Pages

Friday, July 06, 2012

10 Comic Cuts 43-News 43: இந்திய சூப்பர் ஹீரோயின், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் திரு ரோஜா முத்தையா Indian Super Heroine on DC Comics Cover, Artist Maniam Selven in Lime Light & The Man Behind Roja Muthiah Library

காமிரேட்ஸ்,
வெல்கம் பேக். இந்த பதிவானது இந்திய தலை நகரில் இருந்து இடப்படுகின்றது. ஒவ்வொரு முறையும் தில்லி வரும்போது குர்கா(வ்)னில் வசிக்கும் காமிரேட் செந்தழல் ரவியை சந்திக்க தொடர்பு கொள்வேன். அவரும் சந்திக்கலாம் என்றே இசைவார். ஆனால் அவரது பணியோ அல்லது என்னுடைய நேரமின்மையோ நாங்கள் இதுவரையில் சந்தித்துக்கொள்ளவேயில்லை. ஒரே ஒரு நாள் தான் பிரயாணமே என்பதால் இந்த முறையும் அதே கதைதான். ஆகையால் நெக்ஸ்ட் டைம் கண்டிப்பாக அவரை சந்தித்து விடுவேன் என்று கூறிவிட்டு இந்த பதிவினை ஆரம்பிக்கிறேன்.

இந்த முறை ஏகப்பட்ட காமிக்ஸ் செய்திகள் உள்ளன. முதலாவது செய்தி நமது இந்திய கதாபாத்திரம் ஒன்று காமிக்ஸ் அட்டையில் இடம்பெற்றது குறித்து. இந்த கதாபாத்திரம் (இந்திய சூப்பர் ஹீரோயின்) கதாசிரியர்களால் உருவாக்கப்பட்டது. வழக்கம் போல இந்த கதாபாத்திரமும் ஒரு மார்கெட்டிங் சமாச்சராமில்லாமல் தொடருமா என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

இந்த தகவல் இந்த வாரம் செவ்வாய் கிழமை அன்று டைம்ஸ் ஆப் இந்தியா தினசரியில் வெளிவந்தது. இதனை ஸ்கான் செய்து மின்னஞ்சலில் அனுப்பிய காமிரேட் பாலாஜி சுந்தர் அவர்களுக்கு நன்றி. இதுபோன்ற காமிரேட்டுகள் இருப்பதால்தான் இந்த தளம் தொடர்ந்து இயங்கி வருகின்றது. நண்பர்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

 

Times of India English Daily Chennai Times Page 01 Tuesday 03072012 Indian SuperHeroine Story: DC Comics Nuclear Men Issue No 10-The Fury of Firestorm
Times of India English Daily Chennai Times Page 01 Dated Tuesday 03072012 Indian Super Heroine Story

சென்ற வாரம் நான் தென்தமிழக சுற்றுப் பயணத்தில் இருந்தபோது ஈரோட்டில் ஹிந்து தினசரியை வாங்கினேன். அப்போதுதான் இந்த அழகான ஒரு கட்டுரை என் கண்ணில் தென்பட்டது (அன்றுதான் காமிரேட் ஸ்டாலின் அவர்களை சந்தித்தேன் என்பதும், இரவுக்காட்சி அமேசிங் ஸ்பைடர்மேன் சென்று நொந்தோம் என்பதுவும் தனிக்கதை). இந்த ஸ்கான் இமேஜை க்ளிக் செய்து முழுவதுமாக படியுங்கள்.

The Hindu English Daily Dated 29062012 Friday Review Special Interview With Maniam Selvam Page 02: Maniam Selven’s Oeuvre
The Hindu English Daily Dated 29062012 Friday Review Special Interview With Maniam Selvam Page 02

சொல்லி வைத்தார்ப்போல, குங்குமம் இதழிலும் கூட ஓவியர் மணியம் செல்வம் அவர்களின் முழுநீள பேட்டி இடம்பெற்றது. அதுவும் அந்த ஆரம்ப கால நிகழ்வுகளை படிக்கும் போது மனம் மெழுகுவர்த்தி போல உருக ஆரம்பித்து விட்டது. கண்டிப்பாக ஒவ்வொரு காமிரேட்டும் படிக்க வேண்டிய பேட்டி இது. அதற்காகவே இதனை ஸ்கான் செய்து முழு பேட்டியையும் வலையேற்றி உள்ளேன்.

எக்ஸ்டிரா பிட்:இந்த குங்குமம் இதழின் கவர் ஸ்டோரி நம்ம முகமூடி படத்தினை பற்றியதே. ஆகையால் கண்டிப்பாக படிப்பதற்கு இரண்டு விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும். மிஸ் செய்யாதீர்கள்.

Kungumam Tamil Weekly Issue Dated 09072012 Story on Artist Maniam Selvam Page No 84 & 85, 86 & 87 and 88 & 89

Kungumam Tamil Weekly Issue Dated 09072012 Story on Artist Maniam Selvam Page No 84 & 85

Kungumam Tamil Weekly Issue Dated 09072012 Story on Artist Maniam Selvam Page No 86 & 87

Kungumam Tamil Weekly Issue Dated 09072012 Story on Artist Maniam Selvam Page No 88 & 89

ரோஜா முத்தையா நூலகம் அடையாரில் இருக்கிறது. இங்கே பல அரிய, கிடைக்காத, பதிப்பில் இல்லாத பல நூல்களும், பத்திரிக்கைகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நூலகம் தனி மனிதர் ஒருவரின் முயற்சி என்று தெரியவ் வரும்போது நாம் வியப்பில் ஆழ்வது தவிர்க்க இயலாத ஒன்று.


அடையாரில் இருக்கும் திரு ரோஜா முத்தையா அவர்களின் நூலகத்திர்ற்கு (சாரு நிவேதிதா சொன்ன பிறகு) இரண்டு மூன்று முறை சென்றுள்ளேன். ஆனால் சிறுவர் இதழ்கள் நான் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. கண்டிப்பாக காமிரேட்டுகள் ஒருமுறையாவது விசிட் செய்யவேண்டிய நூலகம் இது.

Anandha Vikatan Tamil Weekly Magazine Issue Dated 11072012 Page No 67, 68, 69  Pokkisham Segment Roja Muthiah Story
Anandha Vikatan Tamil Weekly Magazine Issue Dated 11072012 Page No 67 Pokkisham Segment Roja Muthiah Story
Anandha Vikatan Tamil Weekly Magazine Issue Dated 11072012 Page No 68 Pokkisham Segment Roja Muthiah Story
Anandha Vikatan Tamil Weekly Magazine Issue Dated 11072012 Page No 69 Pokkisham Segment Roja Muthiah Story

நாளை மறுநாள் இந்த கதையின் இரண்டாவது மற்றும் இறுதிப் பகுதியாகிய தற்செயலாய் ஒரு தற்கொலை புத்தகத்தின் விமர்சனப் பதிவு வெளியாகும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Wednesday, July 04, 2012

13 முத்து காமிக்ஸ் - சிகப்புக் கன்னி மர்மம் - டிடெக்டிவ் ஜெரோம் அறிமுகம் - பாகம் 1 off 2 -Muthu Comics #315 – June 2012–Jerome K. Jerome Bloche Adventure

காமிரேட்ஸ்,

அனைவருக்கும் என்னுடைய தாமதமான வணக்கங்கள். வழமை போல இந்த முறையும் ஒரு (ஜாலியான) பயணமே இந்த பதிவின் தாமதத்திற்கு காரணம். ஆமாம், கடந்த பத்து நாட்களாக சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் என்று கொங்கு மண்டலத்தில் சுற்றிக்கொண்டு இருந்ததாலேயே பதிவுலகத்தின் பக்கமே வர இயலவில்லை. இந்த வார கோட்டா இதோ ஆரம்பித்து விட்டது - நாளைக்கு காலையில் ஒரே ஒரு நாள் வேலையாக இந்தியத் தலைநகர் செல்ல வேண்டியுள்ளது. அட, விடுங்க சார், என்னுடைய சொந்த புலம்பல்களை சொல்ல இந்த வலைப்பூ வலைரோஜா ஆரம்பிக்கப்படவில்லை. ஆகையால், கடந்த வாரம் வந்து சேர்ந்த இந்த இரண்டு முத்து காமிக்ஸ் இதழ்களைப் பற்றி தனித்தனியாக இரண்டு பதிவுகளில் பார்ப்போம். முதல் பதிவாக, டிடெக்டிவ் ஜெரோம் அறிமுகம் ஆகும் சிகப்புக் கன்னி மர்மம் இதழைப்பற்றி அலசுவோம்.

இந்த இதழின் அட்டைப்படங்களை ஏற்கனவே எடிட்டரின் வலைதளத்தில் கண்டு களித்திருப்பீர்கள். ஞாபக சக்தி அதிகமுள்ளவர்கள் ஏற்கனவே இந்த அட்டைப்படங்களை தமிழ் காமிக்ஸ் உலகத்திலேயே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பதிவில் பார்த்திருப்பதை நினைவூட்டிக் கொள்ளலாம். இந்த அட்டைப்படங்களை சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே சிவகாசி லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் கண்டிருக்கிறேன். அப்போதே இவை அச்சடிகப்பட்டதால் இவற்றின் உட்பக்க  அட்டைகளில் இருக்கும் (விற்பனைக்கு இருக்கும்) புத்தக தலைப்புகள் இன்றைய சூழலுக்கு பொருந்தாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

 

Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Cover Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Back Cover
Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Cover Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Back Cover

பிரெஞ்சு மொழியில் வெளிவந்த இந்த தொடரின் actual அட்டைப்படத்தை இந்த பதிவின் முடிவில் நீங்கள் காணலாம். அந்த அட்டைப்படதிற்க்கும் நம்முடைய எடிட்டர் "தயாரித்த" இந்த அட்டைப்படதிற்க்கும் உள்ள வித்தியாசங்களை பாருங்கள். வண்ணக் கோர்வை மிகுந்து வானவில்லாக ஜொலிக்கும் நம் இதழின் அட்டைப்படங்கள், என்னைப்போன்ற தெலுங்கு மசாலாப்பட ரசிகர்களை கவர்வதில் ஆச்சர்யமேயில்லை .

வழக்கமாக வரையும் நம் லயன் காமிக்ஸ் ஆஸ்தான ஓவியர் வரைந்த இந்த இதழ் அட்டையில் ஒரு வித்தியாசம் இருப்பதை நீங்கள் காணலாம். அது என்ன என்பதை நாளை மறுநாள் இந்த புத்தகத்தின் இரண்டாம் பாகத்திற்கான பதிவில் கூறுகிறேன். அதுவரையில் வெயிட் செய்யுங்கள். வெயிட் செய்ய முடியாதவர்கள் அது என்ன வித்தியாசம் என்று பின்னூட்டமாக கூறுங்கள்.

எப்படி ரத்னா கஃபேயில் உள்ளே நுழைந்தவுடன் ஆட்டோமேட்டிக்காக சாம்பார் வடை ஆர்டர் செய்கிறோமோ, அதைப்போலவே நம்முடைய காமிக்ஸ் இதழ்கள் வாங்கியவுடன் முதலில் மேய்வது நம்முடைய எடிட்டரின் எண்ணங்களையே. இந்த விஷயத்தை நான் என்னுடைய வலைத்தளம் ஆரம்பித்த நாளில் இருந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். இன்னமும் சொல்வேன். முடிந்த அளவிற்கு எடிட்டர் இன்னனும் சில பக்கங்களை ஒதுக்கி எழுதலாம். சில விஷயங்களில் மட்டும் போதும் என்பதே கிடையாதே?

 

Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Editorial Page 03 & 04
Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Editorial Page 03 & 04

Alain Dodier

கதாசிரியர் அலைன் டோடியர்:  55 வருடங்களுக்கு முன்பாக ஃபிரான்சில் இருக்கும் டன்கிர்க் என்னும் ஊரில் மே இரண்டாம் தேதி பிறந்த அலைன் டோடியர்,நம்ம ஊர் மகாபாரதத்தில் வரும் ஏகலைவன் போல.அதாவது முறைப்படி ஒரு குருநாதரிடமோ, அல்லது ஒரு பயிற்சி பள்ளியிலோ கற்றுக்கொள்ளாமல், தானே ஒரு ஸ்டைலை உருவாக்கி, அதனை பின்தொடர்ந்து அப்படியே ஓவியங்களை வரைய ஆரம்பித்தார்.

பதின்ம வயதுகளில் மேலும் மும்முரமாக வரைய ஆரம்பித்து பதினெட்டாவது வயதில் முதன்Pierre Makyo முதலாக ஒரு சிறு இதழில் ( Falatoff என்கிற ஒரு fanzine) முதல் காமிக்ஸை பதிப்பில் கண்டார். அதன் பின்னர் உலகப்புகழ் பெற்ற ஸ்பிரோ இதழில் சிறு,சிறு பகுதியில் இவருடைய ஓவியங்கள் பிரிண்ட் ஆக ஆரம்பித்தன. ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? விடா முயற்சி, விஸ்வரூப வெற்றி (நன்றி:சந்தானம் இன் பாஸ் என்கிற பாஸ்கரன்) என்பதை நிரூபிக்கும் வகையில் ஸ்பெஷல் ஏஜென்ட் ஜநோடஸ் என்கிற ஒரு துப்பறியும் காமிக்ஸ் கதையை 1977 ஆம் ஆண்டு Pistil என்கிற இதழில் ஆரம்பித்து,இரண்டு ஆண்டுகள் அந்த தொடரை வெற்றிகரமாகவும் கொண்டு சென்றார். அதன் பின்னர் டின்டின், ஜின் போன்ற புகழ்பெற்ற பிரெஞ்சு நாட்டு பத்திரிக்கைகளில் இவர் ரெகுலர் ஆக வரைய ஆரம்பித்தார்.

Dodier's Original Comic Art from Jerome K Jerome Bloche Series

ஒரு சீரான வேகத்தில் பேசஞ்சர் வண்டி போல சென்றுக்கொண்டு இருந்த டோடியரின் வாழ்க்கை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரெஸ் ஆக உருமாறியது எப்போதென்றால் எண்பதின் அந்திம காலத்தில் நடந்த ஒரு மழைக்கால மாலைநேரத்து சந்திப்பில் தான். . கவிதைத்தனத்தை கட் செய்து விட்டு நேரிடையாக சொல்வதென்றால், 1980ஆம் ஆண்டுதான் மெர்கிரெடி (புதன்கிழமை?) என்கிற ஒரு பத்திரிக்கையில் பியர்ரே மாக்யோ'வை சந்திக்கிறார் நம்ம டோடியர். சம வயதுக்காரர்கள் என்பதைத்தவிர, ஒரே ஊர்க்காரர்கள் என்பதாலும் இவர்களுக்கிடையே ஒரு ஆழ்ந்த நட்பு உருவாயிற்று. இருவரும் இணைந்து (கதை மாக்யோ, ஓவியங்கள் டோடியர்) Gully என்கிற ஒரு வரலாற்று நகைச்சுவை தொடரை ஆரம்பித்தனர்.  இந்த கதை எவ்வளவு வரவேற்ப்பு பெற்றது என்றால், இரண்டு ஆண்டுகள் கழித்து மெர்கிரெடி இதழ் நிறுத்தப்பட்டபோதும்கூட ஸ்பிரோ இதழில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வெளிவந்தது. இந்த தொடர் வந்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஜோடி நம்ம சச்சின்-சவுரவ் கங்குலி போல ஒரு திறமையான,வெற்றிக் கூட்டணியாக தங்களை நிலை நிறுத்திக்கொண்டனர்.

Dodier's Original Comic Art from Jerome K Jerome Bloche1982 ஆம் ஆண்டு, இந்த ஜோடி உருவாகிய ஹீரோதான் நம்ம முத்து காமிக்ஸின் இந்த இதழின் நாயகன் ஜெரோம் கே ஜெரோம் புளூச். முதல் கதையை Serge Le Tendre உடன் எழுதி வெளியிட்டனர். இரண்டாவது கதையிலும் இதே மூவர் கூட்டணி தொடர்ந்தது. ஆனால், மூன்றாவது கதையை மாக்யோ எழுதி, டோடியர் ஓவியங்களை வரைந்தார். ஐந்தாவது கதையிலும் இதே இருவர் அணி இணைந்து செயல்பட்டது. பல கதைகளில் தனித்தனியே செயல்பட வேண்டிய கட்டாயம் உருவானதால், நான்காவது கதையில் ஒன் மேன் ஆர்மி ஆக கதை, அமைப்பு, ஓவியங்கள் என்று டோடியரே தனித்து நின்று சுயேச்சையாக ஜெயித்தார். அந்த வெற்றியே பின்னர் (இது நாள் வரைக்கும்) தொடர்கிறது.

மகள் கேரோலைன் தன்னுடைய 44வது வயதில் பிறந்ததால், மகள் மீது அளவற்ற அன்பு செலுத்தும் டோடியர், தன்னுடைய மகளையும் ஓரிரு கதைகளில் ஒரு பாத்திரமாகவே (Fauve cage) உலவ விட்டிருக்கிறார். 2010ல் Angoulemeல் நடந்த காமிக்ஸ் பெருவிழாவில் நம் ஹீரோ ஜெரோம் கதாபாத்திரத்திற்காக இவருக்கு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Story Page 05 & 06
Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Story Page 05 & 06

டிடெக்டிவ் ஜெரோம் - ஒரு அறிமுகம்: டின் டின் இதழில் Leopold and Capucine என்கிற கதைக்கான ஓவியங்களை வரையும்போதேJerome in a leisurely Pose ஒரு காமெடியான இன்ஸ்பெக்டர் கதைதொடரை மனதில் பதித்துக்கொண்டார் டோடியர். அந்த ஹீரோ நம்ம ஜேம்ஸ் பான்ட் போல ஒரு அடிதடி ஆக்ஷன் ஹீரோவோ, அல்லது ஷெர்லக் ஹோம்ஸ் போன்ற ஒரு அதிபுத்திசாலி ஆசாமியோ கிடையாது. உதாரனத்திற்க்கு சொல்வதென்றால் நம்ம தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் சுபா கதைகளில் வருவாரே ஒரு டிடெக்டிவ் செல்வா, அவரைப் போன்ற ஒரு ஆள்தான் நம்ம ஹீரோ ஜெரோம்.

சரி, ஒரு க்ளம்சியான துப்பறியும் ஹீரோவை அறிமுகம் செய்வது என்று முடிவெடுத்தாயிற்று. அடுத்தது என்ன? பெயர் சூட்டு விழா தான். இவருடைய பெயருக்கு பின்னால் இருவர் இருக்கின்றனர். முதல் பகுதி புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஜெரோம் கே ஜெரோம் மற்றும் இரண்டாம் பகுதி ஓவியர் ஹெரோநிமஸ் போஸ்ச். இந்த இருவரின் பெயரையும் ஒருங்கிணைத்து உருவானவரே நம்ம டிடெக்டிவ் ஜெரோம். இந்த கஷ்டமான பெயரை எல்லாம் சொல்லி நம்மை மேலும் கஷ்டப் படுத்தாமல் ரொம்பவும் தெளிவாக நம்ம எடிட்டர் டோனி ஜெரோம் என்று நாமகரணம் சூட்டிவிட்டார்.

Jerome with his cycleபாரிஸ் நகரில் Lamarck Caulaincourt ( line 12) இரெயில் நிலையம் அருகில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் ஜெரோம், எப்போதுமே ஒரு ஓவர் கோட் மற்றும் தொப்பி அணிந்தே காணப்படுவார். லைசென்ஸ் தேவையில்லை என்பதால் சைக்கிள்தான் இவரது பஞ்சகல்யாணி. அந்த பஞ்சகல்யாணியை இவர் எப்போதும் பூட்டியே வைப்பார். நம்ம கிரேசி மோகன் கதைகளில் வருவதைப்போல அந்த சைக்கிளை விட இவர் போட்டிருக்கும் பூட்டுகளுக்கே மதிப்பு அதிகமாக இருக்கும். லைம் ஜூசை (தண்ணீர் மற்றும் சர்க்கரை இல்லாமல்) விரும்பி சாப்பிடும் ஜெரோம், கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் மூலம் துப்பறிவது எப்படி என்று படித்தவர். கணினி துறையில் இவர் எந்த அளவுக்கு வல்லுநர் என்றால் டைம் மெஷினில் பலநூறு ஆண்டுகள் முன்வந்த ஒரு காட்டுவாசியே இவரைவிட தெளிவாக கம்ப்யூட்டரை பயன்படுத்துவார்.

இவருக்கு துணையாக பல கதைகளில் துப்பறிவது இவரது காதலியாகிய பப்பெத். இவர் Air France விமான நிறுவனத்தில் ஒரு Air-Hostess ஆக பணி புரிபவர். உயிருக்குயிராக ஜெரோமை காதலிக்கும் இவர், ஜெரோம் வசிக்கும் அதே பாரிஸ் நகரில் தான் வசிக்கிறார். இதைதவிர (இந்த கதையில்) வரும் மற்றுமொரு ரெகுலர் கேரக்டர் ரோசி (ஆண்ட்டி). தபால்காரர் Reneயுடன் Going-Steady ஆக இருக்கும் இவர், ஜெரோம் வசிக்கும் அடுக்குமாடியின் Care-Taker ஆவார்.

Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Story Page 96 & 97
Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Story Page 96 & 97

சிகப்புக் கன்னி மர்மம்: இதைவிட பிரம்மாதமாக ஒரு கதையை ஆரம்பிக்க முடியுமா என்று தெரியவில்லை. மழைபெய்த ஒரு பாரிஸ் இரவின் கடைசியில் ஒரு வீட்டின் கதவை இரண்டு போலீஸ்காரர்கள் தட்டுகின்றனர். உள்ளே நம்ம ஹீரோ போதை கலைந்து "லைட்" ஆக ஒரு கண்ணை திறந்து பார்க்கிறார். அவர் அருகே அந்த வீட்டின் எஜமானி ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். துப்பாக்கி (நம்ம இளைய தளபதி விஜய் படம் இல்லீங்கோவ்) தோட்டா துளைத்து,இரத்தம் இன்னமும் வழிந்தோடிக்கொண்டு இருக்கையில் அதைவிட அதிர்ச்சியான மற்றுமொரு திருப்பமாக நம்ம ஹீரோ கையில் அந்த தோட்டாவை வெளியே துப்பிய துப்பாக்கி. ஒருவேளை நாமளே போதை அதிகமாகி சுட்டிருப்போமோ என்றுகூட ஒரு கட்டத்தில் யோசிக்கும் அளவிற்கு ஹீரோ தெளிவானவர்.

போலிஸ் இடமிருந்து தப்பிக்கும் வேளையில் ஃ ப்ளாஷ் பேக் யுத்தியில் வேகமாக,தெளிவாக சொல்லப்பட்டிருக்கும் இந்த கதை, ஒரு சீரான வேகத்திலேயே பிரயாணிக்கிறது. சில இடங்களில் அட என்று வியக்கவைக்கும் அளவிற்கு சில திரைக்கதை யுத்திகள் இருந்தாலும், பல இடங்களில் சுலபமாக யூகிக்கவும் வைக்கிறது இந்த கதையின் போக்கு. இரண்டாம் பாகத்தையும் ஒருங்கே வைத்து பார்த்தல் தான் இதன் முழு வடிவம் வெற்றியா அல்லது வற்றி வாய்ப்பை இழந்ததா என்று தெரியும். அதைப்பற்றி நாளை மறுநாள் பதிவில் பார்ப்போம்.

Jerome K Jerome Bloche Book No 15: La Comtesse (The Countess) Cover–Dupuis May 2001 – Story & Artwork by Alain Dodier Jerome K Jerome Bloche Book No 15: La Comtesse (The Countess) 1st Page–Dupuis May 2001 – Story & Artwork by Alain Dodier
Jerome K Jerome Bloche 15 La Comtesse Cover Jerome K Jerome Bloche 15 La Comtesse 1st Page

இதுவரையில் மொத்தம் 21 புத்தகங்களாக வந்துள்ள இந்த கதைத் தொடரில், இந்த இரண்டு கதைகளைத் தவிர மற்ற அனைத்துமே தனிப்பட்ட, ஒரே புத்தகமாக 48 பக்கங்களில் வந்த கதைகளே. முழு வண்ணத்தில் சில பல பக்கங்களை பார்க்கும்போது, எடிட்டர் இதனை முழு வண்ணத்தில் வெளியிட்டு இருந்தால் என்ன என்ற எண்ணம் வராமலில்லை. அதே சமயம் இந்த கதை முடிவான தருணம் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு என்பதையும் மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அடுத்த கதைகளை எடிட்டர் வெளியிடுவாறேயானால், கண்டிப்பாக முழு வண்ணத்தில் (லார்கோ வின்ச் போல) வெளியிட்டால் கம்ப ராமாயணத்தில் சொன்னது போல அழகுக்கு அழகு சேர்த்தது போலிருக்கும். ஆனால் அதே சமயம் தற்போதைய கதைகளை வெளியிடாமல் ஆரம்பத்தில் வந்த (முதல் பனிரெண்டு கதைகளுக்குள்) ஒன்றினை அடுத்த கதையாக வெளியிடுவது சாலச்சிறந்தது.

Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Advt Page 98
Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Advt Page 98

நாளைக்கு ஒரு காமிக் கட்ஸ் - காமிக்ஸ் செய்திகள் கொண்ட தொகுப்பு பதிவு வெளிவரும். அதனை தொடர்ந்து நாளை மறுநாள் இந்த கதையின் இரண்டாவது மற்றும் இறுதிப் பகுதியாகிய தற்செயலாய் ஒரு தற்கொலை புத்தகத்தின் விமர்சனப் பதிவு வெளியாகும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Saturday, June 16, 2012

11 Comic Cuts 42–News 42: சிறுவர் இலக்கிய சிந்தனைசிற்பி திரு வாண்டுமாமா அவர்களின் பேட்டி + ஓவியர் மாயா அவர்களின் நேர்காணல்

காமிரேட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம். கடந்த இரண்டு வாரங்களாகவே ஏகப்பட்ட புத்தகங்கள்,பரிசுகள் என்று மிகவும் குதூகலமாக கழிந்தது. இணையதள பக்கம் வரமுடியாதது தான் ஒரே பிரச்சினை. அதனை சரி கட்டும் விதத்தில் இன்று முதல் ரெகுலர் ஆக பதிவிட உத்தேசித்து உள்ளேன். நாட்டிற்கு இதனால் நன்மை எதுவும் பயக்கப்போவதில்லை என்றாலும், இன்றுமுதல் பதிவுகள் தொடரும்.

மிக நீண்ட நாட்களாகவே மெயின் ஸ்ட்ரீம் மீடியாவில் வாண்டுமாமா அவர்களைப்பற்றி எந்தவிதமான கட்டுரைகளும் வந்ததில்லை என்கிற குறையை போக்கும் விதமாக இந்த வார ஆனந்த விகடனில் அற்புதமான ஒரு பேட்டி வந்துள்ளது. பேட்டியை சிறப்பாக, பொறுமையாக முடித்த நண்பர்கள் தமிழ் மகன், திரு சமஸ் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு தமிழ் காமிக்ஸ் உலகின் சார்பில் வாழ்த்துக்கள்.

Anandha Vikatan Tamil Weekly Issue Dated 20062012 Page No 64-65-66 Vandumama Interview
Anandha Vikatan Tamil Weekly Issue Dated 20062012 Page No 64 Vandumama Interview
Anandha Vikatan Tamil Weekly Issue Dated 20062012 Page No 65 Vandumama Interview
Anandha Vikatan Tamil Weekly Issue Dated 20062012 Page No 66 Vandumama Interview

கடந்த இரண்டு வருடங்களாகவே அமர் சித்திரக் கதைகள் ஒரு புதுப்பொலிவுடன் வருவதை கண்கூடாக காண முடிந்தது. அதன் ஒரு தொடர்ச்சியாகவே இப்போது தஞ்சாவூரை பற்றிய இந்த காமிக்ஸ் புத்தகம். புதிய பாணி சித்திர வகையுடன் வந்துள்ள இந்த புத்தகத்தை காமிக்ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும்.

 

India Today Dated 13062012 Page No 51 Kadhambam Section ACK Latest Issue News

India Today Dated 13062012 Page No 51 Kadhambam Section ACK Latest Issue News

வாண்டுமாமாவிற்க்கே இந்த நிலை என்றால், மற்றவர்களை பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் அந்த குறையை போக்கும் விதமாக ஓவியர் மாயா அவர்களின் அற்புதமான நேர்காணல் ஒன்றினை சூரியகதிர் பத்திரிக்கையில் தொகுத்து வெளியிட்டு இருந்தனர். பேட்டி எடுத்த நண்பர் திரு ஸ்ரீஹரி அவர்களுக்கும், பத்திரிக்கையாளர் திரு பாரதி ராஜா அவர்களுக்கும் நன்றிகள் பல.

 

Artist Maya Interview in SuryaKathir April 2012 Page No 50 - 51 - 52
Artist Maya Interview in SuryaKathir April 2012 Page No 50
Artist Maya Interview in SuryaKathir April 2012 Page No 51
Artist Maya Interview in SuryaKathir April 2012 Page No 52

ஒரு மாறுதலுக்காக எவர் கிரீன் ஸ்டார் திரு செல்லம் அவர்களின் கை வண்ணத்தில் எண்பதுகளில் குங்குமம் இதழில் வந்த ஒரு சில நகைச்சுவை துணுக்குகள்.

 

Chellam

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Related Posts with Thumbnails