Pages

Sunday, April 08, 2012

17 சென்னையில் லயன் & முத்து காமிக்ஸ் கிடைக்குமிடம்: டிஸ்கவரி புக் பேலஸ்

காமிரேட்ஸ்,
சமீப காலமாக தமிழ் காமிக்ஸ் உலகில் நடைபெற்று வரும் நல்ல மாற்றங்கள் வரப்போகும் காலங்களை காமிக்ஸ் உலகின் வசந்த காலமாக மற்றப்போவதாகவே தெரிகிறது. சந்தா கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் அடிக்கடி வீடு மாறிக்கொண்டு இருப்பவர்கள், வாடகை வீட்டில் இருப்பவர்கள், சந்தா கட்ட முடியாதவர்கள் என்று பலரும் இருக்கின்றனர். இவர்களுக்கு சென்னையில் நம்முடைய காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்காதது ஒரு பெரும் குறையாகவே இருந்தது. அந்த குறையை நிவர்த்தி செய்வதைப்போல சென்னையில் இனிமேல் அபீஷியலாகவே நமது லயன். முத்து மற்றும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்கள் இந்த டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக சாலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

Discovery Book Palace West KK nagar Chennai Photo 01 MD Mr Vediyappanடிஸ்கவரி புக் பேலஸ்: இந்த நிறுவனம் நண்பர் திரு வேடியப்பன் அவர்களால் முழுக்க முழுக்க புத்தக விற்பனையை மையமாக வைத்து கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள் துவங்கப்பட்டது. சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான கே.கே. நகர் மேற்கில் (K K Nagar West. Near puthuchery guest house) அமைந்துள்ளது. சென்னையின் எந்த இட்த்திலிருந்தும் போக்குவரத்து சிரமமில்லாமல் இங்கு வரலாம்.

இதுவரை சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் புத்தகங்களை தொகுத்து விற்பனை செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.. தொடர்ந்து தமிழில் கிடைக்கக் கூடிய அனைத்து புத்தகங்களையும் டிஸ்கவரி என்ற ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து அதை தமிழ் கூறு நல்லுலகம் எங்கும் கொண்டு சேர்க்கும் விதமாக Online விற்பனை சேவையும் துவங்கப் பட்டுள்ளது.ஓராண்டு முடியும் நிலையில் டிஸ்கவரி புக் பேலஸ்-ல் இதுவரை 35 புத்தக வெளியீட்டு விழாவும், ஐந்து புத்தக விமர்சன கூட்டங்களும் நடைபெற்றுள்ளது. தமிழில்  வளர்ந்து வரும் எழுத்தாளர்களின்  முக்கிய சந்திப்பு முனையாக டிஸ்கவரி புக் பேலஸ் விளங்குகிறது.

Discovery Book Palace West KK nagar Chennai Photo 04 Outside View Discovery Book Palace West KK nagar Chennai Photo 05 Outside View
Discovery Book Palace West KK nagar Chennai Photo 04 Outside View Discovery Book Palace West KK nagar Chennai Photo 05 Outside View


இப்படி தமிழ் இலக்கிய மற்றும் இலக்கியம் சாராத இலக்கிய புத்தகங்களையும் விற்பனை செய்து வரும் டிஸ்கவரி புக் பேலஸ் இந்த மாதம் முதல் சிவகாசியில் இருந்து வரும் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தினரின் லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் மற்றும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்களை விற்பனை செய்யும் விற்பனையகமாகவும் புது உருப்பெற்றுள்ளது.பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தினரின் லேட்டஸ்ட் சூப்பர்ஹிட் வெளியீடுகள் இங்கே விற்பனைக்கு இருப்பதை நீங்கள் காணலாம்.

Discovery Book Palace West KK Nagar Chennai Photo 03 Comics On Display Discovery Book Palace West KK Nagar Chennai Photo 02 On Display
Discovery Book Palace West KK nagar Chennai Photo 03 Comics Books On Display Discovery Book Palace West KK nagar Chennai Photo 02 Comics Books On Display

இது தவிர இனிமேல் விற்பனைக்கு வரவிருக்கும் புத்தம் புதிய காமிக்ஸ் இதழ்கள்:


ஏப்ரல் மாதம்

மே மாதம்

ஜூன் மாதம்

டிஸ்கவரி புக் பேலஸ் - முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள்: சென்னைக்கு அருகாமையில் இருக்கும் வாசகர்கள் இங்கே வந்து நேரிடையாக புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம்.டிஸ்கவரி புக் பேலஸ் முகவரி:

டிஸ்கவரி புக் பேலஸ்,
எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர்,
சென்னை - 600078.  தமிழ்நாடு. இந்தியா
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)

தொலைபேசி எண்: 044 – 6515 7525

மின்னஞ்சல் முகவரி: discoverybookpalace@gmail.com

டிஸ்கவரி புத்தக நிலையம் செல்ல மேப்: A = Discovery Book Palace

Discovery Book Palace West KK nagar Chennai Map

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Saturday, April 07, 2012

15 வாண்டுமாமா பிறந்த நாள் சிறப்பு பதிவு 01: தேச தேசக் கதைகள்

காமிரேட்ஸ்,

இந்த மாதம் 21ஆம் தேதி நம்முடைய அன்பிற்குரிய சிறுவர் இலக்கிய எழுத்தாளர் திரு வாண்டுமாமா அவர்களின் பிறந்த நாள் வருகின்றது. அதனை கொண்டாடும் வகையில் இன்றுமுதல் தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில் அவருடைய (இதுவரை இங்கே விமர்சனம் எழுதாத) பத்து சிறந்த புத்தகங்களை பற்றிய பதிவுகள் இடம்பெறும். இவை எந்தவிதமான ஒரு வரிசைக்கிரமத்திலும் இல்லாமல் எனக்கு பிடித்த பத்து புத்தகங்கள் என்றே வரிசைப்படுத்தப்படும். இவற்றில் சில இன்னும் விற்பனைக்கு கிடைக்கலாம், சில கிடைக்காமல் போகலாம்.

என்னால் முடிந்தவரை தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் புத்தகங்களை மட்டுமே எழுத முயல்கிறேன் (ஆனால் இந்த புத்தகம் மட்டும் ஒரு சிறப்பிற்குரிய ஒன்று என்பதால் இது இப்போதைக்கு விற்பனையில் இல்லை). அப்போதுதான் இந்த பதிவினை படிக்கும் வாசகர்கள் அந்த புத்தகங்களை மீண்டும் வாங்க எதுவாக இருக்கும். என்ன வாசகர்களே,சாகசங்களும், விந்தைகளும் நிறைந்த ஒரு நாஸ்டால்ஜியா பயணத்திற்கு நீங்கள் தயாரா?

தேச தேசக் கதைகள் ஒரு சிறிய முன்குறிப்பு:

தற்போதைய இன்டர்நெட் உலகில் அனைத்தையுமே கூகிளாண்டவர் துணையுடன் கண்டறிய முடியும். இங்கிலாந்தில் ஜனவரி மாத மாலையில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த நாங்கள் இந்த வாரம் முழுவதும் திட்டமிட்டுக்கொண்டு இருந்தோம். திடீரென்று அப்போது அங்கே பனிமூட்டம் அதிகமாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டு ஒரு கூகுள் தேடுதலை நிகழ்த்தினால்.அங்கே ஜனவரியில் சாயந்திரம் ஆறு மணிக்கெல்லாம் உணவு விடுதிகளை தவிர மற்ற கடைகள் எல்லாமுமே மூடப்பட்டுவிடும் என்ற விஷயம் தெரிய வந்தது. இந்த விஷயம் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்றால் இதற்காக இரண்டு மூன்று பேருக்கு போன் செய்து (அதாவது ட்ரன்க் கால் புக் செய்து) கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். அப்போதுகூட போதுமான அளவுக்கு தகவல் இராது. ஆனால் தகவல் தொழில்நுட்பம் இவ்வளவாக முன்னேறியிராத அந்த கால கட்டத்தில் உலகில் இருக்கும் மற்ற நாடுகளைப்பற்றிஎல்லாம் மதியத்தர வர்க்கத்தினருக்கு ஒரு மூடுபனி போலவே அறிந்தும் அறியாமலும் விஷயங்கள் தெரிந்திருக்கும். அதிலும் பள்ளி மாணவர்களுக்கு சொல்லவே வேண்டாம்.

இத்தகைய சூழலில், உலகின் மற்ற நாடுகளைப்பற்றியும் அங்கிருக்கும் கலாச்சாரங்களையும் தெரிந்து கொள்வதர்க்கு பள்ளி புத்தகங்களை விட போரடிக்கும் விஷயங்கள் வேறு இருக்காது. ஆனால் அதே விஷயங்களை அலுக்கவே அலுக்காமல் இன்னும் கொஞ்சம் இருக்காதா என்று ஏங்கும் அளவிற்கு சொல்லும் மந்திர விதையை தெரிந்தவர் திரு வாண்டு மாமா அவர்கள். உலக நாடுகளைப்பற்றியும், அங்கிருக்கும் நாட்டுபுற கதைகளை  பற்றியும் இவர் எழுதிய தேச தேசக்கதைகள் வரிசைதொடர் மிகவும் பிரபலமானது. இந்த வரிசையில் மொத்தம் 56 நாட்டுப்புர கதைகளை எழுதியுள்ளார் திரு வாண்டு மாமா அவர்கள். அந்த கதைகளைப் பற்றியும், எவ்வாறு 56 கதைகள் உருவானது என்பதைப் பற்றியும் அவரே எழுதக் கேட்போம் படிப்போம்.

McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Editorial Page

சிறுவர்களுக்கான ஆண்டாக அறிவிக்கப்பட்ட 1979 - 80ஆம் ஆண்டில் இந்த கதைகள் தொகுக்கப்பட்டு மெக்மிலன் (இந்தியா) நிறுவனத்தால் வெளியிடப்பட்டன. இந்த நிறுவனம் வெளியிட்ட வாண்டுமாமா புத்தக வரிசை இது ஒன்றாகத்தானிருக்க வேண்டும். மெக்மிலன் சிறுவர் வெளியீடுகள் ஆங்கிலத்தில் வெளியிட நாம் படித்திருக்கிறோம். ஆனால் தமிழில், அதுவும் வாண்டுமாமா அவர்கள் கைவரிசையில் இதுவே முதல் முறையாக இருக்க வேண்டும்.

McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Cover Front McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Cover Back McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Title Page
McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Cover Front McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Cover Back McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Title Page

ஓவியர் திலகம் மாருதி அவர்களின் கைவண்ணத்தில் அற்புதமான வண்ணக் கலவையுடன் வந்திருக்கும் இந்த அட்டைப்படங்களுக்காகவே இந்த புத்தகத்தை வாங்கலாம். பின்னர் இதே சித்திரங்கள் வாண்டுமாமா அவர்களின் பிறிதொரு புத்தகத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்பது வேறொரு விஷயம்.

ஒவ்வொரு கதையும் ஆரம்பிக்கும்போது அந்த நாட்டைப்பற்றி ஒரு பக்க குறிப்புடனே ஆரம்பிக்கிறது. மேலும் அந்த நாட்டின் விவரப்படம் (மேப்) இல்லாமலே அந்த நாட்டின் புவியியலை புரிந்துகொள்ள உதவுகிறது. இந்த புத்தகத்தின் முதல் கதை இங்கிலாந்து நாட்டினைப்பற்றியது.

McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Index Page McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Story 1 Intro Page
McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Index Page McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Story 1 Intro Page

இந்த கதைகளின் சிறப்பைத் தெரிந்து கொள்ள முதல் கதையை மட்டும் முழுமையாக பிரசுரிக்கிறேன். மற்ற கதைகளை படிக்க வேண்டுமெனி தேடிப்பிடித்து இந்த புத்தகத்தை வாங்க முயலுங்கள் (இல்லை எனில் என்னைப்போலவே ஒரு இணைய தளத்தை ஆரம்பியுங்கள், தஞ்சாவூருக்கு அருகில் இருந்து ஒரு வாசகர் இந்த புத்தகத்தை உங்களுக்கு பரிசாக அளிப்பார்).

McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Story 1
McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Story 1 1st Page
McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Story 1 2nd Page
McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Story 1 3rd Page
McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Story 1 4th Page
McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Story 1 5th Page

அற்புதமான இந்த கதையை படித்ததும் மற்ற கதைகளை படிக்க ஆவலாக இருக்கிறதா? உங்கள் தேடலை உடனே துவங்குங்கள். இல்லையெனில் மற்ற வாண்டுமாமா கதைகளைப்பற்றி படிக்க காத்திருங்கள். அடுத்த பதிவில் இப்போது விற்பனைக்கு கிடைக்கும் ஒரு வாண்டுமாமா எழுதிய துப்பறியும் நாவலைப்பற்றி எழுதுகிறேன். மூன்று நாட்கள் பொறுத்திருங்கள்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Thursday, April 05, 2012

13 TCU Presents. . . 07: New Comics Intro ஜென் வெளிச்சம் - கண்ணதாசன் பதிப்பகம்

காமிரேட்ஸ்,
இந்த ஏழாம் அறிவு படம் வந்தவுடன் எல்லோரும் போதி தர்மரைப்பற்றி பேசிக்கொண்டு இருந்தது நினைவிருக்கலாம் (அதற்க்கு பிறகு தேனாண்டாள் ஃபில்ம்ஸ் ஒரு டப்பிங் படத்தை வேண்டுமென்றே போதி தர்மர் என்று பெயரிட்டு கல்லா கட்டியதும் நினைவிருக்கலாம்). அந்த போதி தர்மரைப்பற்றிய ஒரு முன் குறிப்போடு இந்த ஜென் வெளிச்சம் என்கிற சித்திர நாவல் துவங்குகிறது. அதற்காக இந்த புத்தக வெளியீட்டை பதிப்பகத்தாரின் ஒரு விளம்பர யுத்தி என்று எண்ணிவிட வேண்டாம். அந்த படம் வந்து இரண்டரை மாதங்களுக்கு பின்னரே இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.

இன்றைய தலைமுறையினர் பலருக்கும் ஜென் என்றால் என்னமோ அது ஒரு விதமான யோகா என்றே ஒரு நினைப்பிருக்கிறது. ஆனால் ஜென் என்பது என்ன? அதன் கோட்பாடுகள் என்ன என்பதைப்பற்றி பலருக்கும் உண்மையான புரிதல் இல்லை. இந்த குறையை போக்க பல புத்தகங்கள் இருந்தாலும், காமிக்ஸ் (சித்திரக்கதை) வடிவில் முதல் முறையாக ஜென் வெளிச்சம் என்று இந்த புத்தகம் கண்ணதாசன் பதிப்பகத்தில் இருந்து வந்துள்ளது.

ஜென் என்றால் என்னமோ பெரிய கம்ப சூத்திரம் என்று நினைத்து விட வேண்டாம். மிகவும் எளிமையான முறையில் ஒரு அழகான கதை(கள்) வடிவில் ஜென்னை பற்றி ஒரு பக்கத்தில் ஒரு கோட்பாடு / விளக்கம் என்று விளக்கியுள்ளார்கள். முதலில் ஒரு சாம்பிளுக்காக இதனை படியுங்கள், பின்னர் இந்த புத்தகத்தை பற்றி அலசலாம்.

 

KannaDasan Pathippagam Zen Inspiration Translated Graphic Novel Zen Velicham Sample Page No 35
KannaDasan Pathippagam Zen Inspiration Translated Graphic Novel Sample Page No 35

என்ன, நான் சொன்னது தெளிவாகியதா? இத்துனை சுலபமாக ஒரு விஷயத்தை விளக்க சித்திரக்கதை முறையே சரி என்பதை மறுபடியும் ஒரு முறை குன்றிலிட்ட விளக்காக நிரூபித்துள்ளது ஜென் வெளிச்சம் சித்திர நாவல். அதே சமயம் பல மனோதத்துவ புரிதல்களை எளிதாக்குகிறது இந்த புத்தகம்.

KannaDasan Pathippagam Zen Inspiration Translated Zen Velicham Graphic Novel Sample Page No 36
KannaDasan Pathippagam Zen Inspiration Translated Graphic Novel Sample Page No 36

இப்படி அன்றாட வாழ்வியலில் பல நுட்பமான விஷயங்களை ஜென் தத்துவங்களுடன் இணைத்து அட்டகாசமாக ஓவியத் தரத்துடன் இருக்கும் இந்த புத்தகத்தினை தமிழில் வெளிக்கொணர்ந்த திரு காந்தி கண்ணதாசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த புத்தகத்தின் அட்டைப்படங்களும், முதல் பக்கமும். இந்த ஸ்கான் பக்கங்களை கிளிக் செய்தால் அவை பெரிதாகும்.

KannaDasan Pathippagam Zen Inspiration Translated Graphic Novel Cover Front KannaDasan Pathippagam Zen Inspiration Translated Graphic Novel Cover Back KannaDasan Pathippagam Zen Inspiration Translated Graphic Novel Title Page
KannaDasan Pathippagam Zen Inspiration Translated Graphic Novel Cover Front KannaDasan Pathippagam Zen Inspiration Translated Graphic Novel Cover Back KannaDasan Pathippagam Zen Inspiration Translated Graphic Novel Title Page

வழக்கம் போல இன்னமும் ஏராளமான ஸ்கான்கள் இருந்தாலும்கூட அவற்றை எல்லாம் இங்கே வெளியிடப்போவதில்லை. மாறாக, இந்த புத்தகத்தை பற்றி சிறிது பேசுவோம் படிப்போம்.

     
KannaDasan Pathippagam Zen Inspiration Translated Graphic Novel Artist Intro KannaDasan Pathippagam Zen Inspiration Translated Graphic Novel Editorial Page KannaDasan Pathippagam Zen Inspiration Translated Graphic Novel Reading Guide

 
ஜென் என்றாலே ஆறு கத தூரம் ஓடும் என் நண்பர் இரவுக் கழுகு போன்றவர்கள் கூட இந்த புத்தகத்தின் மீது ஆர்வம் கொண்டு வாங்கி பத்திக்கொண்டு (ஜென் வெளிச்சத்தில் பத்திக்கிச்சு என்று எழுதினால் கோபித்து கொள்கிறார்கள்) ஆகையால் படித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் அது இந்த புத்தகத்தின் சித்திரத் தரத்திற்கும், மொழியாக்கத்திற்கும் கிடைத்த வெற்றியேயாகும் என்றால் மிகையன்று. இந்த புத்தகம் வெளியான போதே இதனைப்பற்றி நண்பர் அதிஷா என்னிடம் கூறியிருந்தார் (பின்னர் அவர் இதனைப்பற்றி புதிய தலைமுறை வார இதழில் எழுதி இருந்தார் என்பது வேறு கதை).

மிகவும் தெளிவான மொழி நடையில், ஆர்வத்தினை தூண்டும் சித்திரங்களுடன் அருமையான காகிதத் தரத்தில் வெளிவந்துள்ள இந்த புத்தகம், காமிக்ஸ் சாராத அணைத்து விதமான புத்தக ரசிகர்களும் ஒரு முறையேனும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். இந்த புத்தகத்தில் இருக்கும் பல கதைகளை பற்றி சக வலைப்பதிவர் ஒருவரிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். அவர் உடனடியாக இந்த புத்தகத்தை என்னிடம் இருந்து வாங்கிக்கொண்டார். அவர் என்ன சொன்னார் என்றால், ஜென் தத்துவங்களையும் மீறி, குழந்தைகளுக்கு சொல்ல அருமையான கதைகள் பல இருக்கிறது-ஆகவே எனக்கு இது வேண்டும் என்றார்.

சொன்னதோடில்லாமல் என்னிடமிருந்து அந்த புத்தகத்தையும் வாங்கிக்கொண்டு சென்றே விட்டார். நானும் வேறு வழியில்லாமல் இப்போது (நாளையோ, அதற்க்கு மறுநாளோ) மறுபடியும் இந்த புத்தகத்தை வாங்கவிருக்கிறேன். ஜென் கோட்பாடுகளை சித்திர வழியில் விளக்கும் புத்தகம்தானே என்று கருதிவிடாமல் இந்த புத்தகத்தினை ஒரு முறையேனும் படிக்க நண்பர்களுக்கு ஒரு அன்பு கோரிக்கை விடுக்கிறேன். இந்த புத்தகத்தை பற்றிய அதிக விவரங்களுக்கும், தமிழகத்தில் எங்கே இந்த புத்தகங்களை வாங்கலாம் எனபதிற்க்கும் கீழ்காணும் ஸ்கான் உபயோகமாயிருக்கும்.

KannaDasan Pathippagam Zen Inspiration Translated Graphic Novel Credits Page
KannaDasan Pathippagam Zen Inspiration Translated Graphic Novel Credits Page

நாவலைகுறித்து என்னுடைய கருத்துக்கள்: ஆரம்ப சில பக்கங்கள் ஏதோ வரலாற்று, ஆவண புத்தகம் படிப்பது போன்ற எண்ணத்தை உருவாக்கினாலும், அதற்க்கு பிறகு மிகவும் ரசிக்கத்தக்க வகையில் புத்தகத்தினை அமைத்திருக்கிறார்கள். இதற்காகவே இந்த புத்தக ஆசிரியரை பாராட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக ஓவியர். சமீபத்தில் இந்த அளவிற்கு என்னை ரசிக்க வைத்த புதிய ஓவியர் யாருமே இல்லை என்றே கூறலாம். ஒவ்வொரு சிறு கதையும், அதற்குண்டான கருத்துக்களும் அட்டகாசம். எனக்கு பிடித்த இரண்டு பக்கங்களை இங்கே பிரசுரித்துள்ளேன். இதனைப்போல நூற்றுக்கணக்கான பக்கங்கள் இருக்கின்றன. படித்து மகிழுங்கள்.

ஜென் வெளிச்சம் - காமிக்ஸ் வடிவில் ஒரு ஜென் கதம்பம்.

பின் குறிப்பு: இந்த மாதிரி பல புத்தகங்களை ஆங்கில மற்றும் பிற மொழிகளில் படித்து ரசித்து அவற்றை தமிழில் கொணர வேண்டும் என்ற ஆர்வத்தில் நமக்கெல்லாம் இந்த புத்தகங்களை பதிப்பித்துக்கொண்டு இருக்கும் திரு காந்தி கண்ணதாசன் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Related Posts with Thumbnails