கி மு 44.
Beware the Ides of March.
ஜூலியஸ் சீசரிடம்
ஒரு தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகள் இவை. ஐட்ஸ் ஆஃப் மார்ச் என்றால்,
மார்ச் மாதத்தின் 15 ஆம் தேதி. அந்த நாளில்தான் ஜூலியஸ் சீசர்
கொல்லப்பட்டார். இந்த சரித்திர தகவலை மனதில் நிறுத்தி, மேற்கொண்டு
படியுங்கள்.
தமிழில் சிறுவர் இலக்கியம் மற்றும் சித்திரக்கதைகள்
குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன். 140 ஆண்டு கால தமிழ் சிறுவர்
இலக்கியம் மற்றும் சித்திரக்கதைகள் குறித்தான தகவல்களை திரட்டி
வைத்துள்ளேன். ஆனால், சமகாலத்தில் தமிழில் சிறுவர் இலக்கியம் மற்றும்
சித்திரக்கதைகளின் நிலை என்ன? என்று கேட்டால், என்னால் ஒரு புன்னகையை
மட்டுமே அளிக்க இயலும். (அங்கொன்றும் இங்கொன்றுமாக சிற்சில முயற்சிகள்
இருந்தாலும், பெரும்பாலும் தமிழ் சிறுவர் இலக்கியம் என்பது பாலைவனமாகவே
உள்ளது).
இந்த நிலையை மாற்றி, தமிழ் சிறுவர் இலக்கியம் மற்றும்
சித்திரக் கதைகளின் ரசனை, வாசிப்பு மற்றும் செயல்படும் களனை அடுத்த
கட்டத்திற்கு கொண்டு செல்ல, தமிழ் காமிக்ஸ் உலகம் சார்பாக ஒரு சிறு
முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.
- அந்த முயற்சி என்ன?
- எந்த விதமான செயல்பாடுகள் இருக்கும்?
- புதிய காமிக்ஸ் கதைகளை தமிழில் உருவாக்கப்போகிறோமா?
- கிராஃபிக் நாவல்களை மொழிமாற்றம் செய்து கதைகளை வெளியிடப்போகிறோமா?
- புதிய காமிக்ஸ் இதழ் உருவாக்கப்படுமா?
இப்படி பல கேள்விகள் உங்கள் மனதில் எழலாம். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்க உள்ளோம்.
முகநூலில் ஏகப்பட்ட கேள்விகள். ஏகப்பட்ட யூகங்கள்.
- புதிய காமிக்ஸ்
- மறுபடியும் பூந்தளிர்
- வாண்டுமாமாவின் சித்திரக்கதைகளின் மறுபதிப்பு
- ஐரோப்பிய சிறுவர் காமிக்ஸ்களின் மொழிமாற்று
- செல்லம் அவர்களின் காமிக்ஸ் கதைகள்
என பல வகையான பதில்கள். இவற்றுக்கு எனது பதில்:
அனைத்துமே சரிதான். அனைத்துமே இல்லை.
என்ன குழப்பமாக இருக்கிறதா? சரி, விடுங்கள். இதோ தமிழ் காமிக்ஸ் உலகின் அடுத்த கட்ட முயற்சியின் ஒரு டீசர்.
என்னடா, ஒரே ஒரு லோகோவை மட்டுமே பதிலாக அளித்திருக்கிறேன் என்றுதானே யோசிக்கிறீர்கள்? யூகியுங்கள். சற்று நேரம் அளிக்கிறேன்.
வரும் திங்கள் (மார்ச் 21 அன்று) மாலை 6.23 (IST)க்கு நமது முயற்ச்சியின் அடுத்த கட்டத்தை பற்றிய தகவலுடன் வருகிறேன்.
பின் குறிப்பு: அது என்ன 6.23? என்றும் யோசியுங்கள். சரியான பதில் அளிப்பவர்களுக்கு ஒரு ஆச்சரியமான பரிசு காத்திருக்கிறது.
நன்றி.