Dear ComiRades,
இன்றைய சென்னை புத்தக கண்காட்சியை பற்றிய போட்டோ பதிவில் நுழையும் முன்னர் இதற்க்கு முன்பு வந்துள்ள (சம்பந்தப்பட்ட) மற்ற பதிவுகளை ஒரு முறை பார்த்து விடுங்கள்:
4. To Be posted very soon
5. To be posted very soon
இன்றைய பதிவுக்கு நுழையும் முன், இன்றைய ஸ்டார் அட்ராக்ஷன் பற்றி சொல்லி விடுகிறேன். இயக்குனர் மிஷ்கின் ஒரு காமிக்ஸ் ரசிகர் வெறியர் என்பது நமகெல்லாம் தெரிந்ததே. உண்மையில் கடந்த சனிக்கிழமை அன்று லயன் கம்பேக் ஸ்பெஷலை அவர் வெளியிடுவதாகவே இருந்தது. ஆனால் திடீரென்று அவரது படத்தின் ஷூட்டிங்கில் நடந்த ஒரு மாறுதலால் அவரால் கடைசி நேரத்தில் வர இயலவில்லை. அதனை சரிகட்டும் விதத்தில் இன்று கொட்டும் மழையில், மக்கள் வெள்ளத்தில் அவர் புத்தக கண்காட்சிக்கு வந்து ஒரு புல் செட் காமிக்ஸ்களையும், இரண்டு கம்பேக் ஸ்பெஷல் இதழ்களையும் வாங்கிச் சென்றார். தொடர்ந்து தமிழ் காமிக்ஸ் வெளியீட்டிற்கு ஆதரவு அளிக்கும் அவருக்கு நன்றி.
CBF Day 07 Photo 35 Stall No 372 Kumaran Sir with Director Mysskin with CBS | CBF Day 07 Photo 36 Director Mysskin with Veluchami & Radhakrishnan |
நேற்று மாலை புத்தக கண்காட்சியில் நடந்த சம்பவங்கள் ஒரு தமிழ் தொலைகாட்சி மெகா சீரியலுக்கு நெடுந்தொடருக்கு ஈடானது. வழக்கமாக முத்துமாரி டிராவல்ஸ் மூலமாக புத்தகங்களை சிவகாசியில் இருந்து சென்னைக்கு அனுப்பி வந்துகொண்டிருந்த பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தினர், நேரமின்மையால் நேற்று மட்டும் KPN சர்வீஸ் மூலம் கம்பேக் ஸ்பெஷலை அனுப்பி வைத்தனர். வழக்கமாக வரும் பார்சல் என்றால் (முத்துமாரி) அது காலை ஆறு மணிக்கோ, அல்லது பத்தரை மணிக்கோ பெற்றுக்கொள்ளலாம். ஆனால் KPN பார்சலை மதியம் மூன்றரை மணி வரையிலும் கொடுக்காமல் இழுத்தடிக்க, வேறு வழியில்லாமல் அங்கிருந்து ஸ்டாலுக்கு வந்துவிட்டார்கள் நம் ஸ்டால் நண்பர்கள் (திரு ராதா கிருஷ்ணன் மற்றும் வேலுச்சாமி). ஏனென்றால் மூன்று மணியில் இருந்தே கம்பேக் ஸ்பெஷலை வாங்க மக்கள் கூட்டம் வந்துசேர, அதனால் கையில் ஆள் தேவைப்படுகிறது என்று அவர்கள் ஸ்டாலுக்கு வந்து விட்டார்கள்.
ஐந்து மணிக்கு KPN பார்சல் சர்வீசில் இருந்து போன் வருகிறது.உடனடியாக வேலுச்சாமி அதனை பெற்றுக்கொள்ள சென்றுவிட, இடைப்பட்ட நேரத்தில் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் வந்து கம்பேக் ஸ்பெஷல் உள்ளதா? என்று விசாரித்து விட்டு சென்றார். ஏற்கனவே புத்தக வெளியீடு விழாவிலேயே அவர் கம்பேக் ஸ்பெஷலை பெற்று இருந்தாலும் அவருடைய நண்பர்களுக்காக இந்த விசாரிப்பாம். விரைவில் அவருடைய கம்பேக் ஸ்பெஷல் விமர்சனத்தை எதிர்பார்க்கலாம். இதற்கிடையில் சிங்கையில் இருந்து புத்தக கண்காட்சியில் லயன் காமிக்ஸ் வாங்க வேண்டும் என்று சென்னைக்கு விரைந்து வந்த தலைவர் முத்து விசிறி அவர்களுடன் நான் ஸ்டாலில் நுழையும்போது மணி ஐந்தரை.
அப்போதே கருமேகங்கள் தமிழ்நாட்டை சூழ்ந்துள்ள பிரச்சினைகளை போல சூழ்ந்துக்கொண்டு பயமுறுத்த, மழை வருமென்ற எதிர்ப்பார்ப்புடனே ஸ்டாலில் நுழைந்தோம். முத்து விசிறி அவர்கள் "மழை வந்தால் ஒழுகுமா?" என்று விசாரித்துக் கொண்டு இருக்கும்போதே சொல்லி வைத்தார்ப்போல அடை மழை ஆரம்பித்தது. ஸ்டாலில் குறைந்தது பத்து பேராவது கம்பேக் ஸ்பெஷலை வாங்கிவிடவேண்டுமென்ற ஆவலுடன் காத்திருந்தார்கள். மழை காரணமாக கூரையில் இருந்து ஒழுக, அவசர அவசரமாக பில் போடும் டேபிளை நகர்த்தி புத்தகங்களை எல்லாம் பத்திரப்படுத்திக்கொண்டு இருக்கும்போதே சுந்தரவரதன் கேட்க ஆரம்பித்து விட்டார் "கம்பேக் ஸ்பெஷல் எப்போ போடுவீங்க? எப்போ போடுவீங்க?" என்று. ஆட்டோவில் புத்தக பார்சலை கொண்டு வந்துக்கொண்டிருந்த வேலு, மழை காரணமாக தாசப்பிரகாஷ் பக்கமாக ஒதுங்க, அதற்குள் ஆர்வம் காரணமாக நம் மக்கள் துரத்த, கொட்டும் மழையில், டிராபிக் நெரிசலில் ஒரு வழியாக கம்பேக் ஸ்பெஷல் புத்தகங்களுடன் வந்து சேர்ந்தார் வேலு.
ஆனால் புத்தக கண்காட்சியில் வாசல் வரை மட்டுமே ஆட்டோக்கள் அனுமதிக்கப்படும். அதுவுமின்றி அந்த புத்தக பார்சலை தூக்குவது மிகவும் சிரமம் என்பதால் பபாசி ஆபிசில் சென்று ஒரு டிராலி கிடைக்குமா? என்று கேட்டால், அவர்கள் "சார், நீங்கள் ஸ்டால் ஒனர்களிடம் கேளுங்களேன்?" என்று ஐடியா கொடுக்கிறார்கள். "கொய்யால, நானே ஸ்டால் ஒனர்தாண்டா" என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே வேறு வழியில்லாமல் புத்தகங்களை தூக்க வந்தால்,அந்த அவசரக்கார ஆட்டோ ஓட்டுனர் அந்த பார்சலை நகர்த்த முயல, அது ஆட்டோவில் பின்னால் உட்காரும் சீட்டிர்ற்கும், ஓட்டுனர் சீட்டிர்ற்கும் நடுவில் இருக்கும் இடைவெளியில் சிக்கிக் கொள்ள, அதனை அங்கிருந்த எடுக்கவே முடியாமல் போய் விட்டது. ஸ்டாலில் வேறு மக்கள் பொறுமை இழந்துவிட, வேறு வழியில்லாமல் அந்த பார்சலை கிழித்து புத்தகங்களை தனித்தனியே எடுத்தே ஸ்டாலுக்கு கொண்டு செல்ல வேண்டியதாகிவிட்டது.
அது என்னவோ தெரியவில்லை, இந்த கம்பேக் ஸ்பெஷல் இதழிற்கும் பிரச்சினைகளுக்கு அப்படி ஒரு பொருத்தமாக இருக்கிறது. சிவகாசியில் இதனை பிரின்ட் செய்யவோ, பைண்ட் செய்யவோ முடியாமல் ஒரு நாளைக்கு எட்டு அணி நேரம் மின்சாரத்தடை இருக்க, அப்படியும் மீறி கொண்டு வரும் புத்தகங்களுக்கு இப்படி எல்லாம் பிரச்சினைகள். இருந்தாலும், இவை அத்துனையும் மீறி இந்த புத்தகத்தை ஒரு குறுகிய கால இடைவெளியில் கொண்டு வந்து சாதனை புரிந்திட்ட எடிட்டர் சாருக்கும், அவரது படையினருக்கும் ஒரு ராயல் சல்யூட்.
இந்த பதிவில் சில காமிரேட்டுகளின் பெயர்கள் மறந்துவிட்டன. ஒவ்வொரு போட்டோவுக்கும் இலக்கம் இடப்பட்டிருப்பதால், நண்பர்கள் பெயர் தெரியாத காமிரேட்டுகளை இனம்கண்டு கொண்டால் அவர்களின் பெயர்களை இந்த பதிவின் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். ஒவ்வொரு போட்டோவையும் கிளிக் செய்தால் அது வேறொரு விண்டோவில் பெரிதாக காட்சியளிக்கும்.
இந்த படத்தில் நம்முடைய எடிட்டர் சாருடன் இருக்கும் நண்பர் ஜான் சைமன் சார் ஒரு மிகப்பெரிய, மிகத்தீவிரமான காமிக்ஸ் ரசிகர். சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் இவர், அந்த நெரிசலுக்கிடையிலும் குடும்பத்துடன் வந்து இருந்தார். சென்னை புத்தக கண்காட்சியில் நம்முடைய கம்பேக் ஸ்பெஷல் வெளியீட்டிற்காக ஸ்பெஷலாக வந்த அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. ஜான் சைமன் சார், மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள். இந்த போட்டோ மூன்றாவது நாளில் எடுக்கப்பட்டதாகும். விரைவில் இதைப்பற்றியும், புத்தக வெளியீட்டை பற்றியும் ஒரு முழு நீள பதிவை எதிர்பாருங்கள்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
Hi Viswa,
ReplyDeleteWill the Comeback special & Rattha Padalam will be available? I missed to buy them in my first visit. Or is there any other changes to buy them other than in Book fair. Because I am leaving to my Home Town tomorrow evening & will come back only after the Book fair is over. Thanks
நான் உங்களது வலைப்பூவை நீண்டகாலமாக வாசிக்கிறேன். ஆனால் உங்களை சந்திததில்லை. நேற்று புத்தகம் வாங்கிய பின் எடுத்த புகைப்படத்தை பதிவேற்றியதற்கு நன்றி. - சுந்தர் (மஞ்சள் கோடு போட்ட சட்டை)
ReplyDelete//இரமேஷ் இராமலிங்கம்Jan 12, 2012 02:11 AM
ReplyDeleteHi Viswa,
Will the Comeback special & Rattha Padalam will be available? I missed to buy them in my first visit. Or is there any other changes to buy them other than in Book fair. Because I am leaving to my Home Town tomorrow evening & will come back only after the Book fair is over. Thanks//
Ramesh, You an buy Come back special and XIII Jumbo special from today onwards. Currently today we have about 275 copies of Comeback special and some XIII Jumbo special as well.
Please try to visit before you leave to your hometown, as we are not selling these books anywhere else.
Hi Viswa,
ReplyDeleteI think u forgot my name ... :) Photo number 34.
Nagarajan S
ஹாய் விஷ்வா,
ReplyDeleteBook Fairஇல் நடைபெற்ற சம்பவங்களை வைத்தே Adventure காமிக்ஸ் உருவாக்கும் அளவுக்கு அவை அத்துணை சுவாரசியமாக இருந்தன. காமிக்ஸ் வாசிக்கும் பிரபலங்களை போட்டோவில் காணும்போது மகிழ்ச்சியாகவும் கர்வமாகவும் இருக்கிறது :). இன்னும் புதிய காமிக்ஸ் வாசகர்கள் இதன்மூலம் உருவாகி இருப்பார்கள் என்பது சர்வநிச்சயம்.
மிஸ்கின் எதாவது ஒரு காமிக்ஸ் ஹீரோவினை தமிழில் படமாக எடுத்தார் என்றால் நன்றாக இருக்கும்.
Vishwa,
ReplyDeleteone more question...what time the stall opens in morning tomorrow?sorry to bother you..
நான் அன்று 4 pm to 5 pm வரை அந்த ஸ்டாலில் தான் இருந்தேன். 5 .30pm க்கு இவ்வளவு அளவில் ஒரு நிகழ்வு நடந்துள்ளதை அட்டென்ட் பண்ணாதது வருத்தம் அளிக்கிறது.
ReplyDeleteஅனைத்து காமிக்ஸ் வாசகர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
ReplyDeleteநேற்று மதியம் முழுவதும் அங்குதான் இருந்தேன்.இன்று நான் புத்தக கண்காட்சிக்கு வர இருக்கிறேன். நீங்கள் வருவீர்களா?
It is amazing that the sales have been so good. This is very good news for Muthu/Lion fans like me. Maybe PP should have a permanent showroom in Madras. Best wishes to the editor for continued success.
ReplyDeleteநன்றி நண்பரே இன்றுதான் இந்த பதிவை பார்க்க வாய்ப்பு கிடைத்தது!
ReplyDelete