காமிரேட்ஸ்,
அனைவருக்கும் வணக்கம். கடந்த இரண்டு வாரங்களாகவே ஏகப்பட்ட புத்தகங்கள்,பரிசுகள் என்று மிகவும் குதூகலமாக கழிந்தது. இணையதள பக்கம் வரமுடியாதது தான் ஒரே பிரச்சினை. அதனை சரி கட்டும் விதத்தில் இன்று முதல் ரெகுலர் ஆக பதிவிட உத்தேசித்து உள்ளேன். நாட்டிற்கு இதனால் நன்மை எதுவும் பயக்கப்போவதில்லை என்றாலும், இன்றுமுதல் பதிவுகள் தொடரும்.
மிக நீண்ட நாட்களாகவே மெயின் ஸ்ட்ரீம் மீடியாவில் வாண்டுமாமா அவர்களைப்பற்றி எந்தவிதமான கட்டுரைகளும் வந்ததில்லை என்கிற குறையை போக்கும் விதமாக இந்த வார ஆனந்த விகடனில் அற்புதமான ஒரு பேட்டி வந்துள்ளது. பேட்டியை சிறப்பாக, பொறுமையாக முடித்த நண்பர்கள் தமிழ் மகன், திரு சமஸ் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு தமிழ் காமிக்ஸ் உலகின் சார்பில் வாழ்த்துக்கள்.
கடந்த இரண்டு வருடங்களாகவே அமர் சித்திரக் கதைகள் ஒரு புதுப்பொலிவுடன் வருவதை கண்கூடாக காண முடிந்தது. அதன் ஒரு தொடர்ச்சியாகவே இப்போது தஞ்சாவூரை பற்றிய இந்த காமிக்ஸ் புத்தகம். புதிய பாணி சித்திர வகையுடன் வந்துள்ள இந்த புத்தகத்தை காமிக்ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும்.
India Today Dated 13062012 Page No 51 Kadhambam Section ACK Latest Issue News |
வாண்டுமாமாவிற்க்கே இந்த நிலை என்றால், மற்றவர்களை பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் அந்த குறையை போக்கும் விதமாக ஓவியர் மாயா அவர்களின் அற்புதமான நேர்காணல் ஒன்றினை சூரியகதிர் பத்திரிக்கையில் தொகுத்து வெளியிட்டு இருந்தனர். பேட்டி எடுத்த நண்பர் திரு ஸ்ரீஹரி அவர்களுக்கும், பத்திரிக்கையாளர் திரு பாரதி ராஜா அவர்களுக்கும் நன்றிகள் பல.
ஒரு மாறுதலுக்காக எவர் கிரீன் ஸ்டார் திரு செல்லம் அவர்களின் கை வண்ணத்தில் எண்பதுகளில் குங்குமம் இதழில் வந்த ஒரு சில நகைச்சுவை துணுக்குகள்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.