நாற்பதாவது பிறந்த நாளை கொண்டாடுபவர் நம்ம தமிழ் காமிக்ஸ் உலகின் தலையாய சாகசவீரர் இரும்புக்கை மாயாவி. அவரது டாக்டர் மேக்னோ என்ற இதுவரை தமிழில் பிரசுரிக்கப்படாத கதை தான் மூன்றாவது கதை.

Lion Comics Issue No 210 – Jan 2012 – Come Back Special - CBS Pg No 099 Steel Claw Dr Magno 01st Page
Lion Comics Issue No 210 CBS Pg No 099 Steel Claw Dr Magno 01st Page

ஒரு காமிக்ஸ் ஸ்டிரிப்பின் அழகே அது வெளிவந்த அதே சைசில் படிப்பதுதான். ரொம்ப நாளாக ஆங்கில டைட்டன் புக்ஸ் போல தமிழில் இல்லையே என்று நினைத்துக்கொண்டு இருந்த எனக்கு வந்த தங்க சுரங்கம் இந்த கதை. எடிட்டர் சார், உங்களுக்கு ஒரு தாழ்வான வேண்டுகோள்:தயவு செய்து இனிமேல் காமிக்ஸ் ஸ்ட்ரிப் கதைகளை பிரசுரிப்பதாக இருந்தால் (ரிப் கிர்பி, மாடஸ்டி, ஜேம்ஸ் பாண்ட் etc), அவற்றையும் இதே முறையில் வெளியிடவும்.

Lion Comics Issue No 210 – Jan 2012 – Come Back Special - CBS Pg No 153 Agent X 9 Phil Corrigan Siraiyil oru Seematti
Lion Comics Issue No 210 CBS Pg No 153 Agent X 9 Phil Corrigan Siraiyil oru Seematti

இந்த இதழின் ஹைலைட்டே இரும்புக்கை மாயாவியின் சாகசங்கள். அவற்றையும் நம்ம எடிட்டர் அவை வெளிவந்த அதே பார்மட்டில் வெளியிட்டு இன்பக்கடலில் மூழ்கடிக்க செய்து விட்டார். இதோ இரும்புக்கை மாயாவியின் இரண்டாவது கதை: கண்ணாமூச்சி ரே ரே

Lion Comics Issue No 210 – Jan 202 – Come Back Special - CBS Pg No 169 Steel Claw Kannamoochi Re Re 01st Page
Lion Comics Issue No 210 CBS Pg No 169 Steel ClawKannamoochi Re Re 01st Page

கண்ணா, ரெண்டு லட்டு திங்க ஆசையா என்பது போல நம்ம எடிட்டர் சார் இந்த புக்கில் இரண்டாவது முறையாக மற்றுமொரு ஹாட்லைனை எழுதி பலரின் மாற்றுக்கருத்துக்களை நீக்கியுள்ளார். See him in action:

Lion Comics Issue No 210 – Jan 2012 – Come Back Special - CBS Pg No 193 Editor SV's Hotline 02
Lion Comics Issue No 210 CBS Pg No 193 Editor SV's Hotline 02

லயன் காமிக்ஸில் நான் முதல் படிப்பது ஹாட் லைனைத்தான் என்று நான் கூறியது உண்மைதான், ஆனால் அது பதினேழு புத்தகங்களுக்கு முன்பாக. எப்போதிலிருந்து சிங்கத்தின் சிறு வயது சாகசங்களை படிக்க ஆரம்பித்தேனோ, அதன் மீதிருந்து கவனத்தை அகற்றவே இயலவில்லை.

Lion Comics Issue No 210 – Jan 2012 – Come Back Special - CBS Pg No 194 Singathin Siruvayadhil Part 17 Page 01 & 02
Lion Comics Issue No 210 CBS Pg No 194 Singathin Siruvayadhil Part 17 Page 01
Lion Comics Issue No 210 CBS Pg No 195 Singathin Siruvayadhil Part 17 Page 02

ஒரு காலத்தில் நம்ம காமிக்ஸ் புத்தகங்களில் மிகவும் சுவாரஸ்யமான விஷயமாக இருந்தவை இந்த அடுத்து வரவிருக்கு கதைகளுக்கான விளம்பரங்கள். ரொம்ப மாதங்களுக்கு பிறகு நிறைய, நிறைய விளம்பரங்கள். வெல்கம் பேக், The real king of entertainment.

Lion Comics Issue No 210 CBS Front Inner Cover Advt for Forthcoming Issues & Other Advertisements in the sequential order
Lion Comics Issue No 210 CBS Front Inner Cover Advt for Forthcoming Issues
Lion Comics Issue No 210 CBS Pg No 196 Advt of Forthcoming Stories
Lion Comics Issue No 210 CBS Pg No 197 Advt of Forthcoming Stories
Lion Comics Issue No 210 CBS Pg No 198 Advt of Forthcoming Stories
Lion Comics Issue No 210 CBS Pg No 199 Advt of Forthcoming Stories
Lion Comics Issue No 210 CBS Pg No 200 Advt of Forthcoming Stories
Lion Comics Issue No 210 CBS Pg No 201 Advt of Forthcoming Stories
Lion Comics Issue No 210 CBS Pg No 202 Advt of Forthcoming Stories
 
Lion Comics Issue No 210 CBS Back Inner Cover Advt for currently available issues

Well, that's all for the time being. As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget in the Blog.

Thanks & Regards,

King Viswa

15 comments:

  1. படங்களுக்கு நன்றி விஸ்வா. புத்தகம் கைக்கு வர இன்னும் ஒரு வாரம் ஆகி விடும். இப்போது முன்கூட்டியே பார்த்தது ஒரு வகையில் நல்லதுதான் என்றாலும், இந்த காத்திருப்பு ஒரு வேதனைதான்.

    நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு புத்தகம், அதுவும் அதிரடியான பல அறிவிப்புகளை தாங்கி. இந்த வருட சென்னை புத்தக கண்காட்சி உண்மையிலேயே லயன், முத்துவை பொறுத்தவரை ஒரு கம் பேக்தான். இந்த உற்சாகம் இந்த ஆண்டு முழுவதும் தொடந்தால் நல்லதுதான்.

    லக்கி லூக் கண்ணைப்பரிக்கிறது. பிரின்ஸ் ஓவியங்கள் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. வாசகர்களிடையே வரவேற்ப்பு எப்படி என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இரும்புக்கை மாயாவி - சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. எப்போதும் போல் டாப் தான். காரிகனை இப்படி முழு பக்க கதையில் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது. புத்தகத்தை நேரில் பார்த்தால்தான் எப்படி இருக்கிறது என்று சொல்ல முடியும். ஜட்ஜுமென்ட் ரிசர்வுட்.

    சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் - நாவில் எச்சில் ஊற வைக்கிறது.

    வருத்தமான விஷயம், கைவசம் உள்ள இதழ்கள் பக்கம்தான். இப்போதே இது ரொம்பவும் சுருங்கி விட்டது. அனேகமாக இந்த புத்தக கண்காட்சிக்குப்பின்னர் இந்த பட்டியலே இருக்குமா என்றே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஒரு வகையில் சந்தோஷம்தான். கைவசம் புத்தகம் எதுவும் இல்லையென்றால் புது புத்தகங்கள் அதிகம் வர வாய்ப்பு உண்டல்லவா?

    ReplyDelete
  2. அச்சோ அச்சோ அச்சோ... என் கண்ணே பட்டுவிடும் போல. வெள்ளை பேப்பரில் பளீர் என்ற சித்திரங்கள். கனவா இல்லை நிசமா????

    வெளியூர் வாசகர்களையும் விரைவில் கவனித்தால் சரி ;)

    சுடச் சுட பதிவேற்றியமைக்கு நன்றி விஷ்வா.

    ReplyDelete
  3. ஹாய் விஷ்வா,
    ஸ்கேன்கள் புத்தக தரத்தினை பறைசாற்றும் வகையில் அருமையாக இருக்கின்றன. இனிவரப்போகும் இதழ்களின் அறிவிப்புகளில் காணப்படும் பழைய ஹீரோக்களை காண ஆயிரம் கண் வேண்டும். விஜயன் அவர்களின் புதிய வியாபார உத்தி நிச்சயம் வெற்றி பெறும். லயன் காமிக்ஸின் பழைய இதழ்களின் விற்பனையும் நன்றாக போவதாக பலரும் கூறுகிறார்கள். நல்ல ஆரோக்கியமான மகிழ்ச்சியான செய்தி.

    ReplyDelete
  4. விஸ்வா!
    காமிக்ஸ் வாசகர்களுக்கு 2012ல் ஓர் அமர்களமான ஆரம்பாமாக அமைந்துள்ளது. முத்து விசிறி சொன்னது போல இந்த உற்சாகத் துள்ளல் தொடர வேண்டும். அனைத்து முன்னணி பின்னணி நண்பர்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  5. @johny

    நண்பரே,
    இன்று இரவு அல்லது நாளை காலை உங்கள் போட்டோக்கள் கொண்ட புத்தக வெளியீட்டு விழா சிறப்பு பதிவு வரும்.

    ReplyDelete
    Replies
    1. nanba want "Ratha Padalam" books....pls can i have a copy to buy or lend or...last year i have missed.....

      Delete
  6. Vishwa,

    So far two days i went to book fair to get the comback special..they say it is not there...is there a way to pre-book it? also can i pay for yearly subscription at the stall?

    ReplyDelete
  7. @Srini V நண்பரே ஸ்ரீனி,
    சந்தா கண்டிப்பாக கட்டலாம். சந்தாவுக்கான விண்ணப்பம் நம்முடைய ஸ்டாலில் உள்ளது. இதுவரையில் பலரும் சந்தா கட்டி உள்ளனர்.


    கம்பேக் ஸ்பெஷல் இன்றே விற்பனைக்கு வந்து விட்டது. நாளைக்கு கண்டிப்பாக இருக்கும். சீக்கிரம் வந்து வாங்கிக்கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால் இந்த வார இறுதியில் இன்னும் ஆயிரம் புத்தகங்கள் விற்பனைக்கு வர இருகின்றன. சனி மற்றும் ஞாயிறு அன்று அவை கிடைக்கும்.

    ReplyDelete
  8. Vishwa

    i could not come today..will i get the comeback special tomorrow?

    ReplyDelete
  9. COME BACK Special இன்று மதியம் தபால் மூலம் கிடைக்கப் பெற்றேன், உடனடியாக படித்தும் முடித்து விட்டேன். இனிய அதிர்ச்சி: லக்கி லூக், கேப்டன் ப்ரின்ஸ் கதைகள் வழுவழு வண்ண காகிதத்தில்.

    CINEBOOK-ல் வந்த அனைத்து லக்கி லூக் கதைகளையும் வாங்கி விட்டேன். ஆனால் ஓராயிரம் ஒற்றர்கள் ஆங்கிலப் பதிப்பு இன்னும் கிடைக்கவில்லை. கதை வெகு அருமை, அதை விட வண்ண வழுவழுப்பான பதிப்பு அட்டகாசம்.

    Its really SPECIAL. விஜயனுக்கு மிக்க நன்றி. It was a great Job and keep it up.

    ReplyDelete
  10. I'm in US and I need this book and like to have regular subscription also. I can pay through online banking and is it possible for these books to be couriered to my parents. I can collect it from them. Last year I enjoyed the "Ratha Padalam". But I miss all the books only to see the Eye catching covers and read Hotline in this blog. Anyhow thanks for this blog.

    ReplyDelete
  11. Thanks for this great information. I am an ardent fan of Muthu Comics. I am still fond of Irumbukkai Mayavi, Lawrence & David, Johny Nero, and Many other Lion Comics protagonists like Robot Archie, Spider Man, Irattaiyarkal ....Hope Mr. Vijayan will consider republishing all those in their Classic Comics...

    ReplyDelete
  12. need Ratha Padalam books...pls..call me no 9790733615....tamilnadu ....can i have copy friends....

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails