Dear ComiRades,
தமிழின் No. 1 நாளிதழான தினகரன் நாளிதழுடன் ஞாயிறு அன்று வழக்கமாக வெளிவரும் வசந்தம் என்கிற இணைப்பு இதழில் நம்முடைய மனம்கவர் காமிக்ஸ் ஹீரோவாகிய இரும்புக்கை மாயாவியை பற்றிய தலைப்பு செய்து ஒன்று வெளியாகி உள்ளது. இது இன்றைய தினசரியுடன் வரும் இலவச இணைப்பாகும் (ஜனவரி எட்டாம் தேதி, 8th Jan 2012). இது ஒரு முக்கிய நிகழ்வு என்பதால் உடனடியாக அதனைப்பற்றிய ஒரு காமிக்ஸ் நியூஸ் பதிவு இங்கே வலையேற்றப்படுகிறது. தமிழ் காமிக்ஸ் உலகில் முதன்முறையாக ஒரே நாளில் இரண்டு பதிவுகள் வலையேற்றப்படுகிறது கூட ஒரு தகவலே.
முத்து காமிக்ஸ் உருவான வரலாற்றையும், இரும்புக்கை மாயாவி தமிழுக்கு வந்த கதையையும் மற்றும் பல சுவாரஸ்யமான சம்பவங்களை கோர்வையாக தொகுத்து, அற்புதமான நடையில், எளிய தமிழில் இந்தகட்டுரையை எழுதிய திருவாளர் "அணில்" அவர்களுக்கும், இதனை பதிப்பித்த தினகரன் நிர்வாகத்தினருக்கும் நன்றி.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்கள்டைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
பிரிண்ட் மீடியாவில் இருக்கும் ஒரு நிறுவனம் அதே துறையில் இருக்கும்(போட்டியாளர்கள் இல்லைஎன்றாலும்) மற்றொரு நிறுவனம் பற்றி இரண்டு பக்க கவரேஜ் தருவது ஒரு பெருந்தன்மையான விஷயம்தான். நீங்கள் குறிப்பிட்டதுபோல் தெளிவாக எளிய நடையில் எழுதப்படிருக்கிறது.
ReplyDeleteவிஸ்வா!
ReplyDeleteகட்டுரை செய்த அணிலுக்கும் வெளியிட்ட தினகரனுக்கும் நன்றியோ நன்றி!
ஹாய் விஷ்வா,
ReplyDeleteஒரே நாளில் இரண்டாவது பதிவு வருவதற்கான சரியான காரணம் கட்டுரையில் அருமையாக தெரிகிறது. இரும்பு கை மாயாவியின் தமிழ் அறிமுகப்படலம் அசத்தல்தான். இந்த வருட தொடக்கமே காமிக்ஸ் ரசிகர்களுக்கு இனிமையாக தொடங்கியிருக்கிறது. நிறைய நல்ல விஷயங்கள் நடக்கின்றன.
ungalai neril santhithathu miguntha magizhchiyai koduthathu viswa! dinakaranuku en nanrigal! hats off
ReplyDeleteபல இடங்களில் விஜயன் சாரின் பேட்டி படித்திருக்கிறேன். முதன் முறையாக சவுந்திர பாண்டியன் அவர்களின் பேட்டியும் புகைப்படத்தையும் பார்க்கிறேன். கட்டுரை அளித்த தினகரனுக்கும் தகவலுக்கு விஸ்வாவிற்கும் நன்றிகள்
ReplyDeleteHi thala ! !
ReplyDeleteit is really fun meeting you and Mr vijayan. I just relieved my childhood wishes. Those days when i see a tamil comic on the book stall my parents refused to buy one. Instead they bought Disney comics which was in english. They wanted me to get a stronghold in that which of course paid well. but i used to sneak here and there to read those tamil comics. even on sat my friends were looking at me like a "Loosu" At this age he spent 1k for tamil comics... they also accepted that they have read those things in their childhood only that i am still retaining it