Pages

Monday, January 16, 2012

12 காமிக்ஸ் கிளாசிக்ஸ் #26: கொலைகாரக் கலைஞன் Comics Classics No 26: Kolaikarak Kalaignan

Dear ComiRades,

இந்த வருடம் தமிழ் காமிக்ஸ் உலகின் வரலாற்றில் மறக்க முடியாததொரு வருடமாக இருக்கப்போவதாக எடிட்டர் எஸ்.விஜயன் அவர்கள் அளித்த நம்பிக்கையோடு ஆரம்பித்து இருக்கிறது. பல அவநம்பிக்கைவாதிகளின் நம்பிக்கையை பொய்ப்பிக்கும் வகையில் சொன்னது மாதிரியே ஜனவரியில் புத்தக கண்காட்சியில் லயன் கம்பேக் ஸ்பெஷல் இதழை விற்பனைக்கு கொண்டு வந்து சாதித்துக் காட்டியும் விட்டார். இதில் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். ஜனவரி பத்தாம் தேதி முதல்தான் விற்பனைக்கு கிடைக்கும் என்று சொல்லப்பட்ட கம்பேக் ஸ்பெஷல் புத்தகத்தை நான்கு நாட்கள் முன்னரே கொண்டுவந்ததோடில்லாமல், பல பிரச்சினைகளை தாண்டி, தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புத்தகங்களை விற்பனைக்கு கொண்டு வந்து இந்த பொங்கலை காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு சுவையான பொங்கல் திருவிழாவாக மாற்றி உள்ளார்.

“கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிகிட்டு கொடுக்கும்” என்கிற பழமொழிக்கேற்ப, மார்ச் மாதம் வெளியிடப்படுவதாக இருந்த காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழையையும் இந்த புத்தக கண்காட்சியிலேயே குறுகிய கால அவகாசத்தில் வெளியிட்டு (ஜனவரி பதிமூன்றாம் தேதி) அசத்தியும்  விட்டார். சற்றும் எதிர்பாராத விதத்தில் வந்துள்ள இந்த கொலைகார கலைஞனை பற்றிய ஒரு பார்வையே இந்த பதிவு.

எந்த ஒரு பணிக்குமே ஆரம்பம் மிகவும் முக்கியமானது. இப்போது ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி தடுமாறிக்கொண்டு இருப்பதற்குமே ஆரம்பம் சரியாக அமையாததே காரணம். ஆனால் முதல் முதலாக தமிழில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தமிழ் காமிக்ஸ் இதழ் நாற்பது வருடங்களை கடந்து இன்றும் வெற்றி நடை போடுவதற்கு மூன்று ஈடிணையற்ற சாகச வீரர்களே காரணம் என்று சொன்னால் அது மிகையன்று. முத்து காமிக்ஸ் நாற்பது வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட போது அதன் தூண்களாக இருந்து ஆரம்பகால வெற்றிக்கு வழி வகுத்தவர்கள் மூன்று காமிக்ஸ் ஹீரோக்கள் (இரும்புக்கை மாயாவி, துப்பறியும் ஜானி நீரோ மற்றும் C.I.D. லாரன்ஸ் + ஜூடோ டேவிட்). இவர்களை முத்து காமிக்ஸின் த்ரி மஸ்கட்டியர்ஸ் என்று கூறினாலும் அது பொருத்தமான ஒன்றே

. Muthu Comics Banner

Classicsஇங்கிலாந்தில் ஃப்ளீட்வே என்கிற நிறுவனம் 1967 ஆம் ஆண்டு இரண்டு தனிப்பட்ட காமிக்ஸ் புத்தகங்களை ஆரம்பித்தது. ஒன்று சீக்ரெட் ஏஜென்ட் சீரிஸ் எனவும் (C.I.D. லாரன்ஸ் & ஜூடோ டேவிட் + ஜானி நீரோ)  மற்றது சூப்பர் ஹீரோ சீரீஸ் (இரும்புக்கை மாயாவி + ஸ்பைடர்) எனவும் பெயரிடப்பட்டு வெளிவந்தது. ஒவ்வொரு ஹீரோக்கள் கதை வரிசையிலும் பதிமூன்றே பதிமூன்று கதைகள் வந்தாலும் (மொத்தம் 52 கதைகள்) அவை இன்றளவும் மிகவும் சிலாகிக்கப்பட்டு ரசிக்கப்படுகின்றன. இதில் ஸ்பைடர் கதைகளைத்தவிர பாக்கி மூன்று ஹீரோக்களின் கதைகளை (39) பிரதானமாக கொண்டு முத்து காமிக்ஸ் ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட முத்து காமிக்ஸின் ஆரம்ப கால ஹீரோக்களின் சாகசங்கள் பிற்காலத்தில் ஒரு கல்ட் கிளாசிக் அளவிற்கு புகழ் பெற்று விளங்கிவிட்டது. இன்னமும் ஆரம்ப கால முத்து காமிக்ஸ் வாசகர்கள் (முத்து விசிறி, BN_USA, ஹாஜா இஸ்மாயில் போன்றோர்) இந்த மூன்று ஹீரோக்களின் ஆரம்ப கால புத்தகங்களைப்பற்றியே சிலாகித்து பேசிக்கொண்டு இருப்பது இன்றைய வாசகர்களுக்கு வேண்டுமென்றால் ஆச்சர்யமூட்டுவதாக இருக்கலாம். ஆனால் அமிர்த்தத்தின் ருசி கண்டவர்களே அதனைப்பற்றி கூற இயலும். மற்றவர்களுக்கு அமிர்தம் என்னவென்பது மற்றவர் சொல்லக் கேள்வியே அன்றி நேரிடை அனுபவம் கிடையாதல்லவா?

இவ்வாறாக முத்து காமிக்ஸின் ஆரம்ப கால இதழ்கள் புகழ் பெற்று,Comics Classics Logo தேடப்படுகின்ற பொருளாக இருப்பதைக்கண்ட சில பல "களத்தில் இறங்கி வேலை செய்கின்ற" போலி காமிக்ஸ் ரசிகர்கள், இந்த ஆரம்ப கால இதழ்களை பழைய புத்தக கடைகளிலோ அல்லது மற்ற விவரமறியாத காமிக்ஸ் ரசிகர்களிடமிருந்தோ பெற்று, அவற்றை கொள்ளை விலைக்கு விற்கவும் ஆரம்பித்தனர். இவற்றை தடுக்கவும், மறுபடியும் இந்த இளைய தலைமுறைக்கு விண்டேஜ் காமிக்ஸ் ஹீரோக்களை மறு அறிமுகம் செய்யவும் ஆரம்பிக்கப்பட்டதே காமிக்ஸ் கிளாசிக்ஸ் வரிசை. வருடத்திற்கு நான்கு புத்தகங்கள் என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த வரிசையில் இப்போது இந்த கொலைகாரக் கலைஞன் இதழுடன் மொத்தம் 26 புத்தகங்களே வந்துள்ளது.

இதுவரையில் வெளிவந்துள்ள இந்த காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்களின் விவரப்பட்டியல் இங்கே தொகுப்பட்டுள்ளது. இந்த புத்தக வரிசையில் கடைசியாக வந்த மூன்று புத்தகங்களே இப்போது கைவசம் விற்பனைக்கு உள்ளதென்பது குறிப்பிடத் தக்கது. ஆகையால் அவற்றையும் விரைவாக செயல்பட்டு கைவசப்படுத்துங்கள்.

No முதல் கதை நாயகன் இரண்டாவது கதை நாயகன்
1 பாதாள நகரம் இரும்புக்கை மாயாவி டாக்டர் டக்கர் ஸ்பைடர்
2 சதிகாரர் சங்கம் ஜானி நீரோ சிறைப் பறவைகள் CID லாரன்ஸ் + ஜூடோ டேவிட் 
3 பாம்புத் தீவு இரும்புக்கை மாயாவி கடத்தல் குமிழிகள் ஸ்பைடர்
4 பழி வாங்கும் பாவை டெக்ஸ் வில்லர் கொலைக் கரம் ஜானி நீரோ
5 கல் நெஞ்சன் ஸ்பைடர் இரும்புக் கை மாயாவி இரும்புக்கை மாயாவி
6 ஃபிளைட் 731 CID லாரன்ஸ் + ஜூடோ டேவிட்  ஜானி In லண்டன் ஜானி நீரோ
7 இமயத்தில் மாயாவி இரும்புக்கை மாயாவி சிறுபிள்ளை விளையாட்டு ஸ்பைடர்
8 மஞ்சள் பூ மர்மம் CID லாரன்ஸ் + ஜூடோ டேவிட்  துருக்கியில் ஜானி நீரோ ஜானி நீரோ
9 கொள்ளைகார பிசாசு இரும்புக்கை மாயாவி
10 கடத்தல் முதலைகள் ஜானி நீரோ தவளை எதிரி ஸ்பைடர்
11 ஃபார்முலா X-13 CID லாரன்ஸ் + ஜூடோ டேவிட்  திசை மாறிய கப்பல்கள் CID லாரன்ஸ் + ஜூடோ டேவிட் 
12 நியூயார்க்கில் மாயாவி இரும்புக்கை மாயாவி மர்மத் தீவு ரோபோ ஆர்ச்சி
13 கொலைப்படை ஸ்பைடர் நடுநிசி கள்வன் இரும்புக்கை மாயாவி
14 ஜானி In ஜப்பான் ஜானி நீரோ தலை கேட்ட தங்கப்புதையல் CID லாரன்ஸ் + ஜூடோ டேவிட் 
15 கொலைகாரக் கலைஞன் ஜானி நீரோ விண்ணில் மறைந்த விமானங்கள் CID லாரன்ஸ் + ஜூடோ டேவிட் 
16 பழி வாங்கும் பொம்மை ஸ்பைடர் கொள்ளைக்கார மாயாவி இரும்புக்கை மாயாவி
17 மைக்ரோ அலைவரிசை 848 ஜானி நீரோ தங்க வேட்டை ரோபோ ஆர்ச்சி
18 பாதாளப் போராட்டம் ஸ்பைடர் பறக்கும் பிசாசு இரும்புக்கை மாயாவி
19 மர்மத் தீவில் மாயாவி இரும்புக்கை மாயாவி திகிலூட்டும் நிமிடங்கள் CID லாரன்ஸ் + ஜூடோ டேவிட் 
20 ஃபார்முலா திருடர்கள் CID லாரன்ஸ் + ஜூடோ டேவிட்  தங்க விரல் மர்மம் ஜானி நீரோ
21 யார் அந்த மினி ஸ்பைடர்? ஸ்பைடர் இயந்திர தலை மனிதர்கள் இரும்புக்கை மாயாவி
22 நாச அலைகள் இரும்புக்கை மாயாவி எத்தனுக்கு எத்தன் ஸ்பைடர்
23 மூளைத் திருடர்கள் ஜானி நீரோ காற்றில் கரைந்த கப்பல்கள் CID லாரன்ஸ் + ஜூடோ டேவிட் 
24 விண்வெளி கொள்ளையர் இரும்புக்கை மாயாவி
25 களிமண் மனிதர்கள் இரும்புக்கை மாயாவி
26 கொலைகார கலைஞன் ஜானி நீரோ

இப்போதைக்கு நம்முடைய தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலேயே அதிக முறை ரீபிரின்ட் செய்யப்பட்ட காமிக்ஸ் கதையாகியKolaikarak Kalaignan கொலைகாரக் கலைஞனை பற்றி பார்ப்போம். இன்னமும் பல காமிக்ஸ் கதைகள் ஒருமுறை கூட ரீபிரின்ட் செய்யப்படாத நிலையில் (நயாகராவில் மாயாவி) இந்த கதையை மூன்றாவது முறையாக ரீபிரின்ட் செய்யப்படுகிறது என்றால் அந்த கதையில் வித்தியாசமாக ஏதாவது ஒன்று இருக்க வேண்டுமல்லவா? அப்படி என்ன உள்ளது என்பதை இங்கு அளவளாவுவோம். அதற்க்கு முன்பாக நம்முடைய தமிழ் காமிக்ஸ் உலகின் முடிசூடா மன்னராகிய நம் அனைவரின் அன்பிற்கும் பாத்திரமான முத்து விசிறி அவர்களின் இந்த கொலைகாரக் கலைஞன் பற்றிய விமர்சன பதிவை ஒருமுறை படித்து விட்டு வாருங்கள். அதுவரை ஒரு சிறிய விளம்பர இடைவேளை. கதையை தவிர இந்த புத்தகத்தின் தலைப்பில் இருக்கும் நுண்ணரசியலை அவர் ஆராய்ந்து இருக்கும் பாங்கே அலாதி.அந்த அரசியலையும் இப்போது இருக்கும் அரசியலையும் முடிச்சு போட்டு பார்க்காதீர்கள் மக்களே.

Comics Classics Issue No 26 Kolaikara Kalaignan Issue Dated Jan 2012 Cover Comics Classics No 26 Kolaikara Kalaignan Dated Jan 2012 Story 1st Page
Comics Classics Issue No 26 Kolaikara Kalaignan Issue Dated Jan 2012 Cover Comics Classics Issue No 26 Kolaikara Kalaignan Issue Dated Jan 2012 Story 1st Page

இந்த கதையை பற்றி நம்முடைய பார்வையை படிப்பதற்கு முன்பாக முத்து விசிறி அவர்கள் தங்களுடைய பதிவில் இரத்தின சுருக்கமாக ஒரே ஒரு பத்தியில் இந்த புத்தகத்தை பற்றியும், கதையை பற்றியும் கூறி இருப்பதை ஒரு முறை படித்து விடுங்கள்: “Accidental deaths take place one after other in France. In Orleans, it was Pierre the postman, then it was Hans clipper the newspaper reporter and then in Naples, it was father Roger. There was no connection between these "accidental" deaths, except they all worked for Britain against the Nazis in the second world war and the timing of the deaths coincide with the visit of Kohli circus to the city where they lived & died. British intelligence agency gets interested in this and they suspect Sir George, who has access to the secret info about the agents. He vanishes mysteriously with those files. Johnny Nero was asked to follow Sir George, but Sir George himself is only a black mailed pawn in this deadly game. The trial leads to the manager of a wax museum who tries to kill Sir George and Johnny Nero by lighting fire to the wax exhibits. However the manager leaves a trail by way of a cloth worn by circus clowns. Johnny immediately closes on the next target who happens to be the mayor of Leon's where the circus is currently performing. Though he couldn't stop the killing of the mayor, he manages to nab the Kolaikaara Circus Kalaignan, Joseph Kranknen who was a ex-Nazi, who wants to take revenge on all the agents who worked against the Nazi Germany. Typical war time story, but with the twists and turns at every stage, it is really gripping. No wonder this got published in Muthu thrice”.

இதற்க்கு மேலும் நாம் கதையை விளக்கி கூற வேண்டுமா என்ன? எளிய ஆங்கிலத்தில் மிகவும் அருமையாக நமக்கெல்லாம் புரியும்படியாக கதையை விவரித்த முத்து விசிறி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. ஒரு காமிக்ஸ் கதை என்றால், அதுவும் சீரிஸ் ஆக வரும் ஒரு ஹீரோவின் கதை என்றால் அதில் ஹீரோவுக்கு ஒரு என்ட்ரி சாகசம் இருக்க வேண்டும், அவர் வருவதற்கு ஒரு பில்ட் அப் இருக்க வேண்டுமென்ற சராசரி காமிக்ஸ் நடையை கட்டுடைப்பு செய்த பின் நவீனத்துவ கதை இந்த கொலைகாரக் கலைஞன். ஆமாம், இந்த கதையில் ஹீரோவின் அறிமுகமே 28ஆம் பக்கத்த்தில் தான் நடக்கிறது. அதுவும் அலட்டல் இல்லாமல் ஆழ்கடலில் படமெடுத்துக்கொண்டு இருக்கும் இந்த அறிமுகம் சராசரி காமிக்ஸ் ஹீரோவுக்கு கொஞ்சம் புதியதே.(கிட்டதட்ட நம்முடைய டாக்டர் அணில் அவர்களின் நண்பன் படம் போன்றதே இந்த கதையும். நண்பன் படத்திலும் ஹீரோவுக்கு பன்ச் வசனம் இல்லை, அறிமுக சண்டை, என்ட்ரி சாங் இல்லை).

Comics Classics Issue No 26 Kolaikara Kalaignan Issue Dated Jan 2012 Story Page No 28: What an entry for the Hero, Well after 28 Pages into the story
Comics Classics Issue No 26 Kolaikara Kalaignan Issue Dated Jan 2012 Story Page No 28

இந்த கதையை பற்றி இன்னமும் விலாவரியாக சொல்ல இயலும். ஆனால் சொன்னால் படிக்கும் ஆர்வம் குறைந்து போகுமோ என்ற எண்ணத்துடன் இந்த கதையில் என்னுடைய மனதை கவர்ந்த சில காட்சிகளை பற்றி கூறிவிடுகிறேன்.

Comics Classics Issue No 26 Kolaikara Kalaignan Issue Dated Jan 2012 Story Page No 33 Kadal Nari

அதற்க்கு முன்பாக இந்த கதையைப் பற்றியும், ஜானி நீரோ பற்றியும் ஒரு சிறிய ஃப்ளாஷ் பேக்: 1992ஆம் ஆண்டு. அம்பத்தூரில் இருக்கும் என்னுடைய பள்ளித்தோழன் செல்வம் வீட்டில் நாங்கள் எல்லோரும் Group Study செய்ய செல்வோம். அப்போது அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகில் இருந்த விநாயகா பழைய புத்தக கடையில் இரண்டு பாக்கெட் சைஸ் காமிக்ஸ் புத்தகங்கள் எனக்கு கிடைத்தது. இரண்டுமே அட்டை மற்றும் முதல் பக்கம் இல்லாமல் ஐந்தாவது பக்கத்தில் இருந்து இருந்தது. ஒன்றரை ருபாய் கொடுத்து இரண்டு புத்தகங்களையும் வாங்கிவிட்டேன். ஆனால் முதலில் படிக்கும்போது அவ்வளவாக சுவாரஸ்யப்படாத அந்த இரண்டு கதைகளின் ஹீரோ ஜானி நீரோ. பின்னர் வெகு நாட்கள் கழித்தே அந்த புத்தகங்கள் சதிகாரர் சங்கம் மற்றும் கொலைகாரக் கலைஞன் என்று தெரிந்துக் கொண்டேன். அதற்க்கு முன்பே ஓரிரு ஜானி நீரோ கதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்த ஞாபகம் இருந்தாலும் எனக்கு என்று சொந்தமாக வாங்கிய முதல் ஜானி நீரோ கதைகள் இவையே. அதிலும் இந்த கொலைகாரக் கலைஞன் என்னை மிகவும் கவர்ந்தது. சொல்லப்ப்போனால் ஜானி நீரோ கதைகளில் அனைத்துமே என்னை மிகவும் கவர்ந்தவை. குறிப்பாக கொலைகாரக் கலைஞன் மற்றும் மைக்ரோ அலைவரிசை 848.

வழக்கமாக ஜானி நீரோ கதைகளுக்கு படம் வரைபவர் பாவ்லோவ் மாண்டெக்கி.Marcello Mastroianni இவர் ஜானி நீரோவை வரையும்போது பிரபல இத்தாலிய நடிகர் Marcello Mastroianniஐ மாடலாகக் கொண்டு வரைவார். ஆகையால் இவரின் கைவண்ணத்தில் வந்த ஜானி நீரோ கதைகள் அட்டகாசமான ஓவியத்தரத்தில் இருக்கும். ஆனால் மாதம் நான்கு கதைகள் வரவேண்டிய கட்டாயம் இருந்ததால், ஃப்ளீட்வே நிறுவனத்தால் ஒரு குறிப்பிட்ட கதையை ஒரே ஒரு கதாசிரியர் மற்றும் ஓவியரைக் கொண்டு முடிக்க முடியவில்லை. ஆகையால் வேறு வேறு ஓவியர்கள் ஒரு குறிப்பிட்ட கதைத் தொடரை வரைய ஆரம்பித்தார்கள். அப்படி வேறுபட்டு வந்து, ரெகுலர் ஆக இல்லாமல் ஓரிரண்டு கதைகளுக்கு மட்டுமே வரைந்தவர் ஓவியர் இஸ்டாக்கியோ செக்ரேல்ல(ஸ்).Comics Classics Issue No 26 Kolaikara Kalaignan Issue Dated Jan 2012 Story Page No 52 In the Wax Museum

அதுவுமின்றி பதின்ம வயதின் முதல் படியில் அடியெடுத்து வைத்த எனக்கு, அந்த கதையில் ஸ்டெல்லாவை ஓவியர் இஸ்டாக்கியோ செக்ரேல்லே(ஸ்) வரைந்த விதம் மற்ற ஓவியர்கள் வரைந்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மிகவும் கவர்ச்சியாக இருந்ததும் இந்த கதையை பிடிக்க ஒரு காரணம். பின்னர் மற்ற கதைகளை படிக்கும்போது அதில் ஸ்டெல்லாவின் கதாபாத்திரம் மிகவும் கண்ணியமாக வெளிப்படுத்தப்பட்டு இருந்தவிதம்,அந்த பாத்திரத்தின் மீது ஒரு விதமான மரியாதையையே  ஏற்படுத்தியது. அந்த விதத்தில் இந்த கதையின் ஓவியங்கள் மாறுபட்டு இருந்தாலும், இந்த கதையில் ஸ்டெல்லா மிகவும் Active ஆக செயல்பட்டு இருப்பார். குறிப்பாக ஒரு சீனில் ஜானி ஸ்டெல்லாவை "ஏன் இங்கு வந்தாய்?" என்று கடிந்துக்கொண்டு இருக்கும்போதே உடல் அசதி காரணமாக மயங்கி விழுவார். அப்போது ஸ்டெல்லா தாங்கி பிடிப்பார். இதையெல்லாம் மீறி எனக்கு பிடித்த மூன்று காட்சிகள் இங்கே தனித்தனியாக வெட்டப்பட்டு உள்ளன.

Comics Classics Issue No 26 Kolaikara Kalaignan Issue Dated Jan 2012 Story Page No 90 Stella Kissing Peter

பழனியை சேர்ந்த மருத்துவர் சுரேஷ் அவர்களின் இணையதளத்தில் அவர் கடல்புறா பற்றி (சைட் பாரில்) ஒரு பத்தியில் இந்த காட்சியை பற்றி குறிப்பிட்டு இருப்பார். அதற்க்கு முன்பிருந்தே இந்த காட்சியை நாங்கள் விவாதித்து இருந்தோம், ஆனால் வேறு கண்ணோட்டத்தில். எண்பதுகள் மட்டும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பதின்ம வயது சிறுவர்களின் முக்கிய விவாதப்பொருளே ஸீ த்ரூ கேமிரா. அதாவது ஒரு பொருளை ஊடுருவி வெளிப்படையாக படமெடுக்கும் கேமிரா. நடிகை நதியா ஒரு படத்தில் S.V. சேகர் அவர்களை இந்த மாதிரி ஒரு கண்ணாடி அணிந்துக்கொண்டு பயமுறுத்துவார். நாங்கள் எல்லோரும் அப்போதே அந்த மாதிரி ஒரு கண்ணாடியைப்பற்றி விவாதிப்போம். எங்கள் செட்டில் "உஷார் பார்ட்டி" என்று பெயரெடுத்த ஜாகீர் ஹுசேன் இந்த மாதிரி ஒரு கண்ணாடி தன்னுடைய மாமாவிடம் இருப்பதாகவே சத்தியம் செய்தான். 

அதைப்போலவே ஒரு குறிப்பிட்ட காட்சியில் (எடிட்டர் கூட தன்னுடைய தளத்தில் இந்த காட்சியை விவரித்தது நினைவிருக்கலாம்), ஸ்டெல்லாவை பீட்டர் காப்பாற்றியவுடன் ஸ்டெல்லா நன்றியுணர்ச்சியுடன் முத்தமிட,நாணத்தால் பீட்டர் நெளிய, அந்த நாசூக்கான தருணத்தை ஓவியர் அற்புதமான முக பாவனைகளுடன் வெளிப்படுத்தி இருப்பார். வழக்கமான ஒரு துப்பறியும் கதையே என்றாலும், கதையின் விறுவிறுப்பான ஓட்டமும், தொய்வில்லாத நடையும் கதையை ஒரு Must-Read ஆக வெளிப்படுத்துகின்றன.

Comics Classics Issue No 26 Kolaikara Kalaignan Issue Dated Jan 2012 Story Last Page: The Usual Happy ending with Col. Jacob and Nero asking for rest

Comics Classics Issue No 26 Kolaikara Kalaignan Issue Dated Jan 2012 Story Last Page

என்னிடம் இருக்கும் சொற்ப காமிக்ஸ் கலெக்ஷனில் இந்த இரண்டு புத்தகங்களுமே மிஸ்ஸிங். ஆகையால் இந்த அட்டைப்படங்களை கொடுத்துதவிய ஆபத்தான்தவன் திரு முத்து விசிறி அவர்களுக்கு நன்றி. இரண்டு அட்டைப்படங்களுமே வித்தியாசமாக ஆனால் அருமையாக இருக்கின்றன. முதல் படம் வந்த கால கட்டத்தில் ஒரு பெரிதும் பேசப்பட்ட அட்டைப்படமாக இருந்திருக்கக்கூடும். முதல் இதழை படித்தவர்கள் தகவலைப்பகிர்ந்தால் நலம்.

Muthu Comics Issue No 009 Kolaikaara Kalaignan Cover-Issue Dated Dec 1972 Muthu Comics Issue No 161 Kolaikarak Kalaignan Cover-Issue Dated Aug 1987
Muthu Comics Issue No 009 Kolaikaara Kalaignan Cover Muthu Comics Issue No 161 Kolaikarak Kalaignan Covers

இது ஃப்ளீட்வே நிறுவன இதழின் அட்டைப்படம். இதையையும் கொடுத்துதவியவர் முத்து விசிறி அவர்களே. ஆனால் அடுத்து இருக்கும் அட்டை (காமிக்ஸ் கிளாசிக்ஸ்) என்னிடமே இருக்கும் ஒன்று. கடைசியாக இருப்பது லயன் காமிக்ஸ் ஆபீசில் இருக்கும் ஒரிஜினல் அட்டைப்பட பெயின்ட்டிங் (நன்றி எடிட்டர் எஸ்,விஜயன்).

Fleetway Secret Agent Series No 05 Assassins Anonymous Cover – Issue Dated Mar 1967 Prakash Publishers - Comics Classics Issue No 15 – Kolaikarak Kalaignan – Issue Dated June 2004 Comics Classics Kolaikara Kalaignan Art Work by the Well Known artist Malaiyappan
Fleetway SA Sries No 05 Assasin Anonymous Cover CC 15-1 Kolaikaara Kalaigan Comics Classics Kolaikara Kalaignan Art Work

நாளையுடன் சென்னை புத்தக கண்காட்சி இனிதே முடிவடைகிறது. அநேகமாக நாளை நான் புத்தக கண்காட்சிக்கு செல்வேன் (என்றே நினைக்கிறேன்). ஆகையால் காமிரேட்டுகள் என்னை அங்கு சந்திக்கலாம். காமிக்ஸ் வாங்க நினைக்கும் காமிரேட்டுகள், குறிப்பாக இந்த கொலைகாரக் கலைஞன், நாளையே வந்து வாங்குவது நலம். இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

6 Comic Cuts 37-News 37: லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் பற்றி எழுத்தாளர் பா.ராகவன்–குங்குமம் Issue Dated 23-01-2012

Dear ComiRades,

இன்றைய தினம் ஒரு சோகமான தினமாக ஆரம்பித்தது. காலையிலேயே சில பல வேலைகள் வந்துவிட, அவற்றை முடித்து விட்டு மதியமோ அல்லது மழைக்கால மாலை நேரத்திலோ புத்தக கண்காட்சிக்கு வந்து சேர்ந்துவிடலாம் என்று நினைத்திருக்கையில், என்னுடைய பாட்டி மறைந்த செய்தி வந்தடைந்தது. உடனடியாக அங்கு செல்ல நேரிட்டதால், இன்றைய வர்த்தக வேளையில் மட்டுமாவது (மாலை ஆறு முதல் ஒன்பது மணி வரை) புத்தக கண்காட்சி வர நினைத்த என்னுடைய ஆசை, நிராசையாகவே போனது. இருக்கட்டும், நாளைக்காவது காலையில் இறுதி கடமைகளை முடித்து விட்டு நேரத்திற்கு புத்தக கண்காட்சிக்கு வர உத்தேசித்துள்ளேன். இன்றைய தினம் நேரில் ரசிகர்களை சந்திக்கும் வாய்ப்பினை இழந்தமைக்கு ஈடாக நாளை மற்றும் கடைசி நாளாகிய செவ்வைக் கிழமை ஆகிய இரு தினங்களும் தொடர்ந்து வர முடிவெடுத்துள்ளேன்.

இறைய காமிக் கட்ஸ் பதிவில் பிரபல எழுத்தாளர் பா ரா என்றழைக்கப்படும் எங்களின் குருவாகிய பா.ராகவன் அவர்கள் (Wikipedia, எழுத்தாளர் பா. ராகவனின் இணைய தளம்)  தங்கள் காமிக்ஸ் வேட்டையை பற்றுதலைப் பற்றி குங்குமம் வார இதழில் கூறிய தகவலே ஒரு பதிவாக மாறியுள்ளது.

Kungumam Dated 23012012 Issue Stand Date 14012012 Page No 103 Pa Ra on CBS CBF Day 03 Photo 36 Stall No 372 Ace Writer Pa Ra with Editor S Vijayan Along with Cop John Simon in Right to Left Order
Kungumam Dated 23012012 Issue Stand Date 14012012 Page No 103 Pa Ra on CBS CBF Day 03 Photo 36 Stall No 372 Ace Writer Pa Ra with Editor S Vijayan Alon with Cop John Simon in Right to Left Order

இந்த குங்குமம் இதழ் இன்னமும் கடைகளில் கிடைக்கின்றது. வாங்க விரும்பும் வாசகர்கள் வாங்கிப்படிக்கலாம். இந்த குறிப்பிட்ட பகுதியில் பிரபல எழுத்தாளர்கள் தாங்கள் வாங்கிய முக்கியமான புத்தகங்களைப் பற்றி விவரிக்கிறார்கள். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களிடம் இந்த புத்தக வெளியீட்டிற்கு முன்பாகவே பேட்டி கண்டதால் அவர் இதனைப்பற்றி (லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல்) பற்றி கூறவில்லை.

இந்த நிகழ்ச்சியை கட்டுரையாகி, செய்தி வடிவில் தொகுத்த நண்பர் வெ.நீலகண்டன் அவர்களுக்கும், புகைப்பட கலைஞர் திரு அருண் அவர்களுக்கும் நன்றி. தொடர்ந்து நம்முடைய காமிக்ஸ் குறித்த செய்திகளை வெளியிட்டு வரும் குங்குமம் வார இதழ் நிர்வாகத்திற்கும் நன்றி.

Kungumam Dated 23012012 Issue Stand Date 14012012 Page No 103 Pa Ra on Comics
Kungumam Dated 23012012 Issue Stand Date 14012012 Page No 103 Pa Ra on Comics

நாளைக்கு வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களின் தொகுப்பாக ஒரு புத்தக கண்காட்சி காமிக்ஸ் ரசிகன் பார்வை வெளிவரும். இன்று நான் செல்லாததால், இன்றைய தினத்தை பற்றி நோ பதிவு.  இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Thursday, January 12, 2012

10 #CBF12 - 35வது சென்னை புத்தக கண்காட்சி - ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில் - Day 07 – Wednesday 11th Jan 2012 - 35th Chennai Book Fair

Dear ComiRades,

இன்றைய சென்னை புத்தக கண்காட்சியை பற்றிய போட்டோ பதிவில் நுழையும் முன்னர் இதற்க்கு முன்பு வந்துள்ள (சம்பந்தப்பட்ட) மற்ற பதிவுகளை ஒரு முறை பார்த்து விடுங்கள்:

1. #CBF12 - 35th Chennai Book Fair 2012 – Day 0 - 35வது சென்னை புத்தக கண்காட்சி 2012 - ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்

2. #CBF12 - 35th Chennai Book Fair 2012 – Day 1 - 35வது சென்னை புத்தக கண்காட்சி 2012 - ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்

3. #CBF12 - 35th Chennai Book Fair – Day 02–Friday 06th Jan 2012 - 35வது சென்னை புத்தக கண்காட்சி - ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்

4. To Be posted very soon

5. To be posted very soon

6. #CBF12 - 35th Chennai Book Fair – Day 5–Monday 09th Jan 2012 - 35வது சென்னை புத்தக கண்காட்சி - ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்

7. #CBF12 - 35வது சென்னை புத்தக கண்காட்சி-ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்-Day 06–Tuesday 10th Jan 2012-35th Chennai Book Fair

இன்றைய பதிவுக்கு நுழையும் முன், இன்றைய ஸ்டார் அட்ராக்ஷன் பற்றி சொல்லி விடுகிறேன். இயக்குனர் மிஷ்கின் ஒரு காமிக்ஸ் ரசிகர் வெறியர் என்பது நமகெல்லாம் தெரிந்ததே. உண்மையில் கடந்த சனிக்கிழமை அன்று லயன் கம்பேக் ஸ்பெஷலை அவர்  வெளியிடுவதாகவே இருந்தது. ஆனால் திடீரென்று அவரது படத்தின் ஷூட்டிங்கில் நடந்த ஒரு மாறுதலால் அவரால் கடைசி நேரத்தில் வர இயலவில்லை. அதனை சரிகட்டும் விதத்தில் இன்று கொட்டும் மழையில், மக்கள் வெள்ளத்தில் அவர் புத்தக கண்காட்சிக்கு வந்து ஒரு புல் செட் காமிக்ஸ்களையும், இரண்டு கம்பேக் ஸ்பெஷல் இதழ்களையும் வாங்கிச் சென்றார். தொடர்ந்து தமிழ் காமிக்ஸ் வெளியீட்டிற்கு ஆதரவு அளிக்கும் அவருக்கு நன்றி.

CBF Day 07 Photo 35 Stall No 372 Kumaran Sir with Director Mysskin with CBS CBF Day 07 Photo 36 Director Mysskin with Veluchami & Radhakrishnan
CBF Day 07 Photo 35 Stall No 372 Kumaran Sir with Director Mysskin with CBS CBF Day 07 Photo 36 Stall No 372 Director Mysskin with Veluchami and Radhakrishnan

நேற்று மாலை புத்தக கண்காட்சியில் நடந்த சம்பவங்கள் ஒரு தமிழ் தொலைகாட்சி மெகா சீரியலுக்கு நெடுந்தொடருக்கு ஈடானது. வழக்கமாக முத்துமாரி டிராவல்ஸ் மூலமாக புத்தகங்களை சிவகாசியில் இருந்து சென்னைக்கு அனுப்பி வந்துகொண்டிருந்த பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தினர், நேரமின்மையால் நேற்று மட்டும் KPN சர்வீஸ் மூலம் கம்பேக் ஸ்பெஷலை அனுப்பி வைத்தனர். வழக்கமாக வரும் பார்சல் என்றால் (முத்துமாரி) அது காலை ஆறு மணிக்கோ, அல்லது பத்தரை மணிக்கோ பெற்றுக்கொள்ளலாம். ஆனால் KPN பார்சலை மதியம் மூன்றரை மணி வரையிலும் கொடுக்காமல் இழுத்தடிக்க, வேறு வழியில்லாமல் அங்கிருந்து ஸ்டாலுக்கு வந்துவிட்டார்கள் நம் ஸ்டால் நண்பர்கள் (திரு ராதா கிருஷ்ணன் மற்றும் வேலுச்சாமி). ஏனென்றால் மூன்று மணியில் இருந்தே கம்பேக் ஸ்பெஷலை வாங்க மக்கள் கூட்டம் வந்துசேர, அதனால் கையில் ஆள் தேவைப்படுகிறது என்று அவர்கள் ஸ்டாலுக்கு வந்து விட்டார்கள்.


ஐந்து மணிக்கு KPN பார்சல் சர்வீசில் இருந்து போன் வருகிறது.உடனடியாக வேலுச்சாமி அதனை பெற்றுக்கொள்ள சென்றுவிட, இடைப்பட்ட நேரத்தில் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் வந்து கம்பேக் ஸ்பெஷல் உள்ளதா? என்று விசாரித்து விட்டு சென்றார். ஏற்கனவே புத்தக வெளியீடு விழாவிலேயே அவர் கம்பேக் ஸ்பெஷலை பெற்று இருந்தாலும் அவருடைய நண்பர்களுக்காக இந்த விசாரிப்பாம். விரைவில் அவருடைய கம்பேக் ஸ்பெஷல் விமர்சனத்தை எதிர்பார்க்கலாம். இதற்கிடையில் சிங்கையில் இருந்து புத்தக கண்காட்சியில் லயன் காமிக்ஸ் வாங்க வேண்டும் என்று சென்னைக்கு விரைந்து வந்த தலைவர் முத்து விசிறி அவர்களுடன் நான் ஸ்டாலில் நுழையும்போது மணி ஐந்தரை.

அப்போதே கருமேகங்கள் தமிழ்நாட்டை சூழ்ந்துள்ள பிரச்சினைகளை போல சூழ்ந்துக்கொண்டு பயமுறுத்த, மழை வருமென்ற எதிர்ப்பார்ப்புடனே ஸ்டாலில் நுழைந்தோம். முத்து விசிறி அவர்கள் "மழை வந்தால் ஒழுகுமா?" என்று விசாரித்துக் கொண்டு  இருக்கும்போதே சொல்லி வைத்தார்ப்போல அடை மழை ஆரம்பித்தது. ஸ்டாலில் குறைந்தது பத்து பேராவது கம்பேக் ஸ்பெஷலை வாங்கிவிடவேண்டுமென்ற ஆவலுடன் காத்திருந்தார்கள். மழை காரணமாக கூரையில் இருந்து ஒழுக, அவசர அவசரமாக பில் போடும் டேபிளை நகர்த்தி புத்தகங்களை எல்லாம் பத்திரப்படுத்திக்கொண்டு இருக்கும்போதே சுந்தரவரதன் கேட்க ஆரம்பித்து விட்டார் "கம்பேக் ஸ்பெஷல் எப்போ போடுவீங்க? எப்போ போடுவீங்க?" என்று. ஆட்டோவில் புத்தக பார்சலை கொண்டு வந்துக்கொண்டிருந்த வேலு, மழை காரணமாக தாசப்பிரகாஷ் பக்கமாக ஒதுங்க, அதற்குள் ஆர்வம் காரணமாக நம் மக்கள் துரத்த, கொட்டும் மழையில், டிராபிக் நெரிசலில் ஒரு வழியாக கம்பேக் ஸ்பெஷல் புத்தகங்களுடன் வந்து சேர்ந்தார் வேலு.

ஆனால் புத்தக கண்காட்சியில் வாசல் வரை மட்டுமே ஆட்டோக்கள் அனுமதிக்கப்படும். அதுவுமின்றி அந்த புத்தக பார்சலை  தூக்குவது மிகவும் சிரமம் என்பதால் பபாசி ஆபிசில் சென்று ஒரு டிராலி கிடைக்குமா? என்று கேட்டால், அவர்கள் "சார், நீங்கள் ஸ்டால் ஒனர்களிடம் கேளுங்களேன்?" என்று ஐடியா கொடுக்கிறார்கள். "கொய்யால, நானே ஸ்டால் ஒனர்தாண்டா" என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே வேறு வழியில்லாமல் புத்தகங்களை தூக்க வந்தால்,அந்த அவசரக்கார ஆட்டோ ஓட்டுனர் அந்த பார்சலை நகர்த்த முயல, அது ஆட்டோவில் பின்னால் உட்காரும் சீட்டிர்ற்கும், ஓட்டுனர் சீட்டிர்ற்கும்  நடுவில் இருக்கும் இடைவெளியில் சிக்கிக் கொள்ள, அதனை அங்கிருந்த எடுக்கவே முடியாமல் போய் விட்டது. ஸ்டாலில் வேறு மக்கள் பொறுமை இழந்துவிட, வேறு வழியில்லாமல் அந்த பார்சலை கிழித்து புத்தகங்களை தனித்தனியே எடுத்தே ஸ்டாலுக்கு கொண்டு செல்ல வேண்டியதாகிவிட்டது.

அது என்னவோ தெரியவில்லை, இந்த கம்பேக் ஸ்பெஷல் இதழிற்கும் பிரச்சினைகளுக்கு அப்படி ஒரு பொருத்தமாக இருக்கிறது. சிவகாசியில் இதனை பிரின்ட் செய்யவோ, பைண்ட் செய்யவோ முடியாமல் ஒரு நாளைக்கு எட்டு அணி நேரம் மின்சாரத்தடை இருக்க, அப்படியும் மீறி கொண்டு வரும் புத்தகங்களுக்கு இப்படி எல்லாம் பிரச்சினைகள். இருந்தாலும், இவை அத்துனையும் மீறி இந்த புத்தகத்தை ஒரு குறுகிய கால இடைவெளியில் கொண்டு வந்து சாதனை புரிந்திட்ட எடிட்டர் சாருக்கும், அவரது படையினருக்கும் ஒரு ராயல் சல்யூட்.

இந்த பதிவில் சில காமிரேட்டுகளின் பெயர்கள் மறந்துவிட்டன. ஒவ்வொரு போட்டோவுக்கும் இலக்கம் இடப்பட்டிருப்பதால், நண்பர்கள் பெயர் தெரியாத காமிரேட்டுகளை  இனம்கண்டு கொண்டால் அவர்களின் பெயர்களை இந்த பதிவின் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். ஒவ்வொரு போட்டோவையும் கிளிக் செய்தால் அது வேறொரு விண்டோவில் பெரிதாக காட்சியளிக்கும்.

CBF Day 07 Photo 01 Evening 5.30 and Comeback special is yet to come Wait is on CBF Day 07 Photo 02 Stall No 372 This Bank Manager is an ardent Comics Fan CBF Day 07 Photo 03 Stall No 372 Live update from The parcel service
CBF Day 07 Photo 01 Evening 5.30 and Comeback special is yet to come Wait is on CBF Day 07 Photo 02 Stall No 372 This Bank Manager is an ardent Comics Fan CBF Day 07 Photo 03 Stall No 372 Live update from The parcel service
CBF Day 07 Photo 04 Stall No 372 Great Comics Fan from the Pharma Field Awaiting Comeback special CBF Day 07 Photo 05 Stall No 372 Age Gender Region No Barrier All of them are waiting for CBS CBF Day 07 Photo 06 Stall No 372 Professional Photographer is Photographed Hence different angle
CBF Day 07 Photo 04 Stall No 372 Great Comics Fan from the Pharma Field Awaiting Comeback special CBF Day 07 Photo 05 Stall No 372 Age Gender Region No Barrier All of them are waiting for CBS CBF Day 07 Photo 06 Stall No 372 Professional Photographer is Photographed Hence different angle
CBF Day 07 Photo 07 Stall No 372 No CBS Still people are coming in CBF Day 07 Photo 08 Stall No 372 Yes, they got it CBS is in their hands now so is happiness CBF Day 07 Photo 09 Stall No 372 Sundaravaradan Got CBS
CBF Day 07 Photo 07 Stall No 372 No CBS Still people are coming in CBF Day 07 Photo 08 Stall No 372 Yes, they got it CBS is in their hands now so is happiness CBF Day 07 Photo 09 Stall No 372 Sundaravaradan Got CBS
CBF Day 07 Photo 10 Stall No 372 ComiRades waiting to get their billing done CBF Day 07 Photo 11 Stall No 372 ComiRade Buying Full set plus CBS CBF Day 07 Photo 12 Stall No 372 ComiRades Buying in  Multiples and not in singles
CBF Day 07 Photo 10 Stall No 372 ComiRades waiting to get their billing done CBF Day 07 Photo 11 Stall No 372 ComiRade Buying Full set plus CBS CBF Day 07 Photo 12 Stall No 372 ComiRades Buying in  Multiples and not in singles
CBF Day 07 Photo 13 Stall No 372 Fellow Boo Sellers Parisal and Infomedia Arun buying 1 dozen each CBF Day 07 Photo 14 Stall No 372 This gentleman is an innovative publisher and wants to meet the editor CBF Day 07 Photo 15 Stall No 372 Full set is the in-demand product in this fair
CBF Day 07 Photo 13 Stall No 372 Fellow Boo Sellers Parisal and Infomedia Arun buying 1 dozen each CBF Day 07 Photo 14 Stall No 372 This gentleman is an innovative publisher and wants to meet the editor CBF Day 07 Photo 15 Stall No 372 Full set is the in-demand product in this fair
CBF Day 07 Photo 16 Stall No 372 everybody was in a hurry when it comes to billing CBF Day 07 Photo 17 Stall No 372 yet another fellow publisher buying lion comics CBF Day 07 Photo 18 Stall No 372 yet another fellow publisher buying lion comics
CBF Day 07 Photo 16 Stall No 372 everybody was in a hurry when it comes to billing CBF Day 07 Photo 17 Stall No 372 yet another fellow publisher buying lion comics CBF Day 07 Photo 18 Stall No 372 yet another fellow publisher buying lion comics
CBF Day 07 Photo 19 Stall No 372 couple of ComiRades from Mumbai friends of PixMonk CBF Day 07 Photo 20 Stall No 372 writer mugil is purchasing CBS CBF Day 07 Photo 21 Stall No 372 writer mugil with CBS
CBF Day 07 Photo 19 Stall No 372 couple of ComiRades from Mumbai friends of PixMonk CBF Day 07 Photo 20 Stall No 372 writer mugil is purchasing CBS CBF Day 07 Photo 21 Stall No 372 writer mugil with CBS
CBF Day 07 Photo 22 Stall No 372 couple of new ComiRades filling up the subscriber forms CBF Day 07 Photo 23 Stall No 372 couple of new ComiRades in our stall CBF Day 07 Photo 24 Stall No 372 couple of new ComiRades in our stall
CBF Day 07 Photo 22 Stall No 372 couple of new ComiRades filling up the subscriber forms CBF Day 07 Photo 23 Stall No 372 couple of new ComiRades in our stall CBF Day 07 Photo 24 Stall No 372 couple of new ComiRades in our stall
CBF Day 07 Photo 25 Stall No 372 looking at the forthcoming issues CBF Day 07 Photo 26 Stall No 372 at last, CBS is in my hands CBF Day 07 Photo 27  Prakash Publishers unofficial PRO Dinesh buying another set of CBS
CBF Day 07 Photo 25 Stall No 372 looking at the forthcoming issues CBF Day 07 Photo 26 Stall No 372 at last, CBS is in my hands CBF Day 07 Photo 27 Stall No 372 Prakash Publishers un official PRO Dinesh buying another set of CBS
CBF Day 07 Photo 28 Stall No 372 POPULAR WRITER Annan Mayavarathan in our Stall CBF Day 07 Photo 29 Stall No 372 To the ATM and Back to buy a full set and CBS CBF Day 07 Photo 30 Stall No 372 POPULAR WRITER Annan Mayavarathan Buying full set
CBF Day 07 Photo 28 Stall No 372 POPULAR WRITER Annan Mayavarathan in our Stall CBF Day 07 Photo 29 Stall No 372 To the ATM and Back to buy a full set and BS CBF Day 07 Photo 30 Stall No 372 POPULAR WRITER Annan Mayavarathan Buying full set
CBF Day 07 Photo 31 Stall No 372 POPULAR BLOGGER Annan Pala Pattarai Shankar in our stall CBF Day 07 Photo 32 Stall No 372 POPULAR BLOGGER Annan Pala Pattarai Shankar in our stall CBF Day 07 Photo 33 Stall No 372 POPULAR BLOGGER Annan Thandora Maniji in our stall
CBF Day 07 Photo 31 Stall No 372 POPULAR BLOGGER Annan Pala Pattarai Shankar in our stall CBF Day 07 Photo 32 Stall No 372 POPULAR BLOGGER Annan Pala Pattarai Shankar in our stall CBF Day 07 Photo 33 Stall No 372 POPULAR BLOGGER Annan Thandora Maniji in our stall
CBF Day 07 Photo 34 Stall No 372 couple of ComiRades with CBS CBF Day 07 Photo 37 Stall No 372 POPULAR WRITER Annan Cable with Nesamithran and Dinesh CBF Day 07 Photo 38 Stall No 372 Another bundle to buy
CBF Day 07 Photo 34 Stall No 372 couple of ComiRades with CBS CBF Day 07 Photo 37 Stall No 372 POPULAR WRITER Annan Cable with Nesamithran and Dinesh DSC03937
CBF Day 07 Photo 39 Stall No 372 publisher Nagarathinam with CBS CBF Day 07 Photo 40 Stall No 372 ComiRades from Far out place were happy to buy CBS CBF Day 07 Photo 41  Prakash Publishers Unofficial PRO Dinesh closing on with the final sale
CBF Day 07 Photo 39 Stall No 372 publisher Nagarathinam with CBS CBF Day 07 Photo 40 Stall No 372 ComiRades from Far out place were happy to buy CBS CBF Day 07 Photo 41 Stall No 372 Prakash Publishers Unofficial PRO Dinesh closing on with the final sale

The Representative from the ACP office-Cop John Simon & Family with Editor

The Representative from the ACP office-Cop John Simon & Family with Editor S Vijayan
இன்றைக்கு சுமார் 275 (200 + 75)  கம்பேக் ஸ்பெஷல் இதழ்களும், பத்து புல் செட் புத்தகங்களும், அதுவுமில்லாமல் தனித்தனியாக (மாடஸ்டி, டெக்ஸ் வில்லர் போன்று) பல புத்தக செட்டுகளும் விற்பனைக்கு உள்ளன. ஆகையால் Full-Set வாங்க விரும்பும் தோழர்கள் உடனடியாக சென்று வாங்கி விடவும். இல்லையெனில் நாளைக்குதான் வாங்க முடியும். இன்று மாலையும் நான் ஸ்டாலில் சிறிது நேரம் இருப்பேன். இன்றிரவு அலுவல் நிமித்தம் பயணப்பட உள்ளதால் நாளைக்கு ஸ்டாலில் இருக்கமாட்டேன். ஆகையால் நாளைக்கு பதிவு வராது. ஆனால் சனிக்கிழமை கண்டிப்பா ஸ்டாலில் இருப்பேன். அன்று ஒரு முக்கிய நிகழ்வும் உள்ளது. அவசியம் வாருங்கள் தோழர்களே.

இந்த படத்தில் நம்முடைய எடிட்டர் சாருடன் இருக்கும் நண்பர் ஜான் சைமன் சார் ஒரு மிகப்பெரிய, மிகத்தீவிரமான காமிக்ஸ் ரசிகர்.  சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் இவர், அந்த நெரிசலுக்கிடையிலும் குடும்பத்துடன் வந்து இருந்தார். சென்னை புத்தக கண்காட்சியில் நம்முடைய கம்பேக் ஸ்பெஷல் வெளியீட்டிற்காக ஸ்பெஷலாக வந்த அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. ஜான் சைமன் சார், மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள். இந்த போட்டோ மூன்றாவது நாளில் எடுக்கப்பட்டதாகும். விரைவில் இதைப்பற்றியும், புத்தக வெளியீட்டை பற்றியும் ஒரு முழு நீள பதிவை எதிர்பாருங்கள்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Related Posts with Thumbnails