Pages

Thursday, January 05, 2012

17 #CBF12 - 35th Chennai Book Fair 2012 – Day 0 - 35வது சென்னை புத்தக கண்காட்சி 2012 - ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்

அன்பு காமிரேட்டுகளே என்று நான் இந்த பதிவை ஆரம்பிக்க நினைத்தாலும் Dear ComiRades என்று அழைக்கும் அந்த Feel தமிழில் வரவில்லை என்பதே நிதர்சன உண்மை.  ஆனால் தமிழில் பதிவெழுத ஆரம்பித்து விட்டு வழமை போல ஆங்கிலத்தில் விலித்தால் அது தவறுதானே?

என்னடா இவன் திடீரென்று தமிழில் பதிவிடுகிறானே என்று என்ன வேண்டாம். இன்று மதியம் எங்கள் பரமார்த்த குரு பாரா அவர்களிடம் நெடுநாள் கழித்து பேசினேன்.அநேகமாக நாளை அவர்களை சந்திப்பேன் (என்றுதான் நினைக்கிறேன்). சென்ற தடவை மாதிரி திட்டு வாங்காமல் (அதென்ன,தமிழ் காமிக்ஸ் உலகம் என்று பெயர் வைத்து விட்டு ஆங்கிலத்தில் எழுதுவது?) இருக்கவே இந்த திடீர் மாற்றம். Hopefully பாரா இங்கே வர மாட்டார் என்று நம்புகிறேன்.

இந்த 35வது சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு தினமும் ஒரு பதிவிடலாம் என்று இருக்கிறேன் (நன்றி பத்ரி, பாரா, ஹரன் பிரசன்னா மற்றும் இட்லிவடை). ஆகையால் வழக்கமான மொக்கைகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, முடிந்த அளவுக்கு போட்டோக்களை மட்டுமே கொண்ட பதிவாக இந்த தொடர் பதிவுகளை திட்டமிட்டுள்ளேன் (பின்னே, மொக்கையை விட்டா நம்மிடம் எழுத வேறென்ன சரக்கு இருக்கிறது?). நாளைதான் இந்த புத்தக கண்காட்சி துவங்க உள்ளது. நாளைய துவக்கவிழா நிகழ்ச்சி நிரல் இதோ:

 

CBF12 Time Table
CBF12 Inaugural Function

சரி, ஒவ்வொரு நாளும் பதிவிடும் வகையில் காமிக்ஸ்/அனைத்து வயதினரையும் சார்ந்த சிறுவர் இலக்கியம் சம்பந்தப்பட்ட சரக்கு உள்ளதா என்று வினவும் தோழர்களே (கவனிக்கவும், வினவு தோழர்கள் அல்ல), சற்று பொறுக்கவும். சென்ற ஆண்டு இந்த புத்தக கண்காட்சி சம்பந்தப்பட்ட இந்த இரண்டு பதிவுகளையும் (CBF 2011 Post 1, CBF 2011 Post 2) மீண்டும் படிக்கவும். இவற்றை மீறி புதிய புத்தகங்கள் ஒன்றிரண்டே வரப்போகின்றன. ஆகையால் இந்த தளத்தில் தினசரி பதிவுகள் வேறு வகையில் இருக்கும். குறிப்பாக நம்முடைய லயன் மற்றும் முத்து காமிக்ஸ் விற்பனையாகும் ஸ்டால் எண் 372க்கு வருகை தரப்போகும் அனைத்து காமிக்ஸ் ரசிகர்களின் புகைப்படங்களையும், சில பல வாசகர்களின் வீடியோ பதிவுகளையும் இங்கே வலையேற்ற உத்தேசம்.

சரி, இன்றைய கதைக்கு வருவோம். இன்று மாலை சக தோழர்கள் இருவரின் புத்தக வெளியீடு நடைபெற இருந்தது (அதில் ஒருவர் நம்ம யூத்து பதிவர் எழுத்தாளர்).ஆனால் அலுவல் நிமித்தமாக அரசாங்க உயர் அதிகாரி ஒருவரை கோட்டையில் சந்திக்கும் அப்பாயின்ட்மென்ட் வேறு மாலை ஐந்தரை மணிக்கு இருந்தது. வழக்கம் போல ஐந்து நிமிடத்தில் மீட்டிங்கை முடித்துவிட்டு நண்பர்களின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றுவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இந்த ஆட்சியில் நடப்பதேல்லாமே விசித்திரமாக இருக்கிறது. அந்த அரசு அலுவலர் மிகவும் பொறுப்பாக அனைத்து விஷயங்களையும் ஆற,அமர கேட்டறிந்துகொண்ட பின்னரே (முக்கிய விவரங்களை குறிப்பெடுத்துக்கொண்டார்) மீட்டிங்கை முடித்தார். அப்போது மணி எட்டு ஆகிவிட்டது. சென்னையின் சிங்கார சென்னையின் மாலைநேரத்து போக்குவரத்து நெரிசல்களைப்பற்றி மிஸ்ஸஸ் ஒபாமாவிர்க்கே தெரியுமளவுக்கு பிரபலம் என்பதால் அந்த எண்ணத்தை Hand Wash செய்துவிட்டு,  நேராக புத்தக கண்காட்சி நடக்கும் இடத்திற்கு விரைந்தேன் (தோழர்கள் மன்னிக்க, ஆனால் உங்களுக்கு இந்த வாரம் சனிக்கிழமை ஒரு விருந்து அளித்து இந்த மிஸ் ஆன மேட்டரை சரிகட்டுவோம்,எஸ்-நம்ம ஆளு சனிக்கிழமை சென்னைக்கு வர்றாரு).

என்னைப்போலவே நாளைக்கு காமிக்ஸ் புத்தகங்களை வேட்டையாட வரவிருக்கும் நண்பர்களே, படத்தில் அம்புக்குறியிட்டிருக்கும் வழியை பின்தொடருங்கள் (நன்றி தினத்தந்தி,அவங்கதானே இந்த அம்புக்குறி மேட்டரை அதிகமாக உபயோகிப்பது?) .

35th Chennai Book fair 2012 Official Stall Allocation

ஒக்கே, மொக்கை போட்டது போதும்.இன்றைய போட்டோ பதிவுக்கு செல்வோமா? ஒவ்வொரு போட்டோவையும் கிளிக் செய்தால் அது வேறொரு விண்டோவில் பெரிதாக காட்சியளிக்கும். ஆகையால் போட்டோ சிறியதாக உள்ளது என்று கவலை கொள்ளவோ, கமென்ட் போடவோ வேண்டியதில்லை. See me in action.

CBF Day 00 Photo 01 1st Gateway from the Left End CBF Day 00 Photo 02 Raj TV Entrance To Enter 2nd Alley CBF Day 00 Photo 03 Raj TV Entrance To Enter Comics Alley
CBF Day 00 Photo 01 1st Gateway from the Left End CBF Day 00 Photo 02 Raj TV Entrance To Enter 2nd Alley CBF Day 00 Photo 03 Raj TV Entrance To Enter 2nd Alley Comics Alley
CBF Day 00 Photo 04 Stall No 372 Banner & Books Are Stacked CBF Day 00 Photo 05 Stall No 372 Comics Bundles Are Unpacked By Radhakrishnan & Veluchami CBF Day 00 Photo 06 Stall No 372 Our Evergreen Heroes in a Banner
CBF Day 00 Photo 04 Stall No 372 Banner & Books Are Stacked CBF Day 00 Photo 05 Stall No 372 Comics Bundles Are Unpacked By Radhakrishnan & Veluchami CBF Day 00 Photo 06 Stall No 372 Our Evergreen Heroes in a Banner
CBF Day 00 Photo 07 Stall No 372 Comics Packs Set in Racks CBF Day 00 Photo 08 Stall No 372 Comics Packs Set in Racks CBF Day 00 Photo 09 Stall No 372 Comics Packs Set in Racks
CBF Day 00 Photo 07 Stall No 372 Comics Packs Set in Racks CBF Day 00 Photo 08 Stall No 372 Comics Packs Set in Racks CBF Day 00 Photo 09 Stall No 372 Comics Packs Set in Racks
CBF Day 00 Photo 10 Stall No 372 Comics Packs Set in Racks CBF Day 00 Photo 11 Stall No 372 Comics Packs Set in Racks CBF Day 00 Photo 12 Stall No 372 Comics Packs Set in Racks
CBF Day 00 Photo 10 Stall No 372 Comics Packs Set in Racks CBF Day 00 Photo 11 Stall No 372 Comics Packs Set in Racks CBF Day 00 Photo 12 Stall No 372 Comics Packs Set in Racks
CBF Day 00 Photo 13 Stall No 372 Lion & Muthu Comics 108 Books in 1 Set Complete Pack CBF Day 00 Photo 14 Stall No 372 The Men Who Matter Mr RadhaKrishnan & Mr Palanichami

This book may not be available tomorrow itself. Wait and watch this space for more details

CBF Day 00 Photo 13 Stall No 372 Lion & Muthu Comics 108 Books in 1 Set Complete Pack CBF Day 00 Photo 14 Stall No 372 The Men Who Matter Mr RadhaKrishnan & Mr Palanichami

Lion Comics ComeBack Special Jan 2012 Front Cover

இந்த முறை புத்தக கண்காட்சியில் நம்முடைய வேலையை சுளுவாக்க, ஒரு வழியை கண்டறிந்து இருக்கிறார்கள்.அதாவது எந்த காமிக்ஸ் வாங்கவேண்டும், எது இருக்கிறது, எது இல்லை என்று குழம்பாமல் இருக்க அவர்களே புத்தகங்களை ஒரு குறிப்பிட்ட முறையில் பேக் செய்து நமக்கு செட் ஆக அளிக்கிறார்கள். புதிய காமிக்ஸ் அன்பர்கள் கடந்த பத்து பனிரண்டு ஆண்டுகளில் வந்த அனைத்து புத்தகங்களையும் கொண்ட சூப்பர் பேக்’ஐ வாங்குதல் நலம். 108 புத்தகங்கள் கொண்ட இந்த செட் 900 ரூபாய்க்கே கிடைக்கிறது (10 சதவீதம் டிஸ்கவுன்ட் போக).

பத்து சதவீதம் கழிவு போக,மொத்த விலை-காமிக்ஸ் செட்டுகள் Comics Packs For Sale

  1. லயன் காமிக்ஸ்+முத்து காமிக்ஸ் புல் செட் Rs 900 (108 Books from the last 10-12 years)
  2. டெக்ஸ் வில்லர் கதைகள் கொண்ட செட் Rs 125
  3. கௌபாய் சாகசக்கதைகள் கொண்ட செட் Rs 100
  4. கார்ட்டூன் கதைகள் (லக்கிலூக்,சிக்பில்,மதியில்லா மந்திரி) Rs 100
  5. துப்பறியும் டிடெக்டிவ் ஹீரோக்களின் சாகசங்கள் Rs 100
  6. லயன் + முத்து காமிக்ஸ் கோல்டன் ஒல்டீஸ் கலெக்சன் Rs 150
  7. இரத்தப்படலம் 1-18 தமிழில் வந்த மிகச்சிறந்த காமிக்ஸ் பொக்கிஷம் Rs 200
  8. மர்ம மனிதன் மார்டின் + மாண்ட்ரேக் சாகசங்கள் கொண்ட செட் Rs 50
  9. பெண்ணுருவில் ஒரு 007 - மாடஸ்டி பிளைசி சாகசக்கதைகள் கொண்ட செட் Rs 50
  10. அலட்டலில்லா டிடெக்டிவ் C.I.D. ராபின் சாகசங்கள் கொண்ட செட் Rs 50
  11. ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நமது லயன் காமிக்ஸ் இதழ்கள் கொண்ட செட் Rs 50

நண்பர்களே,நாளைக்கு காலை ஐந்து மணிக்கே கோவிலுக்கு செல்லவேண்டியுள்ளதால் மொக்கையை இத்துடன் முடித்துக்கொண்டு செல்கிறேன். முடிக்கும் முன்பாக இந்த அட்டகாசமாக பேனரை உங்களின் பார்வைக்கு புத்தாண்டு பரிசாக சமர்ப்பிக்கிறேன்

Official Banner

Well, that's all for the time being. As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget in the Blog.

Thanks & Regards,

King Viswa.

17 comments:

  1. என்னென புத்தகங்கள் வாங்க;லாம் என்று ஒரு பட்டியல் வழங்கினால் நலம்

    ReplyDelete
  2. Nice pictures. I have spoken to Radhakrishnan many times over the phone from the US regarding my subscription, but this is the first time I am seeing his picture (I presume he is the older gentleman on the right). Wish I were in India at this time to visit the book fair.

    ReplyDelete
  3. //BN USA said..
    Nice pictures. I have spoken to Radhakrishnan many times over the phone from the US regarding my subscription, but this is the first time I am seeing his picture (I presume he is the older gentleman on the right). Wish I were in India at this time to visit the book fair.//

    You are right. He is the same one with the Shirt & Dhothi. The older gentleman, as you put it.

    Wait for 3/4 days more. i may post some pics that you have never seen.

    ReplyDelete
  4. தலைவரே,

    இந்த செட்டுகளில் காமிக்ஸ் கிளாசிக்ஸ் தென்படவில்லையே? அது தனி செட்டா?

    ReplyDelete
  5. இன்று நான் வருகிறேன். உங்களை சந்திக்க முடியுமா?

    ReplyDelete
  6. ஹாய் விஷ்வா,
    தமிழில் எழுதபோவதாக வாக்களித்துளீர்கள்.. என்னைபோன்றவர்களுக்கு நல்ல விஷயம்தான் :)..

    இவ்வாறு புத்தக செட்டாக விற்கும் ஐடியா நன்றாக இருக்கிறது. புதிய காமிக்ஸ் வாசகர்களை இது கவரும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  7. King Vishwa

    One question.

    Will the Rs 900 (108 Books from the last 10-12 years) full set have all the comics including the comics packs 2 to 11 in the list you have given above?

    Please clarify.

    ReplyDelete
  8. @Srini V Hi Srini, Yes-The Complete Set Will Comprise Off All The Other Sets Mentioned Below.

    ReplyDelete
  9. hi vishwa, isaw your twitter feed on lion come back special and got interest to visit book fair. I have bought the entire set today. I missed the pocket sized comics very much. Are they still coming now? D.S.Gnna Sambandhan

    ReplyDelete
  10. @King Viswa Ok,That was the twitter feed DM That you sent and hereon kindly comment in the comments page itself. As for as your question is concerned, no we do not have pocket sized comics classics anymore.

    ReplyDelete
  11. "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்" - திருவள்ளுவர்

    பாராட்டுக்கள் விஸ்வா!

    ReplyDelete
  12. Guys

    Just bought the entire set(900) today evening..

    One information ...come back edition will be available tomorrow at the stall ..

    ReplyDelete
  13. விஸ்வா... இது முன்னாள் ஹாலிவுட் பாலா!! :)

    ReplyDelete
  14. தல.. நேத்துதான் இங்க வந்தேன். ஆனா புக் ஃபேர் அட்டண்ட் பண்ண முடியாத சூழ்நிலை. முடிந்தால் சென்னையில் மீட் பண்ணுவோம் தல.

    108 புக் பேக்கை வேறு யாரை வச்சாவது வாங்க பார்க்கறேன் தல

    ReplyDelete
  15. தல.. இதே மாதிரி ‘ஆர்ச்சி’, ‘கபீஷ்’ எல்லாம் கிடைக்குமா?

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails