Pages

Showing posts with label Character Indexing. Show all posts
Showing posts with label Character Indexing. Show all posts

Saturday, December 07, 2013

16 Danger Diabolik – Operation Tornado Lion Comics No 223 Dec 2013

Dear ComiRades,

Welcome back after a long, long sabbatical from yours Truly. This particular post is warranted because we have received a bunch of 4 books for the second time in the year. Considering the comics drought we had couple of years back, this is not only a welcome change but also making the ComiRades choking for space with such array of breath taking titles.

Incidentally, the previous time we have received a set of 4 different books was in the month of June 2013, when this Smiling assassin from Italy made his re appearance in Tamil Language in India. For those who came in late, here is a small intro of Danger Diabolik (This introduction was published in Lion Comics Issue No 219, Issue Dated June 2013 Title: Kutra Thiru Vizha – Crime Carnival).

Lion Comics Issue No 219 June 2013 Danger Diabolik Kutr Thiruvizha  Page No 04 Introduction

Lion Comics Issue No 219 June 2013 Danger Diabolik Kutr Thiruvizha  Page No 05 Introduction

The Most amazing stat about this particular character created by the Guissani sisters is the sales figures. Including the Re print sales (Which constitutes about 15 lakh copies a year), the total sales for these wonderfully scripted comics books is a Mind boggling 55 lakhs per annum.An we are talking only about the Italian market alone. Imagine what could be the sales figure if this series is published again in English?

DiabolikDanger Diabolik – A Small Introduction: Just like Yours Truly, the Co creator of Diabolik Angella Guissani used to  commute a lot in Train. Her thought process got tuned a lot on the reading habits of the train commuters and she planned to launch a character based on the mystery Genre. Train also played a part in the The size of these books. Yes, The size was designed based on an abandoned pocket mystery novel in train. Thus the super villain Diabolik was actually born in Train and saw the daylight in 1st Nov 1962.

Eva Kant Forget about the readers, Even Diabolik doesn’t know his original name. He was raised as an orphan in a secret island by a crime syndicate. He grew up to become the criminal mastermind that he is now. Initially his character was that of a typical villain. Later on, to tone down the amorality of the character, he was shaded as a later day robin hood, never ever killing the police or the innocent. Diabolik is aided with a Mask with which he can disguise as, Practically, anybody. This particular mask is Diabolik’s USP.

Ginko No Hero is complete without a Heroin (After which he is completed ot Finished – This punch dialogue is dedicated to Our beloved MF) and this concept forced the creators to launch a new character in the series in March 1963. From then onwards this character, Eva Kant, has gone on to become a more and more dominant partner and aide.

If the hero is actually a villain, then the series requires a honest cop who always ends up as the second best. This is the unwritten rule in script writing. Without violating any such, the characters created Inspector Ginko. He doesn’t have a surname to go with. But has a girl friend named Altea.

Danger Diabolik in India: This month’s edition is actually the 3rd book to be published in Tamil, rather in India. Also in Asia & in Asia Pacific. Here are the images of the previous two issues:

1. Danger Diabolik – Lion Comics Issue No 44 – Dec 1987

Lion Comics Issue No 044 Danger Diabolic Cover

Lion Comics Issue No 044 Danger Diabolic Page No 03 Story Title Page

Lion Comics Issue No 044 Danger Diabolic Page No 04 Story 1st Page

Lion Comics Issue No 044 Danger Diabolic Page No 05 Story 2nd Page

 2. Kutra Thiru Vizha – Crime Carnival – Lion Comics Issue No 219 – June 2013

Lion Comics June 2013 Danger Diabolik 2nd Story in Tamil Kutra Thiru Vizha

Lion Comics Issue No 219 June 2013 Danger Diabolik Kutr Thiruvizha  Page No 06 Story 1st Page

Lion Comics Issue No 219 June 2013 Danger Diabolik Kutr Thiruvizha  Page No 07

 3. Operation Sooravali – Operation Tornado – Lion Comics Issue No 223 – Issue Dated Dec 2013

Lion Comics Issue No 223 Operation Sooraavali Dec 2013 Dabger Diabolik

The cover image of this book was first made available in a Fan club page of Diabolik in Italy. Then only it was revealed to the Indian readers. Such is the interest for this character and the respect shown by the editor to send it to Italy first and then later on to be revealed in India. 

Lion Comics Issue No 223 Operation Sooraavali Dec 2013  Page No 04 Story Title PageLion Comics Issue No 223 Operation Sooraavali Dec 2013  Page No 06 Story Title Page

Lion Comics Issue No 223 Operation Sooraavali Dec 2013  Page No 07 Story 1st Page

Lion Comics Issue No 223 Operation Sooraavali Dec 2013 Pg No 44

Lion Comics Issue No 223 Operation Sooraavali Dec 2013 Pg No 95

This Book also has some other interesting features. Particularly the glowing intro by the editor about the fan club of Diabolik in Italy and their enthusiasm to order this book, in spite of the fact that this is published in Tamil Language. Click on the image to read / see the scans in a larger format.

Lion Comics Issue No 223 Operation Sooraavali Dec 2013  Page No 03 Editors Hotline

Lion Comics Issue No 223 Operation Sooraavali Dec 2013  Page No 04 Editors Hotline

Lion Comics Issue No 223 Operation Sooraavali Dec 2013 Pg No 96

Lion Comics Issue No 223 Operation Sooraavali Dec 2013  Page No 176 Next Issue Ad Bruno Brazil

Lion Comics Issue No 223 Operation Sooraavali Dec 2013  Page No 177 Next Issue Ad Bernard Prince

 Though this character was published only once before this june, the name is quite popular in South India. Ace film comedian Vivek used to promote this character through his film dialogues. In fact i have seen in couple of films where he names the villains as Danger Diabolik.

Lion Comics Issue No 223 Operation Sooraavali Dec 2013  Annex Feedback Form

Lion Comics Issue No 223 Operation Sooraavali Dec 2013  Page No 178 Sunscription Form

 Danger Diabolik is all set re appear in 2014 Summer in Lion Comics. Watch out for this space for the official announcement.

Well, that’s all for this post and TCU will be back with another post on Monday and will try to be as regular as possible from here onwards. As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget section or Click Here.

Thanks & Regards, 
King Viswa

Monday, July 29, 2013

39 அலிபாபா & முஸ்தஃபா - மினி லயனின் டாப் காமெடி கதாநாயகர்கள்

டியர் காமிரேட்ஸ்,

இந்த பதிவு எத்துனை முறை எடிட் செய்யப்பட்டது, எத்துனை முறை ஒத்திவைக்கப்பட்டது என்பதற்கு என்னிடம் கணக்கே இல்லை. முதன் முதலில் 2009ம் ஆண்டு திட்டமிடப்பட்டு பின்னர் நண்பர் பின்னோக்கியின் வேண்டுகோளுக்கிணங்க 2010ம் ஆண்டு கிட்டத்தட்ட பதிவேறும் நிலைக்கே வந்து பல காரணங்களால் பதிவிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

அதன் பின்னர் இந்த ஆண்டு மறுபடியும் ஏப்ரல் மே மாதங்களில் பரணில் இருந்து தூசு தட்டி பதிவை ஒப்பேற்றி அப்லோட் செய்யும்போது வேறு சில காரணங்களால் பதிவிடப்படாமல் விடப்பட்டது. இப்படியாக சரித்திர (தரித்திர) புகழ் பெற்ற இந்த பதிவு வலையேறும் அற்புத நாள் இந்நாளே என்பதில் மிக்க மகிழ்ச்சி. 

சமீப காலமாக எடிட்டர் லக்கி லுக், சிக் பில், கேப்டன் பிரின்ஸ் என்று பழைய ஹீரோக்கள் பலரின் அற்புதமான பல கதைகளை முழு வண்ணத்தில் பெரிய சைஸ் புத்தகங்களில் ரீப்ரின்ட் செய்து வருவதை அனைவருமே அறிவீர்கள். இந்த வரிசையில் இன்னமும் சில கதை வரிசைகளை சேர்க்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து, அந்த கருத்திற்கு வலுவூட்டும் வகையில் சில பல பதிவுகளை ரீப்ரின்ட் வரிசையில் இட எண்ணி உள்ளேன். அந்த வரிசையில் முதல் பதிவு அலிபாபா மற்றும் முஸ்தபாவின் சாகசங்கள் அடங்கிய தொடரே.

அலிபாபா முஸ்தபா இருவரும் ஆதரவற்ற நாடோடி சகோதரர்கள். ஏதாவது செய்து பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வியாபாரிகள். அவர்கள் வியாபாரம் செய்வது எதை என்று மட்டும் கேட்க வேண்டாம். எதையும் எல்லாவற்றையும் விற்பனை செய்யும் திறன் (?!?!?!) கொண்டவர்கள் நமது ஹீரோக்கள். மனதில் நேர்மையும், எண்ணத்தில் அடுத்தவர்களின் நலனையும் கொண்ட இவர்களின் இணையாக நமது சிக்பில் கதைகளில் வரும் உதவி ஷெரிப் கிட் ஆர்டினை சொல்லலாம். கிட்டத்தட்ட அதே மாதிரி கதாபாத்திரம் தான் இவர்கள் இருவரும்.

அரேபிய கதைகளை பகடி செய்யும் ஐரோப்பிய கதாசிரியர்களைப்போலவே தான் இந்த கதையின் போக்கும் அமைந்து இருக்கும். பாக்தாத் நகரை தாக்பாத் என்று உல்டா செய்வதில் ஆரம்பித்து பல விஷயங்களில் சுதந்திரத்தை கையாண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த கதையின் பின்புல அரசியலை பிறிதொரு நாளில் விவாதிப்போம். இப்போதைக்கு கதையும் கதை மாந்தர்களுமே நமக்கு முக்கியம்.Genie Profile Karundhel Profile

மொத்தம் மூன்று புத்தகங்களில் நான்கு கதைகளில் மட்டுமே வந்துள்ள இந்த சகோதரர்களின் கதைகளில் ஓரளவுக்காவது ரெகுலர் ஆக வரும் கதாபாத்திரங்கள் இவர்கள் இருவர் மாத்திரமே. ஆகையால் இவர்கள் இருவரைத்தாண்டி வேறு எந்த முக்கிய கதாபாத்திரங்கள் இல்லை எனினும் இரண்டு கதை மாந்தர்கள் Stand-Out ஆக தெரிகின்றனர்.

ஒருவர்: அலாவுதீனின் அற்புத விளக்கில் இருந்த பூதம். இப்போது வயதாகிவிட்ட நிலையில், சர்க்கரை வியாதி,நியாபக மறதி, முட்டி வலி இருதய பலவீனம், குடலில் கோளாறு, கண்டிப்பாக மதிய நேர தூக்கம் அவசியம், குடி போதை என்று கலந்து கட்டி அடிக்கும் ஒரு அசாதாரண பூதமே கிப்கிப். முதல் கதையின் நாயகனே இந்த பூதம் தான்.

முதல் கதையின் நாயகன் கிப் கிப் எனில் எதிர் நாயகன் ஆக வருவது நம்ம கருந்தேள் பிரபு. இல்லையில்லை, இவர் நமது காமிரேட் கருந்தேள் ராஜேஷ் இல்லை.இவர் ஒரு கொள்ளையர். இவரது ஃப்ளாஷ்பேக் மற்றும் இவரது முடிவு இரண்டுமே சுவாரஸ்யமானது. இவர் மாத்திரமே இந்த கதை வரிசையில் இரண்டு கதைகளில் வருகிறார்.

உலகம் சுற்றும் அலிபாபா: ஜூனியர் லயன் காமிக்ஸின் முதல் இதழாக வந்த சூப்பர் சர்க்கஸ் இதழின் பின் அட்டையில் வந்த விளம்பரம் தான் அலிபாபா முஸ்தபாவை தமிழ் காமிக்ஸ் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது. அந்த பின் அட்டை விளம்பரமும், அலிபாபா முஸ்தபாவின் முதல் சாகசமாகிய உலகம் சுற்றும் அலிபாபாவின் அட்டைப்படமும் ஸ்கான் வடிவில் உங்களின் பார்வைக்கு.

Junior Lion Comics Issue No 2 Ulagam Sutrum Alibaba Advt

Junior Lion Comics Issue No 2 Ulagam Sutrum Alibaba Cover Scan 

அப்போதெல்லாம் மினி லயன் ஒன்றாம் தேதியிலும், ஜூனியர் லயன் பதினைந்தாம் தேதியிலும் விற்பனைக்கு வந்தன.இதைப்போலவே தான் லயனும், திகில் காமிக்சும் 1 & 15ம் தேதிகளில் வந்தன. மாதத்திற்கு நான்கு சிறப்பான புத்தகங்கள் என்பது என்ன மாதிரியான சாதனை என்பதை யோசிக்கையிலேயே மலைப்பாக இருக்கிறது. மேலும் இந்த சாதனையை செய்தது ஒரு டீனேஜர் என்பது இன்னமும் வியக்க வைக்கும் ஒரு விஷயம். புத்தகம் கைவசம் இல்லாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்காக இந்த முதல் பக்க ஸ்கான் + மூலக்கதை புத்தகத்தின் முதல் பக்க ஸ்கான்லேஷன்.

Junior Lion Comics Issue No 2 Ulagam Sutrum Alibaba Cover Story 1st Page

உலகம் சுற்றும் அலிபாபா - கதை சுருக்கம்: எதேச்சையாக ஒரு விளக்கு நமது ஹீரோக்கள் கைவசம் கிடைக்க அதனை துடைக்கும் போது அதில் இருந்து அலாவுதீனின் வயதான பூதம் வெளியே வந்து, நீங்கள்தான் இனிமேல் என்னுடைய முதலாளி, நீங்கள் இடும் கட்டளையை நிறைவேற்றுவதே என்னுடைய தலையாய பணி என்று சொல்கிறது.

வியந்து போன நமது ஹீரோக்கள், வியாபாரம் செய்ய ஒரு கப்பலை கேட்கின்றனர். சாப்பாட்டு பிரியனான முஸ்தபா "நிறைய பதார்த்தங்களுடன் கூடிய" ஒரு கப்பலை கேட்க, பூதமோ ஆழ்கடலில் நிறைய செடி கொடிகளுடன் மூழ்கி இருந்த ஒரு பழைய கப்பலை தருவிக்கிறது. அந்த கப்பலை அடையாளம் கண்டு கொள்ளும் ஒரு கொள்ளைக்கும்பல் தங்களது உளவாளி ஒருவனை அந்த கப்பலில் நமது ஹீரோக்களுடன் அனுப்ப, அவனது பாடாவதி சமையலை சகித்துக்கொள்ளும் அலிபாபா, சகிக்க முடியாத அளவிற்கு இருக்கும் சில ரகசியங்களை தெரிந்து கொள்ளும்போது அறிமுகம் ஆகிறார் எதிர் நாயகன் கருந்தேள் (எ) அமீன் பிரபு..

  • அந்த ஃப்ளாஷ் பேக் என்ன?
  • அந்த கப்பலில் இருக்கும் ரகசியம் என்ன?
  • சிறைபட்ட நமது ஹீரோக்கள் கதி என்ன?
  • பூதம் இந்த நேரத்தில் என்ன செய்துக்கொண்டு இருக்கிறது?

கடைசி கேள்விக்கு மாத்திரம் நான் பதில் சொல்லி விடுகிறேன் - குடி போதையில் உளறி அட்டகாசம் செய்த பூதத்தை வெளியே வராதமாறு இறுக்கமாக விளக்கில் அடைத்து விடுகின்றனர் நமது ஹீரோக்கள்.அதற்க்கு பிறகுதான் அவர்கள் கொள்ளையர் கூட்டதால் சிறை பிடிக்கப்படுகின்றனர்.

Junior Lion Comics Issue No 2 Ulagam Sutrum Alibaba Cover Story 1st Page Original

அப்போதைய ஜூனியர் லயன் காமிக்ஸ் இதழ்களில் தொடர்ச்சியாக வாசகர் கடிதம் இடம் பெறாததால் இந்த இதழுக்கு என்ன மாதிரியான வரவேற்ப்பு கிடைத்தது என்பதை துல்லியமாக சொல்ல முடியவில்லை. ஆனால் இந்த கதையை புதிய இதழாக கடைகளில் வாங்கிய "அங்கிள்" காமிரேட்டுகள் சிலரிடம் கேட்டபோது, இந்த புத்தகமும் முதல் இதழான (லக்கி லுக் சாகசம்) சூப்பர் சர்க்கஸ் போலவே ஒரு மெகா ஹிட் இதழ் தான் என்று கற்பூரம் ஏற்றாத குறையாக சொன்னார்கள். இந்த இதழின் வெற்றி எப்படிப்பட்டது என்பதை எடிட்டர்தான் கூற வேண்டும்.

ஏற்கனவே போன பத்தியில் சொன்னது போல ஆரம்பகால ஜூனியர் லயன் இதழ்களில் இடப்பற்றாக்குறை என்பது மிகையாகவே இருந்தது. கதைகள் சற்று பெரியதாக இருந்தால் வாசகர் கடிதம் மட்டுமில்லாமல் அடுத்த இதழுக்கான விளம்பரம் கூட மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே வெளிவந்தது. அலிபாபா முஸ்தபா தொடரில் இரண்டாவது கதைக்கான விளம்பரம் வெறும் வார்த்தைகளாலேயே அலங்கரிக்கப்பட்டு வந்தது. அதுவும் மற்றும் புத்தகத்தின் அட்டையும் உங்களின் பார்வைக்கு:

 சொர்கத்தின் சாவி: இந்த சொர்கத்தின் சாவி வெளிவந்த இதழ் தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலேயே ஒரு மைல் கல். ஆமாம், முதன் முறையாக இரண்டு இதழ்கள் இனைந்து ஒரே இதழாக வெளிவந்த முதல் தமிழ் காமிக்ஸ் மாத இதழ் இது தான். இதனைப்பற்றிய முழு நீள பதிவு (அற்புதமான ஸ்கான்களுடன், பல வெளிநாட்டு காமிக்ஸ் இதழ்கள் இதுபோல இணைந்த வரலாற்று செய்திகளுடன்) இங்கே க்ளிக் செய்து படிக்கவும்

Junior Lion Comics Issue No 5 Sorgathin Saavi Advt

Junior Lion Comics Issue No 5 Sorgathin Saavi Cover

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக ஸ்டார் ப்ளஸ் (பின்னர் ஸ்டார் வேர்ல்ட்) சேனலில் வெளிவந்த பிரம்மாதமான சயன்ஸ் பிக்ஷன் தொடர் The X Files. அப்போது நான் இந்த தொடரை மிகவும் விரும்பி பார்ப்பேன் (இதைப்போன்று மிகவும் ரசித்த தொடர்கள் The Dark Skies (AXN), 1st Wave (Star World), இதர இதர). இந்த தொடரின் மூன்றாவது சீசனில் பதினொன்றாவது பாகத்தில் (Revelations) தொடரின் முக்கிய கதாபாத்திரமாகிய Dana Scully ஒரு வசனத்தை சொல்வார் "Iam Afraid that The God is Speaking, But No One is Listening”.

Believe it or Not, இந்த வசனத்தை ஆரம்பமாக கொண்டதே இந்த சொர்கத்தின் சாவி கதை.

Junior Lion Comics Issue No 5 Sorgathin Saavi Story 1st Page

சொர்கத்தின் சாவி - கதை சுருக்கம்: தாக்பாத் நகரில் சூறாவளிக்காற்று வீசிய ஒரு நாளில் ஒரு வயோதிக பிச்சைக்காரர் ஒருவர் ஒதுங்க இடம் தேடுவதில் கதை துவங்குகிறது. அவருக்கு யாருமே புகலிடம் தராத சூழ்நிலையில் நம்முடைய அலிபாபாவும் முஸ்தபாவும் அவருக்கு தங்க இடம் அளிக்கின்றனர். அப்போது அந்த முதியவர் அவர்கள் இருவருக்கும் ஒரு கதையை சொல்கிறார்.

அந்த கதை என்னவெனில், கடவுள் ஒரு நாள் பூமிக்கு வருகிறார்.  நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களுக்கு ஒரு சிறப்பு பரிசை அளிப்பதே அவருடைய பயணத்தின் நோக்கம். அந்த சிறப்பு பரிசு ஒரு சிறிய பெட்டியில் வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த பெட்டியில்தான் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான ரகசியம் கடவுளால் எழுதப்பட்டு இருக்கிறது. அந்த பெட்டியை பெறுபவர்கள் அந்த ரகசியத்தை படித்து தெரிந்துகொண்டு வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழலாம்.

ஆனால் மாறுவேடத்தில் இருக்கும் கடவுளை கல்நெஞ்சு கொண்ட மனிதர்களால் அடையாளம் காணவே இயலவில்லை. பலராலும் மறுக்கப்படுகிறார் கடவுள். இப்படியாக கடவுள் கதை சொல்லிக்கொண்டு இருக்கும்போதே நம்முடைய கதாநாயகர்கள் இருவரும் கதையை கேட்டுக்கொண்டே தூங்கி விடுகின்றனர்.

மறுநாள் காலையில் சகோதரர்கள் கண்விழிக்கும்போது தேவதூதர்கள் புடைசூழ அந்த முதியவர் பறக்கும் அன்னங்கள் கொண்ட ரதத்தில் சென்றுக்கொண்டு இருக்கிறார். அப்படி அவர் செல்லும்போது கதையில் அவர் குறிப்பிட்ட அந்த பெட்டியை அவர்களுக்கு என்று விட்டு செல்கிறார்.

  • அப்படி எனில் அவர்களிடம் புகலிடம் கேட்டு வந்தது கடவுள்தானா?
  • அவர் சொன்ன கதை உண்மையா?
  • சொர்கத்தின் சாவி என்று சொல்லப்படும் அந்த மகிழ்ச்சியின் ரகசியம் அடங்கிய பெட்டியின் சாவி எங்கே இருக்கிறது?
  • அந்த சாவியை எப்படி தேடுவது?
  • சாவியே இல்லாத அந்த பெட்டியை திறப்பது எப்படி?
  • அந்த பெட்டியை அடைய துடிக்கும் மற்றவர்களின் முயற்சியை நம்முடைய சகோதரர்கள் எப்படி தடுக்கிறார்கள்?
  • உண்மையிலேயே மகிழ்சியான வாழ்வின் ரகசியம் என்ன?

கதையின் முடிவில் உண்மையிலேயே அந்த மகிழ்ச்சியின் ரகசியத்தை நம்மாலும் அறிய முடிகிறது. கதையில் பலமே பிரம்மாதமான சித்திரங்களும், அற்புதமான வசனங்களும் தான். அதுவும் தமிழில் படிக்கையில் இன்னமும் சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய சிறப்பான கதை சொர்கத்தின் சாவி.

Junior Lion Comics Issue No 5 Sorgathin Saavi Story 1st Page Original 

இந்த கதையையுமே நான் புதியதாக கடையில் வாங்கவில்லை என்பதால் வாசகர்களின் வரவேற்ப்பு எப்படி இருந்தது என்பதை நேரிடையாக சொல்லவியலாது. அந்த கால காமிரேட்டுகள் இந்த கதையைத்தான் அலிபாபா முஸ்தபா கதைதொடரில் ஆகச்சிறந்த கதை என்று சொல்கிறார்கள். இந்த கதையை மறுபடியும் படிக்க எடிட்டரின் ரீப்ரின்ட் ரிக்வெஸ்ட் கேட்பதைதவிர வேறு வழியே இல்லை. நமக்கு மட்டுமில்லை, நம்முடைய குட்டீஸ்களுக்கும் இந்த தொடர் ஒரு மிகச்சிறந்த Bed Time Reading அனுபவமாக இருக்கும் என்பதில் இருவேறு கருத்து இருக்க இயலாது.

வெள்ளைப் பிசாசு: அடுத்து மூன்றாவதாக வெளிவந்த அலிபாபா முஸ்தபா கதை - நெடுநாட்களாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்த வெள்ளைப்பிசாசு கதையே. இந்த முதல் மூன்று கதைகளின் சிறப்பு என்னவெனில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சைசில்,அமைப்பில் வெளிவந்தவை. ஆனால் இந்த கதையோ முழு வண்ணத்தில் இல்லாமல் அப்போதைய ட்ரென்ட் ஆகிய இருவண்ணத்தில் வெளிவந்தது. அதன் விளம்பரமும் அட்டைப்படமும்:

Mini Lion Comics Issue No 12 Vellai Pisasu Advt

Mini Lion Comics Issue No 12 Vellai Pisasu

முதலில் விளம்பரப்படுத்தப்பட்ட படி வந்து இருந்தால் இதுதான் மினி லயன் கதைகளில் பத்தாவது புத்தகம். ஆனால் அந்த கால சாபத்தின்படி இது திட்டமிட்டபடி வெளியாகவில்லை. அதற்க்கு பதிலாக திடீரென்று "ஒரு கள்ளப் பருந்தின் கதை" பத்தாவது இதழாக வெளிவந்தது. அந்த கதையையை பற்றிய எடிட்டரின் பதிவு இங்கே . இதற்க்கு பிறகு பதிமூன்றாவது இதழாக வெளிவந்தது நம்முடைய வெள்ளைப்பிசாசு. அதன் முதல் பக்கம் வழக்கமான அலிபாபா கதைகளின் முழுவண்ணம் போலில்லாமல் இருவண்ணத்தில் வெளிவந்தது.

Mini Lion Comics Issue No 12 Vellai Pisasu Story 1st Page

வெள்ளைப்பிசாசு - கதை சுருக்கம்: தாக்பாத் நகரில் தொடர்ந்து பல திருட்டு நடை பெற்றுக்கொண்டே இருக்கிறது. அந்த திருட்டுகளின் அசாதாரண பின்னணி என்னவெனில் மனிதர்கள் யாருமே நுழையமுடியாத பெட்டகத்தில் இருக்கும் பொக்கிஷங்கள் கூட கொள்ளையடிப்படுவதே.

இந்த கொள்ளைகளால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது அந்த நாட்டு தளபதி தான் (சத்தியமாக நம்ம இளைய தளபதி அணில் இல்லீங்கோவ், இவரு நிஜம்மாவே அந்த ஊரு தளபதி தான்). அந்த நாட்டு சுல்தான் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தளபதியாரை கடிந்து கொள்கிறார். மிகவும் கொடூரமான அந்த தளபதி கண்டிப்பாக இந்த திருட்டுகளின் பின்னணியில் இருக்கும் வெள்ளைப் பிசாசை விரைவில் பிடிப்பதாக சபதம் இடுகிறார்.

நடக்கும் விஷயங்களுக்கு எல்லாம் சிகரமாக வெள்ளைப் பிசாசு அந்த நாட்டு சுல்தானின் செங்கோலை திருடுவதாக சவால் விடுகிறார். வெள்ளைப்பிசாசின் சவாலை ஏற்றுக்கொள்ளும் தளபதி அதற்காக முழு முன்னேற்பாடுகளுடன் படைபலத்துடன் செங்கோலை காத்துக்கொண்டு இருக்கிறார்.

Mini Lion Comics Issue No 12 Vellai Pisasu Story 1st Page Original

  • வெள்ளைப்பிசாசு சொன்னபடி சவாலில் ஜெயிக்கிறாரா?
  • தவறாக கைது செய்யப்படும் நமது ஹீரோக்களின் கதி என்ன?
  • வெள்ளைப்பிசாசு என்பது யார்?
  • அவர் எதற்க்காக கொள்ளையடிக்கிறார்? அவரது ஃப்ளாஷ்பேக் கதை என்ன?
  • தளபதியின் கதை என்ன? தளபதிக்கும் வெள்ளைப்பிசாசுக்கும் என்ன தொடர்பு?

என்று பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் அற்புதமான சித்திரங்களுடன் அமைந்துள்ள இந்த கதை முடிகிறது. யூரோப்பிய கதைகளின் பாணியில் இதுவரையில் வந்த இரண்டு அலிபாபா கதைகளுமே முழுநீள கதைகளாக தனித்தனி புத்தகத்தில் 48 பக்கங்களில் வெளிவந்தது. ஆனால் இந்த கதையோ, இரண்டு சிறுகதைகளாக ஒரே புத்தகத்தில் வெளிவந்தது. அப்படி வெளிவந்த இரண்டாவது கதைதான் பின்னாளில் மினி லயன் காமிக்ஸில் வெளிவந்த மாயத்தீவில் அலிபாபா அந்த  விளம்பரமும் அட்டைப்படமும் ஸ்கான் வடிவில் உங்களின் பார்வைக்கு.

Mini Lion Comics Issue No 16 Maayatheevil Alibaba Advt

Mini Lion Comics Issue No 16 Maayatheevil Alibaba

 

 

மாயதீவில் அலிபாபா: விடுமுறையை கழிக்க ஒரு டிராவல் ஏஜென்சியை நாடுகின்றனர் அலிபாபாவும் முஸ்தபாவும். மட்டாபிஷ்ச் என்னும் அந்த நபரால் நடத்தப்படும் அந்த பயண ஏற்பாடுகள் நம்பவே இயலாத அளவிற்கு மிகவும் குறைந்த விலையில் சிறப்பான ஏற்பாடுகளுடன் இருப்பதாக காட்சி அளித்ததால் நண்பர்கள் இருவருமே உடனடியாக ஒப்புக்கொண்டு கட்டணத்தை செலுத்திவிடுகின்றனர். ஆயிரம் தினார்களுக்கு 15 நாட்கள் எழில் கொஞ்சும் மெகல்ஃபட்ரா தீவில் விடுமுறையை கழிக்க கிளம்பும் நமது ஹீரோக்கள் அடுத்தடுத்து மேற்கொள்ளும் சுவையான சம்பவங்களே இந்த கதையின் ஜீவநாடி.

Mini Lion Comics Issue No 16 Maayatheevil Alibaba Story 1st Page 1

மாயதீவில் அலிபாபா - கதை சுருக்கம்: ஆனால் அந்த தீவில் அவர்களுக்கு காத்திருக்கும் விஷயங்கள் பற்றி தெரிந்து இருந்தால் அவர்கள் பயண குறிப்பீட்டில் (மிகவும்) சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டு இருந்த அனைத்து கன்டிஷன்ஸ் அப்ளை குறிப்புகளையும் பூதக்கண்ணாடி வைத்தாவது படித்துவிட்டு வந்து இருப்பார்கள். பயண ஏற்பாட்டாளரின் இந்த நூதன மோசடியை தவிர்த்து புதியதொரு அசம்பாவிதமும் அந்த தீவில் தலைதூக்குகிறது.

மன அளவில் நொந்து போய் இருக்கும் அந்த பயணிகளுக்கு புதியதாக மற்றுமொரு பிரச்சினை - பயணிகள் ஒவ்வொருவராக காணாமல் போகின்றனர். பயணிகளின் கடத்தல் சம்பவம் அந்த சிறிய தீவில் மேலும் பீதியை கிளப்புகிறது.

  • பயணிகள் மர்மமான முறையில் காணாமல் போவதின் பின்னணி என்ன?
  • பயணிகளை ஏதேனும் மர்ம கும்பல் கடத்துகிறதா?
  • கடத்தலின் பின்னணி என்ன?
  • சகோதரர்களில் ஒருவரும் கடத்தப்பட்டபின்பு நடக்கும் சங்கதிகள் யாவை?
  • மர்ம கும்பலின் தலைவன் யார்?
  • இந்த பிரச்சினையில் இருந்து விடுபட்டதர்க்கும் ஞாயிற்று கிழமை ஸ்கூல் லீவு விடுவதற்கும் இருக்கும் பிணைப்பு என்ன?

என்று ஒரு நேர்க்கோட்டில் பயணம் செய்யும் அம்புபோல கதை விறுவிறுப்புடனும், நகைச்சுவையுடனும் நகர்கின்றது. இந்த கதைதான் அலிபாபா முஸ்தபா கதை வரிசையில் கடைசி கதை என்பது குறிப்பிடத்தக்கது.

Mini Lion Comics Issue No 16 Maayatheevil Alibaba Story 1st Page 1 original

இப்போதைய லயன் / முத்து காமிக்ஸ் சைசில் வெளியிட்டு நம்மைப் போன்றவர்களையும், வயதில் சிறியவர்களையும் ஒருங்கே ஈர்க்கும் ஒரு சில கதை வரிசைகளில் இதுவும் ஒன்று என்பதால் இதனை இப்போது ரீப்ரின்ட் செய்தால் அட்டகாசமாக இருக்கும்.

  • 100+ பக்கங்கள்.
  • (32 பக்கம் X 2 கதைகள்) + (16 பக்கம் X 2 கதைகள்) = 96 பக்கங்கள்.
  • நூறு ருபாய் ஸ்பெஷல் வெளியீடு.
  • எடிட்டரின் பழைய நினைவுகள் (இந்த கதைகளை எப்படி தேர்வு செய்தார்? Etc)
  • இந்த இதழ்களின் பழைய விளம்பரங்கள், அட்டைப்படங்கள், வாசகர் கடிதங்கள்
  • கதாசிரியர், ஓவியர் குறித்த சிறுகுறிப்புகள்

என்று ஒரு அட்டகாசமான பேக்கேஜ் கண்முன்னே தெரிகின்றது.இந்த கதையை ஏற்கனவே படித்த புண்ணியாத்மாக்கள் கண்டிப்பாக ரீப்ரின்ட் ரெக்வெஸ்ட் ஒன்றினை இப்போதே எடிட்டரிடம் ஆரம்பிக்கலாமே?

P.S.: காமிரேட்டுகள் ஹாஜா இஸ்மாயில் மற்றும் முத்து விசிறி அவர்களின் நல்லாசியுடன் இதோ அந்த காலத்தில் நமது இதழ்கள் விற்பனை ஆகிக்கொண்டு இருந்த சமயத்து கடைகளின் விளம்பர போஸ்டர்கள்.

Maaya Theevil Alibaba sales poster Ulagam Sutrum Alibaba sales poster  இந்த "விற்பனையாகிறது" போஸ்டர்கள் அந்த காலத்தில் மிகவும் ரெகுலர் ஆக அனைத்து கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வந்தன. அப்படி அனுப்பப்பட்ட போஸ்டர்கள் அனைத்தையும் மிகவும் கஷ்டப்பட்டு சேகரித்து வைத்துள்ள காமிரேட் எனது நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமையே.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

பின்குறிப்பு: இந்த பதிவின் முதல் படத்தில் Yeah, That's We என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளது நெருங்கிய நண்பர் ஒருவருக்காக. ஆகையால் அதனை சுட்டிக்காட்ட வேண்டாமே?

Thursday, April 11, 2013

51 பேய் வீரர் செக்ஸ்டன் ப்ளேக் - ஒரு (மறு) அறிமுகம்

டியர் காமிரேட்ஸ்,

சமீபத்தில் ஒரு பதிவில் (கோடையின் கொடை - மார்ச் 31ம் தேதியிட்ட பதிவு ) லயன் & முத்து காமிக்ஸ் எடிட்டர் விஜயன் அவர்கள் "செக்ஸ்டன் பிளேக்" பற்றி எழுதும்போது இப்படி ஒரு அறிமுகம் கொடுத்து இருந்தார்:

"அவர்களோடு கூட்டணி சேர அடுத்து என் வசமிருந்தவர் இன்னொரு பிரிட்டிஷ் ஹீரோவே  ! கொஞ்சம் புராதன நெடியடித்தாலும், 1960s களில் வெளியான VALIANT வார இதழில் சுவாரஸ்யமான துப்பறியும் கதைகள் பலவற்றில் சாகசம் செய்த செக்ஸ்டன் ப்ளேக் தான் அந்த ஆசாமி.  (இன்றைய ஜெரோம் ; ரிப் கிர்பி போல் சற்றே பரபரப்புக் குறைச்சலான டிடெக்டிவ் இவர்!!). பிசாசு வனம்' என்ற ஒரு மிதமான மர்மக் கதையில் அவருக்கு வாய்ப்புக் கிட்டியது”.

இதனை படிக்கும்போது பழைய நினைவுகள் பலவும் மனதில் ஓடியது (போச்சுடா, இன்னுமொரு ஃப்ளாஷ்பேக் பதிவா? என்று நீங்கள் முணு முணுப்பது எனக்கு கேட்கிறது). உங்களில் பலரைப் போல நானும் இந்த புத்தகம் கடைகளில் வந்தபோது வாங்கியவன் அல்ல . பழைய புத்தக கடைகளில் எதேச்சையாக இந்த புத்தகம் கிடைக்கப்பெற்றவன் நான்.  தேவையெனில் சொல்லுங்கள், அட்டகாசமான இந்த புத்தகத்தை பற்றி ஒரு முழு நீள விமர்சன பதிவொன்றை இட்டுவிடுவோம்.

பேய் வீரர் செக்ஸ்டன் பிளேக்: இந்த ஹீரோ யார், என்ன மாதிரி கதைகளில் இவர் சாகசம் புரிந்தார்? என்று யோசிக்கும் புதிய ஜெனரேஷன் வாசகர்களுக்கு அடுத்து வரும் ஒரு சிறிய அறிமுகம்: ஷெர்லக் ஹோல்ம்ஸ் கதைகள் உலக அளவில் பிரசித்தம் அடைந்துகொண்டு இருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிகளில் ஹாரி பிளித் என்பவரால் உருவாக்கப்பட்ட (இன்னுமொரு) துப்பறியும் நிபுணரே நமது ஹீரோ செக்ஸ்டன் பிளேக்.

SB Annual

மருத்துவ துறையில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு மருத்துவராக இல்லாமல் துப்பறியும் நிபுணராக மாறியவர் செக்ஸ்டன் பிளேக். கதையுலகில் இவரது வயது தெளிவாக குறிப்பிடப்படாவிடிலும் அநேகமாக 37 - 44 வயதுக்குள் இருப்பது போன்ற தோற்றம், Dark Brown வண்ணத்தில் நெற்றியில் V வடிவத்தில் எப்பொழுதும் சுருண்டு இருக்கும் Hair Style, தெளிவான சிந்தனையை வெளிப்படுத்தும் Blue-Grey நிறக் கண்கள் என்று இவரை வர்ணிக்கலாம்.

ஷெர்லக் ஹோல்ம்சை போலவே இவரும்  பேக்கர் தெருவில்தான் குடி இருப்பவர். இவருடைய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு "கருந்சிறுத்தை" என்று பெயர். இவருடைய உதவியாளர் பெயர் டிங்கர். டிங்கர் இவருடைய அணைத்து கேஸ்களையும் பதிவிடுவதோடில்லாமல் இவருக்கு உதவியாகவும் வருவதுண்டு (ஆனால் அது பல வேளைகளில் உபத்திரமாகவும் முடியும்). டிங்கர் பிளேக்கை எப்போதும் "கவ்னர்" என்றே அழைப்பார்  இதைதவிர ஒரு முன்னாள் அமெரிக்க மாகாண ப்ரெசிடெண்ட்டால் பரிசாக அளிக்கப்பட்ட "பெட்ரோ" என்ற ஒரு ஆக்ரோஷமான நாலுகால் தோழனும் இவரது கதைகளில் உண்டு.  இவர்களைத்தவிர பல உதவிபுரியும் கதாபாத்திரங்கள் ரெகுலர் ஆக இவரது கதைகளில் இருந்தாலும், நமது காமிக்ஸ் கதைகளில் அவர்கள்வருவதில்லை வந்ததில்லை என்பதால் இந்த அறிமுகம் போதும்.

செக்ஸ்டன் பிளேக் கதைகள்: 1893இல் முதன் முதலாக "தி மிஸ்ஸிங்Knock out Magazine Jan 2 1954 New Year Highwayman மில்லியனர்" என்ற கதையில் உருவாக்கப்பட்ட செக்ஸ்டன் பிளேக், அதன் பிறகு சுமார் 200 கதாசிரியர்களால் 3000திற்கும் மேற்ப்பட்ட நாவல்களில் எண்ணிலடங்கா சாகசங்களை புரிந்துள்ளார்.

எழுத்துக்கதையில் (நாவல் வடிவில்) வந்துக்கொண்டிருந்த செக்ஸ்டன் பிளேக், முதன் முதலில் காமிக்ஸ் வடிவில் தோன்றியது 1939 ஆம் ஆண்டு தான். இங்கிலாந்தில் அச்சிடப்பட்ட நாக் அவுட் என்கிற வாரந்திர பத்திரிகையில் தான் செக்ஸ்டன் பிளேக்கின் முதல் சாகசம் வெளிவந்தது. மேலும் பல கதைகளின் ஸ்கான்'களை இங்கே சென்று பாருங்கள்.

நாக் அவுட் இதழில் தொடர்ந்து 21 ஆண்டுகள் வெளிவந்த செக்ஸ்டன் பிளேக் கதைகள் 1960 ஆண்டுடன் "கதம் கதம்" ஆகிவிட்டது. பின்னர் ஏழு ஆண்டுகள் கழித்து ஒரு புண்ணியவானின் முயற்சியால் டெலிவிஷன் தொடராக வந்து பெருத்த வரவேற்ப்பை பெற்றது.

TV தொடர் பெற்ற வரவேற்ப்பை பார்த்த பதிப்பாளர்களும் சும்மா இராமல் மறுபடியும் சித்திரக்கதை தொடருக்கு உயிர் கொடுத்தனர். இப்படியாக ஒரு சுபயோக சுபதினத்தில் (1968) வாலியண்ட் வார இதழில் மறுபடியும் காமிக்ஸ் கதாபாத்திரமாக மாறினார் நமது ஹீரோ செக்ஸ்டன் பிளேக். அப்படி வந்த தொடர்களில் இருந்து மூன்று கதைகளை தமிழில் பிரசுரித்தார்  நமது அன்பிற்குரிய எடிட்டர் விஜயன் அவர்கள். இங்கிலாந்தில் காப்பிரைட் பிரச்சினையில்  இதே ஹீரோவின் கதைகள் விக்டர் டிரேகோ  பெயரில் மறுபடியும் (எழுபதுகளின் இறுதியில்) வெளிவந்தது தனி கதை.தமிழில் வெளிவந்த செக்ஸ்டன் பிளேக் கதைகளின் வரிசைப்பட்டியல் உங்களின் பார்வைக்கு.

No

Imprint

Issue

Date

Title

Story Name

English Title

Date

Author

Artist

1 திகில் 17 May 1987 திகில் கோடை மலர் பிசாசு வனம் The Haunted Moor 1969 Valiant Annual Angus Allan Eric Dadswell
2 முத்து 170 Sept 1988 மாயாவிக்கொரு சவால் மர்மக் கோட்டை Phantom Of The Peril Rock Valiant 25-05-68 Angus Allan Eric Dadswell
3 முத்து 175 Apr 1989 வழிப்பறிப் பிசாசு வழிப்பறிப் பிசாசு Ghost of thr Highway Man Valiant 03-03-68 Angus Allan Eric Dadswell

1985 இல் லயன் காமிக்ஸ் வெளியீடு எண் 20ல் "விரைவில் வருகிறார்" என்று விளம்பரப்படுத்தப்பட்ட செக்ஸ்டன் பிளேக்கை தமிழில் அச்சில் பார்ப்பதற்கு ஒன்றரை வருடங்கள் ஆயிற்று. ஆமாம், 1987 திகில் காமிக்ஸ் கோடை மலரில் தான் செக்ஸ்டன் பிளேக் முதன் முதலில் தமிழில் பேசினார். அதற்க்கு பிறகு ரெகுலர் ஆக வந்தார் என்றால் அதுவுமில்லை. வருடத்திற்கு  ஒன்று என்று மொத்தம் மூன்றே மூன்று கதைகளோடு பேக் அப் ஆகிவிட்டார் பிளேக். இந்த கதைகளுக்கு கிடைத்த வரவேற்ப்பு சரியில்லையா? அல்லது கதைகளே சுமார் ரகம்தான? அல்லது எடிட்டருக்கு இந்த கதைகளை பிடிக்கவில்லையா? என்று பல கேள்விகள் எழுந்தாலும் இவற்றிற்கு விடையளிக்கும் வல்லமை விஜயன் அவர்களைத்தவிர வேறு  இல்லை.

இந்த பதிவுகளை படித்தால் நாமே ஒருவகையில் இந்த கேள்விகளுக்கான பதில்களை ஊகித்து விடலாம். ஆனாலும் அவை சரியா என்பதை எடிட்டரே ஊர்ஜிதம் செய்ய முடியும்.

Lion Comics Issue No 20 Africa Sathi Sexton Blake Intro Ad Thigil Comics Issue No 17 Dated May 1987 Kodai Malar Summer Special Thigil Comics Issue No 17 Dated May 1987 Kodai Malar Summer Special Back Wrapper
Lion Comics Issue No 20 Africa Sathi Sexton Blake Intro Ad Thigil Comics Issue No 17 Dated May 1987 Kodai Malar Summer Special Thigil Comics Issue No 17 Dated May 1987 Kodai Malar Summer Special Back Wrapper

லயன் காமிக்ஸ் இதழ் ஆப்ரிக்க சதியில் நிறைய அறிமுக நாயகர்களை பற்றிய குறிப்பு இருந்தது. அவர்கள் யார், என்ன மாதிரியான சாகசங்களை எதிர்ப்பார்க்கலாம் என்று ஒரு அருமையான ட்ரைலர் பார்ப்பது போன்ற அனுபவத்தை தந்தது. இந்த விளம்பரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். இப்படி வந்த விளம்பரங்களில் ஒருவரே செக்ஸ்டன் ப்ளேக். இவருடைய அறிமுகமே மிகவும் வித்தியாசமாக இருந்தது. துப்பறியும் நிபுணர்கள், உளவாளிகள் மத்தியில் ஒரு பேயோட்டும் வீரராக இருப்பது வித்தியாசம் தானே? ஆமாம், பேய் வீரர் செக்ஸ்டன் ப்ளேக் என்பதைத்தவிர வேறெந்த அறிமுகங்களும் இல்லாமல் ஒரு ஆக்க்ஷன் படத்துடன் இவரது அறிமுகம் சிறப்பாக முடிந்தது.

ஒரு தேவை இல்லாத பின் குறிப்பு: இந்த பதிவின் பின்னூட்டங்களை படிக்கையில் காமிரேட்  கனவுகளின் காதலன் அவர்கள் "சும்மா சொல்லக் கூடாது அசப்பில் கமல் மாதிரியே இருக்கிறார்"  என்று சொல்லி இருக்கிறார். கமல் மாதிரி இருப்பது யார்? அவருக்கும் நமது காமிக்ஸ் கதைகளுக்கும் என்ன தொடர்பு? விவரங்கள் அறிய படியுங்கள் - இந்த பதிவு

Thigil Kodai Malar 1986 Page No 92 Sexton Blake Story 1st Page Pisasu Vanam
Thigil Kodai Malar 1986 Page No 92 Sexton Blake Story 1st Page Pisasu Vanam
Thigil Kodai Malar 1986 Page No 94 95 Sexton Blake Story Pisasu Vanam
Thigil Kodai Malar 1986 Page No 96 97 Sexton Blake Story Pisasu Vanam

இதுதான் எடிட்டர் அவருடைய பதிவில் குறிப்பிட்ட பிசாசு வனம் கதை. முதன் முதலாக படிக்கும்போது ஒரு வித்தியாசமான அனுபவத்தை இந்த கதை தந்தது உண்மையே. ஆனால் மூன்று கதைகளையும் ஒருங்கே இந்த பதிவுக்காக படித்தபோது (சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு) ஒருவிதமான டெம்பிளேட் இவரது கதைகளில் இருப்பதை உணர முடிந்தது. அதனைப்பற்றி விரிவாக பதிவின் முடிவில் காண்போம்.

இந்த கதையின் மூலக்கதை வாலியண்ட் ஆண்டுமலரில் வந்தது. இந்த ஆண்டு மலர் இது வரையில் எங்கேயும் ஆன்லைனில் வலையேற்றப்படவில்லை. நமக்காக இதனை ஸ்கான் செய்து அளித்த நண்பர் முத்து விசிறி அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. ஒரு A4 பக்கத்தில் வரும் காட்சிகளை பல பாக்கெட் சைஸ் பக்கங்களில் பிரசுரித்துள்ளார்.

1969 Valiant Annual Page No 96 Sexton Blake Story Haunted Moore  Story By Angus Allan Art By Eric Dadswell
1969 Valiant Annual Page No 96 Sexton Blake Story Haunted Moore  Story By Angus Allan Art By Eric Dadswell

இரண்டாவது கதை - மர்மக் கோட்டை (அ) தங்க வில்லாளி: இந்த கதையை ஒரு பழைய புத்தக கடையில் முதல் 40 பக்கங்கள் கிழிந்து 41வது பக்கத்தில் இருந்து இருப்பது போன்ற நிலையில் வாங்கினேன் (யாரோ ஒரு இரும்புக் கை மாயாவி ரசிகர் வெறியர் பைண்டிங் செய்வதற்காக முதல் நாற்பது பக்கங்களை கிழித்திருக்கலாம்). ஆகையால் பெயர் தெரியாத இந்த கதையை சில பல ஆண்டுகள் நானும் என் அண்ணனும் தங்க வில்லாளி கதை என்றே குறிப்பிடுவோம். அதனாலே தான் இந்த பெயர்.

லேட்டஸ்ட் வெளியீடான லயன் காமிக்ஸ் ஹாட் & கூல் ஸ்பெஷல் அட்டையில் ஹீரோ வேய்ன் ஷெல்டன் பச்சை கலரில் கோட்-சூட் அணிந்து இருந்ததை பல வாசகர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர். அவர்களுக்கு எல்லாம் நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான் - இந்த பச்சை பேன்ட் விவகாரம் ஆரம்பித்தது இப்பொத அல்ல. இந்த படலத்தை ஆரம்பித்து வைத்ததே நம்ம மாயாவி தான். சந்தேகம் இருந்தால் இந்த அட்டையில் மாயாவி அணிந்து இருக்கும் பேன்ட்டை ஒரு முறை பாருங்கள்.

Muthu Comics No 170 Maayavikkoru Savaal 2nd Story Sexton Blake Marma Kottai Phantom of the Peril Rock Cover1

Muthu Comics No 170 Maayavikkoru Savaal 2nd Story Sexton Blake Marma Kottai Phantom of the Peril Rock Cover1

முதலில் திகில் காமிக்ஸில் அறிமுகம் ஆன செக்ஸ்டன் ப்ளேக், ஒரு வருடம் கழித்து இரண்டாவதாக தோன்றியது முத்து காமிக்ஸில் தான். குறிப்பாக இந்த கதை வந்த சீசனில் தான் எடிட்டர் எஸ் விஜயன் அவர்கள் முத்து காமிக்ஸ் இதழிற்கும் முழுமையான பொறுப்பேற்ற நல்ல காரியம் நடந்தது. இந்த சீசனில் தான் பல அற்புதமான கதைகளை (பயங்கரப் பன்னிரண்டு, பச்சை வான மர்மம்,சிங்கத்தின் குகையில், ஜெஸ் லாங்கின் பல கதைகள்) முத்து காமிக்ஸில் வெளியிட்டு மறு பதிப்புகள் இல்லாத புதிய கதைகளை கொண்ட முத்து காமிக்ஸ் வரிசையினை கொணர்ந்தார். இந்த விவரங்களை தனியாக வேறொரு பதிவில் காண்போம்.

இந்த கதையின் முதல் சில பக்கங்களையும் அவற்றின் மூலக்கதையின் முதல் பக்கங்களையும் உங்களின் பார்வைக்கு அளிக்கிறேன். சென்ற கதையை போல முதல் மூன்று பக்கங்களை படிக்கும்போதே கதையின் போக்கு சுலபமாக புரிந்துவிடும் என்பதால் கதையை இங்கே சொல்லப்போவதில்லை.

வழமை போல இந்த செக்ஸ்டன் ப்ளேக் கதையிலும் எதிர்பாராத திருப்பங்களும் திடுக்கிடும் பொறிகளும், அற்புதமான செட்-பீஸ் ஆகஷன் காட்சிகளும் உண்டு. ஒரே ஒரு சிறிய மாற்றம் என்னவெனில் இதில் பெட்ரோவுக்கு பெரிய பங்களிப்பு இல்லை என்பதே

Muthu Comics No 170 Maayavikkoru Savaal 2nd Story Sexton Blake Marma Kottai Story 1st Page Page No 38 39
Muthu Comics No 170 Maayavikkoru Savaal 2nd Story Sexton Blake Marma Kottai Story 1st Page Page No 38 39
Muthu Comics No 170 Maayavikkoru Savaal 2nd Story Sexton Blake Marma Kottai Story 2nd Page Page No 40 41
Muthu Comics No 170 Maayavikkoru Savaal 2nd Story Sexton Blake Marma Kottai Story 3rd Page Page No 42 43
Valiant Dated 25051968 Episode 1 Phantom of the Peril Rock Thanga Villali  Page 01
Valiant Dated 25051968 Episode 1 Phantom of the Peril Rock Thanga Villali  Page 01

மூன்றாவது கதை - வழிப்பறி பிசாசு: செக்ஸ்டன் ப்ளேக்கின் மூன்றாவது (மற்றும் கடைசி) கதை வழிப்பறி பிசாசு ஆகும். இந்த இதழில் தான் முதன் முறையாக (அதே சமயம் கடைசி முறையாகவும்) அட்டையில் நமது ஹீரோ தோன்றுகிறார். இந்த இதழின் அட்டைப்படத்தில் "புத்தம் புதிய படக்கதை" என்று ஒரு வாசகம் இருப்பதை கவனியுங்கள்.

சமீபத்தில் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் இதழிளும்கூட இதைப்போலவே "புத்தம் புதிய படக்கதை" என்று வந்து இருந்ததை பல வாசகர்கள் சரியாக புரிந்துகொள்ளாமல் அறுபதுகளில் வந்த இந்த கதைகள் புத்தம் புதிய கதைகளா? என்று கிண்டலும் அடித்து இருப்பார்கள்.

முத்து காமிக்சின் வரலாற்றினை அறிந்தவர்கள் (மிகவும் குறைவு) ஒரு குறிப்பிட்ட சீசனில் முத்து காமிக்ஸ் இதழ்கள் நிறுத்தப்பட்டதையும், பின்பு வெறும் மறு பதிப்புகளை மட்டுமே வெளியிட்டு வந்ததையும் அறிவார்கள். இப்படி மறு பதிப்புகள் வந்துக்கொண்டு இருந்தபோது எடிட்டர் விஜயன் அவர்களின் முயற்சியால் அதுவரை பதிப்பிக்கப்படாத கதைகளையும் வெளியிட ஆரம்பித்தனர் (கடல் பிசாசு, இரத்த இரவுகள், இதர, இதர). அப்போது இந்த கதைகள் மறுபதிப்பு அல்ல என்பதை வாசகர்களுக்கு தெரிவிக்கவே அட்டையில் இப்படி "புத்தம் புதிய படக்கதை" என்று வெளியிட்டனர்.

அந்த பச்சை பேன்ட் படலம் இங்கேயும் தொடருவதை கவனியுங்கள்.

Muthu Comics Issue No 175 Vazhippari Pisasu Sexton Blake Cover
Muthu Comics Issue No 175 Vazhippari Pisasu Sexton Blake Cover

செக்ஸ்டன் ப்ளேக்கின் கதைகள் பெரும்பாலும் ஒரே டெம்பிளேட்டில் இருப்பதாக பதிவின் ஆரம்பத்தில் கூறி இருந்தேன் அல்லவா? இப்போது அந்த விஷயத்திற்கு வருவோம். ஒரு பாழடைந்த மாளிகை, அதனை சார்ந்த ஒரு கிளைக்கதை, அதனால் ஆள் நடமாட்டம் குறைந்து விடுவது, அந்த மாளிகையில் பொக்கிஷங்கள் பதுக்கப்பட்டு இருப்பது, அதனை அறிந்த ஒருவர் அதற்காக வித்தியாசமான திட்டம் இடுவது, அதனை தடுக்க செக்ஸ்டன் ப்ளேக் முயல்வது, நடுவில் பல பொறிகளில் சிக்கிக் கொள்வது, முடிவில் தன்னுடைய மதி நுட்பத்தால் வெற்றி கொள்வது என்று அனைத்து இந்த மூன்று கதைகளுமே அமைந்து இருக்கின்றன. இதனாலேயே கூட எடிட்டர் இந்த கதை வரிசையினை மூன்று கதைகளுக்கு பிறகு தவிர்த்து இருக்கலாம். இதனை அவரைத்தவிர வேறு யாரும் ஊர்ஜிதப்படுத்த முடியாது.

Muthu Comics Issue No 175 Vazhippari Pisasu Sexton Blake Page  No 04 05
Muthu Comics Issue No 175 Vazhippari Pisasu Sexton Blake Page  No 04 05
Muthu Comics Issue No 175 Vazhippari Pisasu Sexton Blake Page  No 06 07
Muthu Comics Issue No 175 Vazhippari Pisasu Sexton Blake Page  No 08 09
Valiant Dated 09031968 Episode 2 Ghost of the Highwayman
Valiant Dated 09031968 Episode 2 Ghost of the Highwayman

சரி இப்போது மெயின் மேட்டருக்கு வருவோம். உங்கள் அனைவருக்கும் ஒரு சிறிய போட்டி: செக்ஸ்டன் ப்ளேக் கதைகள் (அதாவது வாலியண்ட் இதழில் வந்த கதைகள்) ஒரு குறிப்பிட்ட காமிக்ஸ் ஹீரோவின் கதைகளுடன் "எதேச்சையாக" பொருந்தி இருக்கும். அந்த மற்ற ஹீரோவின் கதையும் தமிழில் வந்துள்ளது. அதனைப்பற்றி நமது முத்து விசிறி அவர்களும் பதிவிட்டுள்ளார்.

  • அந்த மற்றொரு ஹீரோ யார்?

  • அவரது கதைகளுக்கும் செக்ஸ்டன் ப்ளேக் கதைகளுக்கும் என்ன ஒற்றுமை?

  • அந்த மற்றொரு ஹீரோவின் கதை எந்த காமிக்ஸில் வந்தது?

இந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் நபர்களுக்கு நமது பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தில் இருந்து A4 சைசில் வெளிவந்த ஆங்கில காமிக்ஸ் இதழ் ஒன்று இலவசமாக அளிக்கப்படும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Related Posts with Thumbnails