Dear ComiRades,
லயன் காமிக்ஸ் எடிட்டர் திரு எஸ்.விஜயன் அவர்கள் தங்களுடைய சமீப பதிவுகளில் ரீபிரின்ட்டுகள் குறித்து எழுதி வருகிறார். அதில் (இந்த பதிவில்) காமிக்ஸ் கிளாசிக்ஸ் வரிசையில் வெறும் முத்து காமிக்ஸ் (+ ஸ்பைடர், ஆர்ச்சி) கதைகளை மட்டுமே ரீபிரின்ட் செய்யாமல் ஆரம்ப கால லயன்,மினி லயன், திகில் காமிக்ஸ் கதைகளையும் ரீபிரின்ட் செய்தால் என்ன? அப்படி செய்தால் வாசகர்களின் ரிபிரின்ட் லிஸ்ட் என்ன என்றும் எழுதி இருந்தார். அதற்க்கு பலத்த வரவேற்ப்பு. அப்போதே இந்த பதிவினை தயார் செய்து இருந்தாலும், நேரமின்மை காரணமாக இட இயலவில்லை. அடுத்த வாரமும் மும்பையிலேயே கழிக்க இருப்பதால், பதிவுகள் வருவது கேள்விக்குறியே.
என்னுடைய தாமதமான பதிவின் விளைவு: ஆசிரியரே முதல் ரீபிரின்ட் இதழ் பற்றிய விவரங்களையும் பதிவிட்டு விட்டார். முதல் ரீபிரின்ட்: என்னுடைய ரீபிரின்ட் லிஸ்ட்டில் மூன்றாவதாக இருந்த தலைவாங்கி குரங்கு (எடிட்டரின் பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்). இந்த ரீபிரின்ட் லிஸ்ட்டில் நுழையும் முன்னர் சில விளக்கங்கள்:
-
இந்த ரீபிரின்ட் லிஸ்ட் லயன் காமிக்ஸ், மினி லயன் + ஜூனியர் லயன், திகில் காமிக்ஸ், மற்றும் சார்ந்த காமிக்ஸ் என்று தனியாக வெளியிட ஆசை.
-
ஒவ்வொரு லிஸ்ட்டிலும் மொத்தம் பத்து கதை(கள்) இருக்கும்.
-
அவை எப்படி செலக்ட் ஆகியது என்று சின்னக்குறிப்புகள் பாயிண்ட்டுகளாக இருக்கும்.
-
லயன் காமிக்ஸ் வரிசையில் முதல் நூறு புத்தகங்கள் மட்டுமே பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன் பின்னர் வந்தவை கிட்டத்தட்ட (படிக்கவாவது) கிடைக்கும் என்பதால் இந்த முடிவு.
-
ஸ்பைடர், ஆர்ச்சி போன்ற டைஜெஸ்ட் கதைகளை ஏற்கனவே ரீபிரின்ட் செய்துக்கொண்டு இருப்பதால் அவற்றை விட்டுவிடலாம் (இன்னமும்கூட ஸ்பைடரின் இராட்சசக் குள்ளன், சைத்தான் விஞ்ஞானி, மரண ராகம் போன்ற கதைகளையும், நீதிக்காவலன் ஸ்பைடர் போன்ற கிளாசிக்குகளையும் வெளியிடாமல் இருக்கையில், அவற்றை பற்றி தனியாக எழுத வேண்டி இருப்பதாலும், இங்கே அவை -கவுண்டர் பாஷையில் சொல்வதானால்-அன் செலக்ட் செய்யப்படுகின்றன).
- சமீபத்திய புத்தக கண்காட்சி விற்பனையில் கூட எனக்கு மிகவும் பிடித்த மாடஸ்டி கதைகள் மந்தமாக விற்பனையானதால் மாடஸ்டி கதைகள் கூட இங்கே அன் செலக்ட் ஆகின்றன. குறிப்பாக சொல்வதென்றால் இரட்டைவேட்டையர் கதையாகிய மர்ம எதிரி புத்தகத்தில் இரண்டாவது மூன்றாவது கதையாக வரும் மாடஸ்டியின் கதை மற்றும் தி ரிடர்ன் ஆப் கேப்ரியல் கதையே முதலில் ரீபிரின்ட் செய்யப்பட வேண்டிய மாடஸ்டி கதை. ஆனால் அவற்றை பின்னர் பார்ப்போம்.
இப்போதைக்கு இந்த விவரங்கள் போதும். ஆகையால் லயன் காமிக்ஸ் ரீபிரின்ட் லிஸ்ட்'ஐ பார்ப்போமா?
| |
| |
|
|
| |
| |
| |
| |
| |
| |
|
இந்த பதிவில் மிஸ் ஆன சில அருமையான கதைகள்:
- அதிரடிப் படை
- டேஞ்சர் டயபாலிக் (Purely for Collectors)
- Operation அலாவுதீன்
- காரிகன் - ஒரு பனி மலை பயங்கரம்
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.