டியர் காமிரேட்ஸ்,
சென்ற வாரம் முதல் துவங்கப்பட்ட இந்த காமிக்ஸ் டைம் பகுதி தனிப்பட்ட முறையில் கவனிக்கப்பட துவங்கியுள்ளது. அனைவருக்கும் நன்றி. குறிப்பாக நேரிலும், தொலைபேசி மூலமாகவும் வாழ்த்து சொன்ன அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், குறிப்பாக தஞ்சாவூரில் இருந்து என்னுடைய தொலைபேசி எண்ணை பலரிடமும் கேட்டு, முயற்சியில் மனம் தளராமல் நம்பரை பெற்று பின்னிரவுப் பொழுதில் பேசிய நண்பருக்கும் சிறப்பு நன்றி.
வாண்டு மாமாவின் வாண்டு தேசம் - Week 2: முதல் வாரத்தில் அறிமுகம் ஆன பாட்டில் பூதம் ஷெர்தில் தன்னுடைய அறிமுகத்தையும் அடையாளத்தையும் ஏற்படுத்திக்கொண்ட வாரம் இது. ஆகையால் கதையில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. ஆனால் கதாபாத்திரங்களின் அறிமுகம் கதைக்கு அவசியம் என்பது உங்களுக்கு தெரியாதது அல்லவே?
முதலில் பலே பாலுவிடம் அறிமுகம் ஆன ஷெர்தில், பின்னர் அவனுடைய பெற்றோர்களிடமும், பிறகு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடமும் அறிமுகம் ஆவதோடு இந்த வாரம் கழிந்தது. முதல் சாகசமாக பாலுவும் பூதமும் கடற்கரைக்கு செல்கிறார்கள். அவர்களின் அட்டகாசங்கள் வரும் வாரத்தில் ரசிக்கும்படியாக இருக்கும் என்று நம்புவோம்.
இந்த ஸ்கான்களை க்ளிக் செய்தால் அவை தனியாக பெரியதாக வேறொரு பக்கத்தில் ஒப்பன் ஆகும். தெளிவாக படிக்க இது உதவும். இனி கதைக்கு செல்லுங்கள்.
வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 008
வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 009
வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 010
வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 011
வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 012
வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 013
வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 014
தினத்தந்தி - கன்னித்தீவு தொடர்: கன்னித்தீவில் இருந்து வந்த மறையும் மாயத்தன்மை கொண்ட மந்திரவாதியிடம் இருந்து நாட்டையும், லைலாவையும் காப்பாற்றிய சிந்துபாத், அந்த நாட்டு இளவரசியின் திருமணத்தில் கலந்துகொண்டு பின்னர் அந்த நாட்டை விட்டு கன்னித்தீவை நோக்கி கிளம்புகிறார். இவரது சேவையில் மனம் மகிழ்ந்த அந்நாட்டு மன்னர், சிந்துபாத் பயணிக்க ஒரு கப்பலை அளிக்கிறார். கப்பலில் அந்நாட்டில் இருந்து கிளம்பும் சிந்துபாத், லைலாவிடம் கன்னித்தீவு நோக்கி பயணிப்பதை சொல்கிறார். அப்போது கேப்டன் (அட, இவரு வேற கேப்டனுங்க- அதாவது கப்பல் கேப்டன் / தலைவர்) வந்து எங்கே செல்ல வேண்டும் என்று கேட்கிறார்.
கன்னித்தீவு எங்கே இருக்கிறது என்று கப்பல் தலைவருக்கும் தெரியாமல் போக, சிந்துபாத் திகைக்கிறார். அப்போது லைலா கப்பலில் வரைபடம் (மேப்) இருக்கிறதா? என்று வினவ, தலைவரும் வரைபடத்தை லைலாவிடம் கொடுக்கிறார்.
இந்த ஸ்கான்களை க்ளிக் செய்தால் அவை தனியாக பெரியதாக வேறொரு பக்கத்தில் ஒப்பன் ஆகும். தெளிவாக படிக்க இது உதவும். இனி கதைக்கு செல்லுங்கள்.
சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,929
சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,930
சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,931
சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,932
சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,933
சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,934
சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,935
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.