Pages

Thursday, April 14, 2011

34 வாண்டுமாமா - பூந்தளிர் இதழில் வந்த துப்பறியும் கதைகள் - சித்திரை திருநாள் சிறப்பு பதிவு- VanduMama–Poonthalir Stories

காமிக்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு, சித்திரைத் திருநாள், அம்பேத்கார் தின மற்றும் விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்! இன்று சித்திரை முதல் நாள். சித்திரை மாதம் ஐந்தாம் நாள்தான் நம் அனைவரின் அன்பிற்கு பிரியமான சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி  திரு வாண்டுமாமா அவர்களின் பிறந்த நாள் ஆகும். அவருக்கு என்னால் ஆன சிறு காணிக்கையாக இந்த பதிவினை வழங்குகிறேன். முதன்முறையாக இந்த தளத்திற்கு வருகை தரும் அன்பு உள்ளங்கள் இதற்க்கு முன்பாக நான் எழுதிய வாண்டுமாமா பற்றிய பதிவினை படிக்க இந்த சுட்டிகளை பயன்படுத்தவும்:

லயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ் வாசகர்களுக்கு துப்பறியும் ஜிப் நோலன் (Zip Nolan) என்ற ஒரு கதாபாத்திரம் நினைவிருக்கலாம். ஒரு காவல்துறை அதிகாரியான ஜிப் நோலன் என்பவர் தனக்கு அருகில் நடக்கும் சம்பவங்களை கூர்ந்து கவனித்து தன்னுடைய சமயோசித திறனால் கதையின் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பார். கதையை படிக்கும் வாசகர்களுக்கு கதையின் முடிவில் ஜிப் நோலன் சுட்டிக்காட்டும் சிறு,சிறு குறிப்புகளும் க்ளுக்களும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். ஆகையால் மறுபடியும் ஒரு முறை கதையை படிப்பார்கள், இந்த முறை சற்றே கூர்ந்து கவனித்தவாறு. இவருடைய கதைகள் காமிக்ஸ் வடிவில் இரண்டு அல்லது மூன்று பக்கங்களுக்கு மிகாமல் இருப்பது மற்றுமொரு சிறப்பு. எண்பதுகளில் இது போன்ற கதைகளுக்கு மிகுந்த வரவேற்ப்பு இருந்தது.

இந்த கதாபாத்திரத்தின் பெருவெற்றியை தொடர்ந்து லயன் காமிக்ஸ் எடிட்டர் திரு விஜயன் அவர்கள் இதுபோலவே பல கதாபாத்திரங்களை தமிழில் கொணர்ந்தார். துப்பறியும் ப்ரூஸ் கென்ட், இன்ஸ்பெக்டர் டேஞ்சர், டிடெக்டிவ் டிரேக்கின் க்ரைம் நேரம் என்று பல காமிக்ஸ் தொடர்கள் (அனைத்துமே ஓரிரு பக்கங்களில் முடிபவை) தமிழில் வந்தன. ஆனால் இவை அனைத்துமே இங்கிலாந்தில் ஆங்கிலத்தில் வெளிவந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டவை. தமிழில் இதுபோல கதைகளே இல்லையா என்று நினைக்கவேண்டாம். அறுபதுகளிலேயே இதுபோன்ற கதைகளை அளித்த திரு வாண்டுமாமா அவர்கள் எண்பதுகளில் இந்த கதைகளில் ஒரு புதுமையை செய்தார். வெறும் துப்பறியும் கதைகள் மட்டுமே இருந்தால் சிறுவர்களை அவ்வளவாக ஈர்க்காது என்று அவர் தன்னுடைய துப்பறியும் தொடர்களில் சிறுவர்களை கதையின் நாயகர்களாக கொண்டு பூந்தளிர் இதழில் எழுத ஆரம்பித்தார். அப்படி தமிழில் புகழ் பெற்ற இரண்டு துப்பறியும் கதை வரிசைகளை இந்த பதிவில் காண்போம்.

முதலில் நாம் காணவிருப்பது 1988ம் ஆண்டு புத்தாண்டு முதல் பூந்தளிர் இதழில் வர ஆரம்பித்த ஒரு துப்பறியும் கதைதொடரை. துப்பறியும் புலிகள் என்ற பெயரில் வந்த இந்த கதைத்தொடரானது மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. இந்த கதையின் சிறப்பு அம்சம் என்னவெனில் இந்த கதையின் துப்பறிவாளர்கள் போலிஸ் அதிகாரிகளோ, தனியார் துப்பறிவாளர்களோ அல்ல. அவர்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் இரண்டு புத்திசாலி சிறுவர்கள் என்பதே இந்த தொடரின் USP.

Poonthalir Issue No 79  Vol 4 Issue 7 Issue Dated 1st Jan 1988 Harish & Anush 01 Page 01 - வாண்டுமாமா – பூந்தளிர் - துப்பறியும் கதைகள் 01

Poonthalir Issue No 79  Vol 4 Issue 7 Issue Dated 1st Jan 1988 Harish & Anusha 01 Page 01

அனுஷ் என்ற சிறுமியும், ஹரிஷ் என்ற சிருவனுமே இந்த தொடரின் கதை நாயகர்கள். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல இவர்கள் இருவரும் இனைந்து துப்பறிய வில்லை. ஒவ்வொரு இதழிலும் ஒரு கதை இருக்கும். ஒரு கதையில் அனுஷ் துப்பறிவார்; மற்றொரு கதையில் ஹரிஷ் துப்பறிவார். இப்படி இருவரும் ஒவ்வோர் இதழிலும் தொடர்ந்து சாகசங்கள் புரிந்தவாறு வாசகர்களை மகிழ்வித்தனர். சென்னையில் இருக்கும் அம்பத்தூரில் ஹரிஷ் & அனுஷ் ரசிகர் அமைப்பே செயல்பட்டு வந்தது என்பது இந்த தொடரின் வெற்றிக்கு ஒரு உதாரணம்.

Poonthalir-No 79  Vol 4 Issue 7-1st Jan 1988 Harish & Anush 01 Page 02 Answer

Poonthalir Issue No 79  Vol 4 Issue 7 Issue Dated 1st Jan 1988 Harish & Anusha 01 Page 02 Answer

கதையானது வெறும் இரண்டு அல்லது மூன்று பக்கங்களிலேயே முடிந்து விடும். ஆனால் அந்த கதையில் எப்படி குற்றவாளியை கண்டறிந்தார்கள் என்பது புத்தகத்தின் வேறொரு பக்கத்தில் இருக்கும். ஆகையால் புத்தகத்தை வாங்கியவுடன் முதலில் இந்த இரண்டு பக்கங்களை படித்து விட்டு பின்னர் தாங்களே விடையளிக்க முயன்ற வாசகர்கள் பலர். அடியேனும் அதில் ஒருவன். கிட்டத்தட்ட பாதிக்கு பாதி முறை சரியாக விடையளித்த பெருமை எனக்குண்டு. எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வசித்து வந்த கோபி என்ற நண்பன் (அதாவது அப்போது நண்பன்) கிட்டத்தட்ட அனைத்துக்குமே சரியான விடையை கண்டுபிடித்து விடுவான். அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட சிறியதொரு துன்பியல் நிகழ்வின் முடிவாக கோபி இப்போது எங்கிருக்கிறான் என்பது தெரியவில்லை. (கோபி, நீ இந்த பதிவினை படித்துக்கொண்டு இருந்தால் உடனடியாக இந்த தளத்தில் இருக்கும் என்னுடைய மின் அஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும். நாம் சந்தித்து சரியாக பதினெட்டு வருடங்கள் ஆகி விட்டது).

திரு வாண்டுமாமா அவர்கள் ஒரு பெண்ணியவாதியாக இருப்பார் என்ற என்னுடைய நினைப்பை ஊர்ஜிதப்படுதுவதாக இந்த கதைதொடர் அமைந்து இருக்கிறது. தன்னுடைய எழுத்துக்களில் பெண்களுக்கு சம உரிமையை அளிக்கும் வாண்டுமாமா அவர்கள் இந்த தொடரில் கதை நாயகனாக ஒரு பெண்ணை அமைத்தது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நாம் கிட்ட தட்ட இருபது-இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு சமூகத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பதையும் சற்றே நினைவில் கொள்ளுங்கள்.

Poonthalir Issue No 80  Vol 4 Issue 8 Issue Dated 1st Jan 1988 Harish & Anush 02 Page 01 - வாண்டுமாமா – பூந்தளிர் - துப்பறியும் கதைகள் 02

Poonthalir Issue No 80  Vol 4 Issue 8 Issue Dated 1st Jan 1988 Harish & Anusha 02 Page 01

Poonthalir Issue No 80  Vol 4 Issue 8 Issue Dated 1st Jan 1988 Harish & Anush 02 Page 01 - வாண்டுமாமா – துப்பறியும் கதைகள் 02 + Index

Poonthalir Issue No 80  Vol 4 Issue 8 Issue Dated 1st Jan 1988 Harish & Anusha 02 Page 02  Poonthalir Issue No 80  Vol 4 Issue 8 Issue Dated 1st Jan 1988 Harish & Anusha 02 Page 03
Index

பூந்தளிர் இதழ்களை இப்போதைய நிலையில் சேகரிப்பது என்பது டைனோசர் கொம்பாக இருக்கும் சூழலில் இந்த கதையை மறுபடியும் படிக்கும் வாய்ப்பை நமக்கு அளிப்பவர்கள் சென்னை தியாகராய நகரை சேர்ந்த வானதி பதிப்பகத்தார். இவர்கள் இந்த தொடரை முழுவதுமாக சேகரித்து ஒரு புத்தக தொகுப்பாக சுமார் இருவது ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த புத்தகங்களும் இப்போதும் விற்பனைக்கு இருப்பது ஒரு சோகமான உண்மை என்றாலும், நமக்கொரு வாய்ப்பாக இதனை கருதி இந்த புத்தகத்தை வாங்கிவிடுங்கள். வெறும் பனிரெண்டே ரூபாயில் இந்த அருமையான துப்பறியும் கதைத்தொடர் கிடைக்கிறது என்பதை என்னுடைய நண்பரொருவர் இப்போதும் நம்ப மறுக்கிறார். நம்முடைய மனம் கவர்ந்த ஓவியச் சக்கரவர்த்தி திரு செல்லம் அவர்களின் கைவண்ணத்தில் இந்த இதழின் அட்டைப்படமும், சித்திரங்களும் இருப்பது மற்றுமொரு சிறப்பு. சுருங்க  சொல்வதாயின், Don’t Miss it.

Vanathi Publishers–Vandumama-Thuppariyum Puligal Cover

Vanathi Publishers–Vandumama-Thuppariyum Puligal Title

Vanathi Publishers–Vandumama-Thuppariyum Puligal Credits

Thuppariyum Puligal Cover Thuppariyum Puligal Title Page Thuppariyum Puligal Credits Page

Vanathi Publishers–Vandumama-ThuppariyumPuligal Editorial

Vanathi Publishers–Vandumama-ThuppariyumPuligal Editorial

Vanathi Publishers–Vandumama-Thuppariyum Puligal-Intro

Thuppariyum Puligal Editorial 01 Thuppariyum Puligal Editorial 02 Thuppariyum Puligal Introduction Page

சரியாக பதினோரு மாதங்கள் வந்த இந்த தொடர் முடிந்த நிலையில் அதற்க்கு அடுத்த தொடராக வந்ததும் மற்றுமொரு துப்பறியும் தொடர். (அன்றைய பூந்தளிர் இதழில் எந்த ஒரு தொடரும் ஒரு வருடத்திற்கு மேலாக வந்ததில்லை - அதாவது இருபத்தி நான்கு பாகங்கள் மட்டுமே. அதிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் இதழிலும், தமிழ் புத்தாண்டு இதழிலும் புதிய கதைகளை துவங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் வாண்டுமாமா அவர்கள்). இந்த முறை தொடராக வந்தது சி.ஐ.டி சிங்காரம். தமிழ் வாசகர்களுக்கு சி.ஐ.டி சிங்காரம் புதியவரல்லர். சுமார் இருபது வருடங்களுக்கு முன்பே கல்கி இதழின் மூலம் நன்கு அறிமுகமானவர் தான் சி.ஐ.டி சிங்காரம். அவரின் இந்த மீள் வருகை பூந்தளிர் இதழில் ஒரு பெரும் ஆவலை கிளப்பியது. அதுவும் விளம்பரம் வேறு தனியாக வெளியிட்டு அசத்தி விட்டார் வாண்டுமாமா. அடுத்த இதழ் எப்போது வரும் என்று ஆவலை தூண்டி விட்டார்.

ஷெர்லக் ஹோல்ம்ஸ் கதைகளில் டாக்டர் வாட்சனின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். அவரே கதையின் போக்கை படிக்கும் வாசகர்களுக்கு விவரிப்பார். கதையின் முடிவில் வாசகர்கள் டாக்டர் வாட்சனின் பார்வையில் இருந்தே கதையை புரிந்து கொள்வார்கள். அப்படி நம்முடைய சி.ஐ.டி சிங்காரதிற்கு கிடைத்த டாக்டர் வாட்சனே பாலு. பாலுதான் நம்முடைய கதை விளக்கி. பல கதைகளில் முடிவில் மர்மம்களை விளக்குவதும் பாலுவே. சென்ற பூந்தளிர் தொடரைப்போலவே இந்த கதையிலும் ஒரு சிறுவன்தான் முக்கியமான ஒரு பாத்திரத்தை ஏற்கிறான். கதையை படிக்கும் பல வாசகர்களுக்கு தானே பாலுவின் இடத்தில் இருந்து துப்பறிந்தது போன்றதொரு மனோநிலையை உருவாக்கி விடுகிறார் வாண்டுமாமா அவர்கள்.

Poonthalir Issue No 103 Vol 5 Issue 7 Issue Dated 1st Jan 1989 CID Singaram Ad

Poonthalir Issue No 104 Vol 5 Issue 8 Issue Dated 16th Jan 1989 CID Singaram Case 01 Page 001 Poonthalir Issue No 104 Vol 5 Issue 8 Issue Dated 16th Jan 1989 CID Singaram Case 01 Page 002
Poonthalir Issue No 103 Vol 5 Issue 7 Issue Dated 1st Jan 1989 CID Singaram Ad Poonthalir Issue No 104 Vol 5 Issue 8 Issue Dated 16th Jan 1989 CID Singaram Case 01 Page 001 Poonthalir Issue No 104 Vol 5 Issue 8 Issue Dated 16th Jan 1989 CID Singaram Case 01 Page 002

Poonthalir Issue No 104 Vol 5 Issue 8 Issue Dated 16th Jan 1989 CID Singaram Case 01 Page 003

Poonthalir Issue No 104 Vol 5 Issue 8 Issue Dated 16th Jan 1989 CID Singaram Case 01 Page 004

Poonthalir Issue No 104 Vol 5 Issue 8 Issue Dated 16th Jan 1989 CID Singaram Case 01 Page 005

Poonthalir Issue No 104 Vol 5 Issue 8 Issue Dated 16th Jan 1989 CID Singaram Case 01 Page 003 Poonthalir Issue No 104 Vol 5 Issue 8 Issue Dated 16th Jan 1989 CID Singaram Case 01 Page 004 Poonthalir Issue No 104 Vol 5 Issue 8 Issue Dated 16th Jan 1989 CID Singaram Case 01 Page 005

Poonthalir Issue No 104 Vol 5 Issue 8 Issue Dated 16th Jan 1989 CID Singaram Case 01 Page 006

Poonthalir Issue No 104 Vol 5 Issue 8 Issue Dated 16th Jan 1989 CID Singaram Case 01 Answer + Index

Vandumama Story Vanathi Publications CID Singaram

Poonthalir Issue No 104 Vol 5 Issue 8 Issue Dated 16th Jan 1989 CID Singaram Case 01 Page 006 Poonthalir Issue No 104 Vol 5 Issue 8 Issue Dated 16th Jan 1989 CID Singaram Case 01 D
Index
Vaandumama Story Vanathi Publications CID Singaram

பூந்தளிர் இதழே இரு வண்ணங்களில் வரும். அதில் திரு செல்லம் அவர்களின் ஓவியங்களோடு இந்த தொடர் வந்தது காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு விருந்து. ஒவ்வொரு கதையிலும் தெளிவான விவரித்தலோடு மெதுவாக ஆனால் அழுத்தமாக முன்னேறும் இந்த கதைக்கு செல்லம் அவர்களின் ஓவியங்கள் ஒரு மிகப்பெரிய பிளஸ். செல்லம் அவர்கள் பல எழுத்தாளர்களுக்கும், பல இதழ்களுக்கும் வரையும் ஒரு ப்ரீலான்ஸ் ஓவியர் ஆக இருந்தாலும் அவரின் திறமை குன்றிலிட்ட விளக்காக பளிச்சிடுவது வாண்டுமாமா அவர்களோடு கை கோர்க்கும்போதே என்பதில் இருவேறு கருத்திருக்க இயலாது.

இந்த புத்தகமும் இப்போதைக்கு கிடைக்காத நிலையில் இதனை பதிப்பக வெளியீடாக மட்டுமே வாங்கும் நிலை உள்ளது. வழமை போல இந்த கதைத்தொடரையும் வெளியிட்டவர்கள் சென்னை வானதி பதிப்பகத்தார். வாண்டுமாமா அவர்களின் பல புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் வானதி பதிப்பகத்தாருக்கு நன்றி கூறும் இந்த சூழலில் வெறும் பதினெட்டு ரூபாய்க்கு இருநூறு பக்கங்களை கொண்ட இந்த புத்தகம் கிடைக்கிறது என்ற நம்ப முடியாத தகவலையும்  கூறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

Vanathi Publishers – Poonthalir Serial – Vandumama – C.I.D Singaram – Detective Stories–வாண்டுமாமா-சி.ஐ.டி சிங்காரம்-துப்பறியும் கதைகள்-வானதி பதிப்பகம் 

CID Singaram credits page

Vanathi Publishers – Poonthalir Serial – Vandumama – C.I.D Singaram – Editorial –வாண்டுமாமா-சி.ஐ.டி சிங்காரம்-துப்பறியும் கதைகள்-வானதி பதிப்பகம் 

CID Singaram editorial page

Vanathi Publishers – Poonthalir Serial – Vandumama – C.I.D Singaram – Introduction–வாண்டுமாமா-சி.ஐ.டி சிங்காரம்-துப்பறியும் கதைகள்-வானதி பதிப்பகம் 

CID Singaram introduction

வரும் திங்கள் கிழமை அன்று திரு வாண்டு மாமா அவர்களின் பிறந்த நாளாகும். அன்று அவர் படைப்பில் உருவான ஒரு காமிக்ஸ் படைப்பின் மூலம் மறுபடியும் உங்களை சந்திக்கிறேன். உங்களின் கருத்துக்களை மறவாமல் தெரிவியுங்கள்.

தொடர்புடைய சார் பதிவுகள்: Suggested Reading

34 comments:

  1. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் விஸ்வா....

    ReplyDelete
  2. தமிழ் காமிக்ஸ் உலக மாமன்னர் "விஸ்வா" அவர்களுக்கு, என் இனிய பிறந்த நாள் நல வாழ்த்துகள், தமிழ் பேசும் நல உலகிற்கு "இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.


    பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

    அன்புடன்

    ஹாஜா இஸ்மாயில்.

    ReplyDelete
  3. பூந்தளிர் புத்தகத்தை பார்க்கும் போது வரும் குஷி இன்றளவும் இருக்கிறது. அந்த குஷியை இன்றைய தலைமுறை சிறுவர்கள் அனுபவிக்க முடியாமல் போனது வருத்தமே

    ReplyDelete
  4. கிங் விஸ்வாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
    அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    வாண்டு மாமாவிற்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    பதிவை படித்து விட்டு நாளை வருகிறேன். அதென்ன சித்திரை சிறப்பு தினம்? ஆண்களையெல்லாம் பெண்கள் அல்லர் என்று சொல்வது போல்.

    ReplyDelete
  5. மக்கள்ஸ்,
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அதே சமயம் அனைவருக்கும் இனிய காமிக்ஸ் மறுமலர்ச்சி தின நல்வாழ்த்துக்கள்.

    அதாவது கிங் விஸ்வாவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வாண்டுமாமாவின் கதைகளை பற்றி பதிவிட்டமைக்கு நன்றி.

    பூந்தளிர் பற்றிய அட்டவணை சிறப்பு.

    அடுத்து என்ன வாண்டுமாமாவின் காமிக்ஸ் கதையா? பேஷ், பேஷ், ரொம்ப நன்னா இருக்குமே.

    ReplyDelete
  7. கிங் விஸ்வாவுக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. தாகத்திற்கு தண்ணீர் கேட்டு வீட்டுக்குள் நுழையும் யுக்தி


    சரியான சிங்கம் புலி டெக்னிக்காக இருக்கிறதே..,

    ReplyDelete
  9. //க.க.. பு.பு., //

    அடடே.., அதைப் படித்த பள்ளி மாணவர்களும் அதே மாதிரி கூப்பிட்டுக் கொண்டு இருந்திருப்பார்களா? எங்களுக்கெல்லாம் அது தோன்றவில்லை. நக்ர்புறங்களில் எப்படியோ?

    ReplyDelete
  10. //ந்த புத்தகங்களும் இப்போதும் விற்பனைக்கு இருப்பது ஒரு சோகமான உண்மை என்றாலும், நமக்கொரு வாய்ப்பாக இதனை கருதி இந்த புத்தகத்தை வாங்கிவிடுங்கள்.//

    அடுத்த முறை சென்னை வரும்போது ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வாங்கிவிட வேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் வீராங்கன், இப்போது அந்த விலையிலிருந்து 40 சத தள்ளுபடியில் இந்த இரு புத்தகங்களும் கிடைக்கின்றன. சென்ற வாரம் வாங்கினேன். அனேகமாக நீங்கள் முந்திக் கொள்ளாவிட்டால் பிரதிகள் கிடைக்காமல் போய்விடும் அபாயமுண்டு,

      Delete
  11. Hi Anna,

    Really Nice Post. Pls Post about some old comics characters like Irattai Vettayar, Minnal Padai (captain mathews), Mask Hero Billy (Rani Comics), Sattayadi Veeran (Philip, Leo, Simon - Rani Comics). Thank You for your hard work.

    ReplyDelete
  12. wonderful post on vandumama. hats off to your hard work. can you please give me the phone number of vanathi publishers?

    ashok.

    ReplyDelete
  13. நண்பர் விஸ்வாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ராம்.

    ReplyDelete
  14. //துப்புத் துலக்க வாரீகளா?//

    இந்த தலைப்பு அனுபவி ராஜா அனுபவி (1967) படத்தில் நாகேஷ், மனோரமா நடிப்பில் டி.எம்.எஸ்., எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய முத்துக் குளிக்க வாரீகளா என்ற பாடலை ஞாபகப் படுத்துகிறது!

    இதே தலைப்பில் கே.எஸ்.ரவிக்குமார் நடித்து இயக்கிய முத்துக் குளிக்க வாரீகளா (1995) படமொன்றும் உண்டு! அதில் அவருக்கு குஷ்பூதான் ஜோடி! யஹ் கைசா ஹை? (ஹிந்தியில் இது எப்படி இருக்கு?) என்றெல்லாம் பன்ச் அடிப்பார்!

    இப்படத்தில் கவுண்டமணி, செந்தில்தான் காமெடி! இதில் கவுண்டமணி வாழைப்பழக் காமெடியில் தன்னை செந்தில் எப்படி ஏமாற்றினார் என்று கண்டுபிடித்து உதைப்பது போல ஒரு காட்சி வரும்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  15. //soundarss said... Hi,
    Really Nice Post. Pls Post about some old comics characters like Irattai Vettayar, Minnal Padai (captain mathews), Mask Hero Billy (Rani Comics), Sattayadi Veeran (Philip, Leo, Simon - Rani Comics). Thank You for your hard work.//

    சவுந்தர்,
    அகோதீக தலைவர் ஏற்கனவே இது பற்றிய பதிவுகளை இட்டு விட்டார். கீழ்க்காணும் பதிவுகளை மறுபடியும் படிக்கவும்:

    சாட்டையடி வீரன்: http://akotheeka.blogspot.com/2009/10/blog-post.html

    கேப்டன் மாத்யூஸ்: http://akotheeka.blogspot.com/2009/01/blog-post_31.html

    ReplyDelete
  16. காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் (சற்றே தாமதமான) தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    விஸ்வாவிற்கு (சற்றே தாமதமான) பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    வாண்டுமாமா அவர்களுக்கு (சற்றே முன்கூட்டிய) பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    நீண்ட நாளைக்கு பிறகு ஒரே நாளில் இரண்டிற்கும் மேற்பட்ட பதிவுகளை ஒருங்கே காண்பதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  17. சிறுவர்களை மைய்யமாக வைத்து பல துப்பறியும் கதைகள் தமிழில் வந்துள்ளது. எண்பதுகளில் இது போல பல துப்பறியும் கதைகள் வந்த வாறு இருந்தன. குறிப்பாக நம்முடைய ஜூனியர் லயன் காமிக்ஸில் கூட இதுபோல ஒரு எழுதுக்கதை வந்தது. நம்முடைய ஆசிரியர் எஸ்.விஜயன் அவர்கள் தான் அந்த கதையை எழுதி இருப்பார். சிறப்பாக இருக்கும்.

    பின்னர் ரத்னபாலாவில் கூட இதுபோல ஒரு துப்பறியும் கதையை டாக்டர் பூவண்ணன் ஆர்கள் எழுதினர். ஆனால் இதற்கெல்லாம் முன்னரே முல்லை தங்கராசன் அவர்கள் துப்பறியும் மூவர் என்றொரு அற்புதமான கூட்டனியை கொண்டு வந்து நம்மை எல்லாம் மகிழ்வித்துள்ளார்.

    வாண்டுமாமாவின் முதல் துப்பறியும் கதையாகிய டையல் ஒன் நாட் நாட் பற்றியும் பதிவிட்டு இருக்கலாமே? காமிக்ஸ் வடிவில் வந்த முதல் துப்பறியும் கதை அது.

    ReplyDelete
  18. இந்த சி.ஐ.டி சிங்காரம் கதையில் உதவியாளராக வருவது நம்ம பலே பாலுதான். பலே பாலு என்பது மாபெரும் வற்றெய் பெற்ற ஒரு கதாபாத்திரம் என்பதால் வாண்டுமாமா அவர்கள் அந்த பாத்திரத்தை முடிந்த வரையில் உபயோகப்படுத்தி இருப்பார். ஒரு இளைஞன் துப்பறிகிற மாதிரி ஒரு கதையமைப்பு வந்தால் கூட அந்த கதை நெடுநாட்கள் கழித்து நடக்கிற மாதிரி கதையமைப்பை மாற்றி பலே பாலு வளர்ந்து இளைஞனாக துப்பறிகிற மாதிரி அமைத்து இருப்பார். அந்த அளவிற்கு பலே பாலு ஒரு புகழ்பெற்ற பாத்திரம்.

    தமிழில் பலே பாலு போல புகழ் பெற்ற ஒரு தனி கதாபாத்திரம் இருப்பதாக எனக்கு நினைவில்லை.

    ReplyDelete
  19. //வீராங்கன் said...//க.க.. பு.பு., //
    அடடே.., அதைப் படித்த பள்ளி மாணவர்களும் அதே மாதிரி கூப்பிட்டுக் கொண்டு இருந்திருப்பார்களா? எங்களுக்கெல்லாம் அது தோன்றவில்லை. நக்ர்புறங்களில் எப்படியோ?//

    அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை. நாதன்தாலும் காமெடியாகவே இருந்திருக்கும்.

    //சென்னையில் இருக்கும் அம்பத்தூரில் ஹரிஷ் & அனுஷ் ரசிகர் அமைப்பே செயல்பட்டு வந்தது என்பது இந்த தொடரின் வெற்றிக்கு ஒரு உதாரணம்.//

    அப்படியா? எங்கள் ஊரில் ராணி காமிக்ஸ் வாசகர் வட்டம் செயல்பட்டு வந்தது. கார்சன் அகதிகள் வரும்போதெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான். எங்களை விட வயதில் பெரிய அண்ணன்கள் ஜேம்ஸ் பான்ட் ரசிகர் மன்றம் என்ற பெயரில் இயங்கி வந்தனர்.

    ReplyDelete
  20. Thank for the info ஒலக காமிக்ஸ் ரசிகன் Anna. (How about irattai vettayar anna?)

    ReplyDelete
  21. மிகவும் ரசிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்ட ஒரு பதிவு. தொடர்ந்து தமிழிலேயே எழுதுவதற்கு நன்றி தோழர்.

    நா. அகிலன்

    ReplyDelete
  22. துப்பறியும் புலிகளா? பேரே வில்லங்கமாக இருக்கே (இப்போதிருக்கும் சூழலில்). இந்த கதைகளை நான் எப்படி மிஸ் செய்தேன் என்று தெரியவில்லை. சிங்காரம் கதைகள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஆனால் இந்த துப்பறியும் புலிகள் கதைகள் தான் நினைவிலேயே இல்லை.

    ReplyDelete
  23. வாண்டுமாமா பல நாட்டு நர்சாதிரங்களை தமிழில் அழகுற கொணர்ந்து நம்மை எல்லாம் லயித்து படிக்க வைத்து வெற்றியும் கண்டவர். அவர் பல்லாண்டு வாழ்க.

    ReplyDelete
  24. தொடர்ந்து இப்படியே தமிழில் பதிவிடுங்கள். நன்றாக உள்ளது.

    ReplyDelete
  25. மிகவும் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். தொடர்ந்து இதுபோலவே பதிவிடவும். பதிவில் இருக்கும் படங்கள் சூப்பர். திறமையான ஒரு எடிட்டர் உங்களுக்குள் ஒளிந்துகொண்டு இருக்கிறார். அவரை இனம்காணுங்கள்.

    ReplyDelete
  26. சி.ஐ.டி சிங்காரம் புத்தகம் ஏற்கனவே வாங்கி விட்டேன். இப்போது இந்த புத்தகம் துப்பறியும் புலிகளும் வாங்க வேண்டும்). அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  27. execellent post on the detective stories by vandumama. he was awesome with the stories in C.I.D Singaram series.

    By the way, on second reading- can you find out the glaring error in the 1st story of the anush series? he seems to have missed the vital clue in the story itself.

    ReplyDelete
  28. vanathi publishers are not much updated with their sales pitch. when enquired about the online or other modes of payment, they do not answer.

    ReplyDelete
  29. Dear Sir, are the old poonthazhir issues available any for cash? if u hav any links, pls let me know that sir. i would like my children too to enjot those books

    ReplyDelete
  30. Is poonthalir issues available now? Where can I get them?

    ReplyDelete
  31. இதயம் நிறைந்த மகிழ்வான இனிய பிறந்ததின நல்வாழ்ததுகள் கிங்கு. மிகச் சிறப்பான பகிர்வு. தொடர்க.

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails