Pages

Tuesday, January 14, 2014

5 Comic Cuts 54 – News 54: Lion Muthu Comics Editor S.Vijayan’s Interview in Sun TV News Channel

Dear ComiRades,

Welcome back to TCU. We all knew that “content is the king” days are gone. With due respect to content (Which is about 30%), the other ingredients for success in Media are Distribution (40%) and Promotion (30%). This concept is applicable for all new generation media like TV, Magazine, Films etc.

We, Lion-Muthu Comics, are always strong when it comes to content. The remaining 2 aspects are what we lack. For promotion, we used to go for auxiliary mode with allied media for the last 3 years (Remember Kungumam story & Kumudam Arasu Pathilgal for  XIII Jumbo Special?). Distribution was also strengthened with places like Discovery Book Palace, Landmark Bookstore (All 4 branches in Chennai). From this year onwards, every quarter, there will be a major spike in our promotion of the Comics. The 1st one for the quarter is this: a “One-to-one interview with the Number 1 News Channel in Tamil” for Comics. Here, Lion Muthu comics Group editor S.Vijayan takes over with how the interview went. Read on:

சனிக்கிழமை புத்தக விழா காலை 11 மணிக்கே துவங்கி விட்ட போதிலும், சன் செய்திகள் தொலைகாட்சியினில் - 2014 புத்தக விழாவின் செய்திச் சேகரிப்பு வரிசையில் காமிக்ஸ் வெளியிடும் நம்மைப் பற்றி ; பொதுவாக காமிக்ஸ் பற்றிப் பேசிட அவர்களது ஸ்டுடியோவிற்கு நான் வர இயலுமா ? எனக் கோரி இருந்தனர் ! 'புத்தக விழாவிலேயே ; நமது ஸ்டாலிலேயே நேர்முகக் காணலை வைத்துக் கொண்டால் சுலபமாகி விடுமே !' என்று நான் அபிப்ராயப்பட்டேன் ! ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாய் இது போன்ற சின்ன பேட்டிகளுக்கும்,  நண்பர்களின் முழு நீள கேள்விகள் session க்கு பதில் சொல்லியும் இருந்ததால் அதே போலச் சமாளித்து விடலாமே என்று பார்த்தேன்!

ஆனால் - 'ஸ்டுடியோவில் எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்' என சன் செய்திகளின் எடிட்டர் கருதியதால் தலையாட்டி வைத்திருந்தேன். சனி பகலில் சன் குழும அலுவலகத்தினுள் நானும், ஜூனியரும் நுழைந்த போதே "ஆவென" விரிந்த வாய் மூட நேரம் நிறைய எடுத்தது ! 10 மாடிகள் ; பிரமாண்டமான ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு செயல்பாடு என தொலைக்காட்சித்துறையின் உச்ச திறமைசாலிகள் அங்கு பம்பரமாய் சுழலுவதை முதன்முறையாப் பார்க்க வாய்ப்புக் கிட்டியது ! நேசமாய் வரவேற்ற திரு நெல்சன் அவர்கள் முதல் மாடியில் இருந்த ஸ்டுடியோவினை காட்டி விட்டு, இலக்கியம் + சினிமா தொடர்பாய் ஒரு நேர்காணலை நடத்தச் சென்றார். 'கண்ணாடிக்குப் பின்னே இருந்த production அறையில் இருந்து பாருங்களேன் !' என என்னையும், விக்ரமையும் அமரச் செய்தார்!

3 காமெராக்கள் ; எண்ணற்ற தொழில் நுட்பச் சாதனங்கள் ; அவற்றை லாவகமாய்க் கையாளும் கலைஞர்கள் என அந்தச் சின்ன அறையே பரபரப்பாய் இருக்க, கண்ணாடிக்கு மறு பக்கமோ பேட்டி துவங்கியது ! கேள்விகளை சரமாரியாய் திரு நெல்சன் பாய்ச்ச ; சற்றும் சளைக்காது, சரளமாய் பதில்கள் வந்து விழுந்தன ! அது வரை ஒரு பாவ்லாவில் வண்டியை ஒட்டி வந்திருந்த எனக்கு உள்ளுக்குள் உதறத் தொடங்கியது ! காமிக்ஸ் என்பது நமக்கு நேசமானதொரு விஷயம் தான் ; அது தொடர்பான கேள்விகளுக்கு homework பண்ணிக் கொண்டு வராமலே பதிலளிக்க முடியும் தான் என்ற நம்பிக்கை உள்ளுக்குள்ளே பூரணமாய் இருந்த போதிலும், முதன் முறையாய் இது போன்றதொரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் நேரம் சொதப்பித் தொலைக்காமல் இருந்தால் போதும்டா சாமி!! என்ற சிந்தனையே உள்ளுக்குள் ஓடியது ! நீண்ட காத்திருப்புக்குப் பின் மதியம் மூன்று மணிக்கு என்னை கிரீன் ரூமுக்குள் அழைத்தனர் - ஷூட்டிங் துவங்கலாமென்று சொல்லி ! திரு. நெல்சன் தான் பேட்டி எடுக்க வருவார் என்ற எதிர்பார்ப்பில் நான் உள்ளே இருந்த சொகுசுச் சேரில் சென்று அமர - இளம் பெண் நிருபரான Ms.அபர்ணா உள்ளே வந்தார் சின்னதொரு புன்சிரிப்போடு !

'ஆஹா....உளறாமல் இருக்கணுமே சாமி !" என்று நொடிக்கொரு முறை உலர்ந்து போய்க் கொண்டிருந்த நாக்கோடு மனசுக்குள் இன்னும் தீவிரமாய்  பிரார்த்தித்துக் கொண்டேன் ! அங்கிருந்த Aquafina -வில் பாதியை மடக்-மடக்கெனக் குடித்து விட்டு அபர்ணாவிடம் லேசாய் பேசிப் பார்த்தேன் ! அவர் இது நாள் வரை களப்பணியாற்றி வந்தவர் என்பதையும், அவரது முதல் ஷோ இது தான் என்றும் தெரிந்து கொண்டேன் ! 'சரி..நம் பிரார்த்தனைகளை சாமி கேட்காமல் போனாலும், முதல் ஷோ நன்றாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கும் அந்த யுவதியின் பெயரைச் சொல்லியாச்சும் நாமும் கரை சேர்ந்து  விடலாம் டோய் !" என்று மனசுக்குள் சிந்தனை ஓடியது. சட்டையில் மைக்கை மாட்டி விட்டு, காமெராக்களை சரியாக நிலைப்படுத்தி விட்டு கலைஞர்கள் அகன்று விட  - அந்த அறைக்குள் நாங்கள் இருவர் மாத்திரமே இருந்தோம்.

கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாய் வர, நான் பதில் சொல்லத் துவங்கினேன். இது நாள் வரை நம் வாசகர்கள் கேட்கும் கதைகள் ; வெளியீடுகள் தொடர்பான கேள்விகளாய் இல்லாது, பொதுவான கேள்விகளாய் அவை இருந்ததால் 'பர பர' வென்று பதிலுக்குள் பாய்ந்திடாமல் சற்றே நிதானமாய் பேசிட முயற்சி செய்தேன். "ஞீ" என்று எந்த நிமிடம் குரலில் அபஸ்வரம் குடி கொள்ளுமோ என்ற பயம் உள்ளுக்குள்ளே இருந்தாலும், சற்றே குறைவான வேகத்தில் பேசியது தொண்டையையும் காப்பாற்றியது ; கொஞ்சமாய் யோசித்து பதில்களை  சொல்லவும் இடம் தந்தது!

கிட்டத்தட்ட 35 நிமிடங்களின் முடிவில் ஷூட்டிங் நிறைவுற்ற போது  - "நான் இப்போ எங்கே இருக்கேன் ?" என்று கேள்வி கேட்காத குறை தான் ! என்ன பேசினோம் இத்தனை நேரமாய் என்று துளியும் மண்டையில் நிற்கவில்லை ! கண்ணாடி அறைக்குள் அமர்ந்து பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த ஜூனியரிடம் "தேறுமா தம்பு ? " என்று கேட்ட போது - நன்றாகவே இருந்ததாய் சொன்னான் ! அபர்ணாவுக்கும், நெல்சன் அவர்களுக்கும் நன்றி சொல்லி விட்டு புறப்பட்டு நேராய் புத்தக விழாவிற்குத் திரும்பிய போது "சொதப்பவில்லை !" என்பது மட்டும் மண்டைக்குள் நின்றது. "சரி...எப்படியும் எடிட்டிங்கில் கத்திரி போட்டு விட்டு ஒரு நாலைந்து நிமிடங்கள் தானே போடுவார்கள் !" என்ற சிந்தனை ஆறுதலைத் தர - புத்தக விழாவின் மும்முரம் பற்றிக் கொண்டது.

P.S : ஞாயிறு காலை சன் டி-வியிலிருந்து நெல்சன் அவர்கள் போன் செய்து மதியம் 1 மணிக்கும், மாலை 5-க்கும் ; இரவு 10-30க்கும் பேட்டி ஒளிபரப்பாகிறது என்று சொன்ன போது பூம் பூம் மாடைப் போல் தலையை ஆட்டி விட்டு சத்தமின்றி இருந்து விட்டதும், . நண்பர் விஸ்வா SMS தட்டி விட, அந்தப் பட்டியலில் எனது தந்தையும் இருந்திட, குடும்பத்தில் அனைவரும் ஆங்காங்கே டி.வி. முன்னே ஆஜர் ஆகிட்டதும்  ,  எனக்கோ சென்னையில் சன் செய்திகள் தெரியாது போக, பின்னே கணினியில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்த்ததும் எப்போதோ நிகழ்ந்தவை போல் மனதில் நிழலாடுகின்றன!

Well, that’s all for this post and  as we have launched 4 new titles in this CBF 2014 & We shall see a quick review of 2nd title in those 4 books tomorrow here in TCU & Our coverage will also continue for tomorrow as well.

As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget section or Click Here.

Thanks & Regards, 
King Viswa.

5 comments:

  1. மிக்க நன்றி சார் ..
    தங்கள் SMS கிடைத்தாலும் கேபிளில் சன் நியூஸ் கிடையாததால் பார்க்க முடிய வில்லை .இப்பொழுது ஓகே ..

    ReplyDelete
  2. மீடியாக்களின் வெளிச்சம் காமிக்ஸ் மீது பட நீங்கள் எடுத்துவரும் முயற்சிகள் அளப்பரியவை!

    நன்றிகளும்... வாழ்த்துக்களும்...

    ReplyDelete

  3. This is great information. Thank you for publishing this.

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails