Dear ComiRades,
காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்சிகரமான வணக்கம். இன்றுடன் புத்தக கண்காட்சி ஆரம்பித்து ஐந்து நாட்கள் ஆகின்றன. வழக்கம் போல என்னுடைய சோம்பேறித்தனத்தினால் சொன்னதைப்போல தினசரி போட்டோ பதிவுகளை இட முடியவில்லை.மன்னிக்கவும். அதனை சரிகட்ட இன்றுமுதல் இரண்டு அல்லது மூன்று பதிவுகள் இட்டு விரைவிலேயே எஞ்சியுள்ள (இரண்டாம் நாள், மூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாள்) பற்றிய பதிவுகளை முடித்துக்கொண்டு தினசரி பதிவை ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் மற்ற காமிரேட்டுகள் அந்த முடிவினை எதிர்த்து இன்றுமுதல் தினசரி பதிவுகளை இன்றைய திகதி கணக்கிலேயே ஆரம்பிக்க கட்டளையிட,அன்புக்கு அடிமையான நான் இதோ இன்றைய போட்டோ பதிவுடன் (திங்கள் கிழமை, ஒன்பதாம் ஜனவரி) உங்கள் முன்னே ஆஜர். ஒவ்வொரு போட்டோவையும் கிளிக் செய்தால் அது வேறொரு விண்டோவில் பெரிதாக காட்சியளிக்கும்.
இந்த பதிவில் சில காமிரேட்டுகளின் பெயர்கள் மறந்துவிட்டன. ஒவ்வொரு போட்டோவுக்கும் இலக்கம் இடப்பட்டிருப்பதால், நண்பர்கள் பெயர் தெரியாத காமிரேட்டுகளை இனம்கண்டு கொண்டால் அவர்களின் பெயர்களை இந்த பதிவின் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்கள்டைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.

Dear ComiRades,