டியர் காமிரேட்ஸ்,
வெல்கம் பேக். நீண்ட நெடுங்காலத்திற்கு பிறகு பதிவிட்டதாலோ என்னவோ தெரியவில்லை, சென்ற பதிவிற்கு பிரம்மாதமான வரவேற்ப்பு.ஒருவேளை நடுவில் ஒரு நான்கு மாதங்கள் பதிவுலகம் பக்கம் வராமல் இருந்ததால் அதற்க்கான ஆதரவுதான் இது என்று நண்பர் இரவுக்கழுகு தெரிவித்தார். அப்படியும் இருக்குமோ என்று வியந்தவாறு இன்று காலை குமுதம் இதழை படித்தபோது அரசு பதில்களில் நம்முடைய காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழில் வெளிவந்த காற்றில் கரைந்த கப்பல்கள் பற்றிய பதிலை படித்தவுடன் ரொம்ப நாட்களாக நம்முடைய காமிக் கட்ஸ் பதிவுகளை இடாமல் இருப்பது நினைவுக்கு வந்தது. உடனடியாக கடந்த இரண்டு மாதங்களில் வெளிவந்த முக்கியமான காமிக் கட்ஸ்'களின் தொகுப்பை இங்கே இந்த பதிவில் வழங்கலாமென்று முடிவெடுத்ததின் விளைவே இந்த பதிவு.
குமுதம் அரசு பதில்கள்: தமிழில் அதிகமாக படிக்கப்படும் வார இதழாகிய குமுதத்தில் மக்கள் விரும்பி படிப்பது / முதலில் படிப்பது அரசு பதில்கள் பகுதியே. நம்முடைய லயன் முத்து காமிக்ஸ் இதழ்களில் எப்படி ஹாட் லைன் / காமிக்ஸ் டைமை நாம் முதலில் படிப்பது போல குமுதத்தில் பெரும்பான்மையினரால் முதலில் படிக்கப்படுவது அரசு பதில்களே.
ஆரம்பத்தில் அரசு என்பது யார்? என்றே ஒரு விவாதம் நடந்துக்கொண்டு இருந்தது. ஆனால் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். இப்போதைய "அரசு" எனக்கு மிகவும் பரிச்சையமானவ்ர். நம்முடைய லயன் முத்து காமிக்ஸ் இதழ்கள் மீது தீராக் காதல் கொண்டவர். சென்ற ஆண்டு புத்தகத் திருவிழாவின்போது நம்முடைய காமிக்ஸ் ஸ்டாலுக்கு வந்து நம்முடைய கம்பேக் ஸ்பெஷல் மற்றும் ஃபுல் செட் ஒன்றினையும் வாங்கிக்கொண்டு சென்றவர் என்பது குறிப்பிட தக்கது.
இந்த அரசு பதில்கள் பகுதியில் நமது காமிக்ஸ் பற்றி மிகவும் பெருமையாக எழுதப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி அரசு, நன்றி குமுதம், நன்றி அதன் எடிட்டர் அவர்களுக்கு.
ஆனந்த விகடன் லூசுப்பையன்: கடந்த பல வருடங்களாக விகடனின் முகவரியாக மாறிவிட்ட நமது லூசுப் பையன் பகுதியில் நமது முத்து காமிக்ஸின் முகவரி (சொல்லப் போனால் தமிழ் காமிக்ஸின் முகவரி?!?) ஆக இருக்கும் (இருந்த?) இரும்புக் கை மாயாவி அவர்களை பற்றி கிண்டலடிக்கும் வகையில் சொல்லப் பட்டு இருந்தது.
பிரபலமான ஒரு பகுதியில் நம்மை பற்றி பேசுகிறார்கள் என்றாலே அது நம்முடைய புகழை பற்றித்தான் சொல்லும். அந்த வகையில் நன்றி லூசுப் பையன், நன்றி ஓவியர் கண்ணா, நன்றி எடிட்டர் of ஆனந்த விகடன்.
Anandha Vikatan Tamil Weekly Issue Dated 26092012 Loosup Paiyan Gig Page No 110 Lion Muthu Comics Mention Panel |
சித்திர பெரிய புராணம்: ஓவியர் - நூலாசிரியர் ராஜம் அவர்களை நம்முடைய தொடர் வாசகர்களுக்கு ஏற்கனவே நன்றாக பரிச்சயம் உண்டு. அவரது லேட்டஸ்ட் படைப்பை பற்றி தினமலர் நாளிதழின் விமர்சன அறிமுகப் பகுதி இங்கே உங்களின் பார்வைக்கு. வாங்கிப் படியுங்கள், மோசமில்லை.
M.S.சுப்புலஷ்மி அவர்களைப்பற்றிய காமிக்ஸ்: சென்ற ஆண்டு ஜூன் மாதம் லக்ஷ்மி தேவநாத் அவர்கள் M.S.சுப்புலட்சுமி அவர்களைப் பற்றிய ஒரு கிராஃபிக் நாவலை வெளியிட்டார். அப்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வெளியீடு அது. எந்த அளவிற்கு அதற்க்கு முக்கியத்துவம் தரப்பட்டது எனில் டெக்கன் குரோனிக்கல் நாளிதழின் சென்னை எடிட்டரே அதனைப்பற்றி நேரிடையாக ஒரு விமர்சனம் எழுதி இருந்தார். அதுமட்டுமில்லாமல், தி ஹிந்து,ஆனந்த விகடன், டைம்ஸ் ஆப் இந்திய என்று பல மீடியா வெளிச்சங்கள் இந்த புத்தகத்தின் மீது விழுந்தது. ஒக்கே, ஒக்கே, தமிழ் காமிக்ஸ் உலகிலும் ஒரு சிறப்பு பதிவு வெளியிடப்பட்டு இருந்தது.
இப்போது,அமர் சித்ரா கதா நிறுவனம் மூலம் M.S.சுப்புலட்சுமி அவர்களைப் பற்றிய ஒரு கிராஃபிக் நாவல் வெளியிடப் பட்டுள்ளது. அதனைப்பற்றி வெளிவந்துள்ள செய்தி தொகுப்பு இங்கே:
Calvin & Hobbes பற்றிய ஒரு அருமையான Search எஞ்சின்: உலக அளவில் புகழ் பெற்ற தினசரி காமிக் ஸ்ட்ரிப் Calvin & Hobbes தொடர்களை பற்றி அறியாதவர்கள் மிகவும் குறைவானவர்களே இருக்க முடியும். இப்போது கூட தி ஹிந்து,டெக்கன் குரோனிக்கல் என்று தினசரி ஸ்ட்ரிப் ஆகவும், சன்டே ஸ்ட்ரிப் ஆகவும் கலக்கிக் கொண்டு இருக்கும் இந்த தொடரின் அனைத்து விஷயங்களையும் முழுமையாக ஒரு வெப்சைட்டில் உட்புகுத்தி இந்த காமிக்ஸ் ஸ்ட்ரிப் தொடரைப்பற்றிய களஞ்சியமாக (அட, இயக்குனர் களஞ்சியம் கிடையாதுங்க, செய்தி களஞ்சியம்) உருவாக்கி இருக்கிறார்.
நம்முடைய லயன், முத்து காமிக்ஸ் பற்றியும் இப்படி ஒரு காமிக்ஸ் Search எஞ்சின் அமைப்புடைய தளம் அமைக்க விருப்பமே. உதவ விரும்பும் டெக்னிகல் நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம்.
ரிப்போர்டர் வேலையை விட்டுவிட்டு ப்ளாக்கராக மாறிய சூப்பர்மேன்: Even though, இரண்டு மாதங்களுக்கு முன்பான நியூஸ் ஆக இருந்தாலும் இது ஒரு முக்கியமான நியூஸ் என்பதால் இங்கே வெளியிடப்படுகிறது. தன்னுடைய நியூஸ் ரிப்போர்டர் வேலையை கிளார்க் கென்ட் (அதாவது சூப்பர்மேன்) ராஜினாமா செய்து விட்டார். இனிமேல் ஒரு ப்ளாக்கராக இருப்பார் என்ற இந்த தகவல் பல தினசரிகளில் அலசப்பட்டு இருந்தது. CNN-IBN நியூஸ் சேனலில் கூட இதனைப்பற்றிய ஒரு சிறப்பு தகவல் அடங்கிய கேப்சியூல் ஒளிபரப்பினார்கள்.
மற்ற காமிக்ஸ் தகவல்கள்: இவை இரண்டுமே Self Explanatory நியூஸ் வகையை சார்ந்தவை என்பதால் படித்து இன்புறுங்கள்.
The Hindu Daily Chennai Edition Page No 8 Sunday Magazine Dated Sunday 28th Oct 2012 Childrens Books |
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.