டியர் காமிரேட்ஸ்,
வெல்கம் பேக். இந்த ஆண்டு முழுவதுமே பதிவிடக்கூடாது என்று ஒரு "நியூ இயர் ரெசல்யூஷன்" எடுத்து இருந்தேன். அதனை நூறு நாட்கள் கஷ்டப்பட்டு கடைபிடிக்கவும் செய்தேன். ஆனால் சில நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த பதிவு. இது தொடருமா? என்று நீங்கள் கேள்வி கேட்டால் அதற்க்கு பதில் நம்ம வேலு நாயக்கரின் "அதே பதில்" தான் (டோட்ட டோட்ட டைங்க், டோட டொடைங்க்).
கடந்த ஆண்டு ஜனவரியில் ஆரம்பித்த தமிழ் காமிக்ஸ் உலகின் கம்பேக், கிட்டத்தட்ட இந்த ஆண்டில் முழுமை பெரும் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையை மெய்பிக்கும் வகையில் எடிட்டர் விஜயன் அவர்களும் தொடர்ந்து ஏதேனும் ஒரு வகையில் நம்மை சர்ப்ஃப்ரைஸ் செய்துக்கொண்டே இருக்கிறார்.
கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு "டபுள் ப்ளஃப்" என்றொரு பதம் பரிச்சயமாகி இருக்கும். ஒரு சிறிய உதாரணம் மூலம் இதனை விளக்க முயல்கிறேன் (மற்றவர்கள் தயவு தாட்சண்யம் இல்லாமல் இந்த பத்தியை ஸ்கிப் செய்துவிடவும்). களத்திற்கு புதியதாக வந்துள்ள பேட்ஸ்மேனை அவுட் செய்ய, பந்துவீச்சாளரும் கேப்டனும் (அட, கிரிக்கெட் கேப்டனுங்க) சேர்ந்து ஒரு வியூகம் அமைப்பார்கள். தேர்ட் மேனிலும், ஸ்கொயர் லெக்கிலும் ஃபீல்டர்களை செட் செய்வார்கள். அதனை பார்க்கும் பேட்ஸ்மேன் "ஓகோ, இந்த பந்து பவுன்சர் ஆகவே இருக்கும்" தன்னை தயார் படுத்திக்கொண்டு பேக் ஃபுட்டில் சென்று ஹுக் செய்ய தயாராக இருப்பார்.
ஆனால், சற்றே புத்திசாலியான அந்த பந்துவீச்சாளர் அப்போது பவுன்சர் போடாமல், யார்க்கர் ஒன்றினை வீசி LBW அல்லது கிளீன் போல்ட் செய்து விடுவார். ஏனென்றால் பேக் ஃபுட்டில் யார்க்கரை விளையாடுவது கடினம். இப்படி ஒரு விஷயத்தை செய்யப்போகிறேன் என்று குறிப்பால் உணர்த்தி அதற்க்கு நம்மை தயார் படுத்தி விட்டு வேறோன்றினை அளிப்பதற்கே டபுள் ப்ளஃப் என்று பெயர். இதனைத்தான் நமது எடிட்டரும் "லெப்டில் இன்டிகேட்டர் போட்டு, ரைட்லே கையைக் காட்டி விட்டு, நேராய்ப் போகும்" வேலை என்று சொல்கிறார்.
ஒக்கே, விளக்கம் கொடுத்தது எல்லாம் சரி. இந்த இதழில் அப்படி என்னப்பா சர்ப்ஃரைஸ்? என்று கேட்பவர்களுக்கு ........ தொடர்ந்து படியுங்கள்.
ஹாட் & கூல் ஸ்பெஷல்: முதலில் இந்த இதழிற்கு பெயர் சூட்டிய வாசக அன்பர் காமிரேட் P கார்த்திகேயன் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. புதிய வாசகர்கள் என்னடா இது, ஒவ்வொரு புத்தகமும் நூறு ருபாய் விலையில் தானே வருகிறது, அப்போது எதற்கு ஒவ்வொரு இதழிற்கும் ஒரு ஸ்பெஷல் பெயர் என்று யோசிக்கலாம். ஆனால் லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் இருக்கும் பணியாளர்களுக்கு இப்படி ஒரு ஸ்பெஷல் பெயரை கொண்ட புத்தகம் என்று நினைவு வைத்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கின்றது. அதற்காகவே ஒவ்வொரு இதழிற்கும் ஒரு ஸ்பெஷல் பெயர் வைக்கப்படுகின்றது.
முன்பக்க அட்டைப்படம்: ஓவியர் மாலையப்பன் மற்றும் டிசைனர் கண்ணன் அவர்களின் கூடு முயற்சியில் வெளிவந்துள்ள இந்த அட்டைப்படம் மிகவும் சிறப்பான ஒன்றாகும். அதற்க்கு முழு முதல் காரணம் இந்த இதழின் அட்டையில் இருக்கும் வண்ணக் கலவையே
குறிப்பாக ஹீரோவின் காலடியில் (ராமர் கலர் லைட் ப்ளூ வண்ணத்தில்) ஒரு இடி போன்ற டிசைனை உருவாக்கி (மூலக்கதை அட்டையில் இருந்த) வெறுமையான அமைப்பை மாற்றியது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றால் அதற்க்கு மேலே (ராமர் அப்பா கலர் டார்க் ப்ளூ வண்ணத்தில்) முழு அட்டையையும் ஒரு டார்க் மூடிற்கு நம்மை வரவழைத்தது அபாரம் என்றே சொல்வேன்.
என்னதான் பச்சை கலர் கோட்-சூட் கண்ணை உறுத்துகிறது என்று சொன்னாலும் (மூலக்கதை அட்டையில் இருந்த) க்ரே கலர் கோட்-சூட்டை விட இது அட்ராக்டிவ் ஆகவே இருக்கிறது என்பதில் இருவேறு கருத்திருக்க இயலாது (என்னிடமும் ஒரு பச்சை நிற கோட் இருப்பதால் இப்படி சொல்லவில்லை, நம்புங்கள்).
மேலும் சமீப காலங்களில் நமது நண்பர்கள் கூறும் சென்சார் இந்த இதழின் அட்டையிலேயே அமலுக்கு வந்திருப்பதை காண கூர்மையான பார்வையும், ........ வேண்டாம் விடுங்க. ரசா,பாசமாகிவிடும். இங்கே க்ளிக் செய்து மூலக்கதை அட்டையை ஒரு முறை பார்த்து விட்டு இந்த அட்டையை பாருங்கள்.
என்ன, வித்தியாசத்தை கண்டறிய முடியவில்லையா? ஸ்கர்ட்'டின் உயரம் கீழே அதிகரித்து இருப்பதையும், தேநீர் சட்டையில் உயர்ந்து இருப்பதையும் காணுங்கள். தமிழ் நாட்டில் தமிழ் சினிமா படங்களுக்கு சென்சார் சர்டிஃபிகேட் வழங்கும் பக்கிரிசாமி அவர்களோ, அல்லது ஆந்திராவில் இருக்கும் தனலட்சுமி அவர்களோ கூட இந்த அளவிற்கு கூர்ந்து கவனிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்
பின் பக்க அட்டைப்படம்: இங்கே பதிவில் (சொந்த ஹோம் தளங்களில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணி போல) அட்டகாசமாக காட்சியளிக்கும் பின் அட்டைப்படம் நேரில் பார்க்கும்போது அயல் நாடுகளில் அடிபட்டு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணிபோல இருக்கிறது. ஏன் என்று பார்ப்பதற்கு முன்பாக அந்த அட்டைப்பட டிசைனை பாரட்டிவிடுவோம்.
உண்மையிலேயே பின்பக்க அட்டைப்படமும் அங்கு இருக்கும் பஞ்ச் டையலாக்குகளும் பிரம்மாஆஆதம்ம்ம்ம்ம்ம்ம்ம். இந்த சிறப்பு இதழிற்கு ஏன் ஹாட் & கூல் ஸ்பெஷல் என்று பெயர் வந்தது என்பதை விளக்கும் வகையில் "ஒரு போராளி ஜென்டில்மேன் ஆவது ஹாட்" & "ஒரு கோமாளி ஜென்டில்மேன் ஆவது கூல்" என்று அருமையாக வந்திருக்கிறது பின் பக்க அட்டை.
ஆனால், ஏற்கனவே டார்க் கலரில் ஒரு பார்டர் இருக்க, அதற்க்கு உள்ளே வெள்ளையில் ஒரு பார்டர் டிசைன் அமைய, அதையும் தாண்டி ஒரு போட்டோ ப்ரேம் பார்டர் வந்து சிக் பில் தலையில் பாதியை மறைப்பது கொஞ்சம் ஓவரே என்றாலும், பேட்டர்ன் அற்புதமாக இருப்பதால் அதுவும்கூட ஓக்கேதான். ஆனால் அதற்க்கு உள்ளே இருக்கும் படம் லோ ரெசல்யூஷனில் இருப்பதுதான் இந்த இதழிற்கு திருஷ்டி போட்டு. ஏன் இப்படி ஆனது? என்பது எனக்கு தெரிந்து இருந்தாலும், ஹ்ம்ம் திருஷ்டி போட்டுதான்.
முதல் சர்ப்ஃரைசாக ஜூன் மாத டெக்ஸ் வில்லர் ஸ்பெஷல் வெளியீடு என்று விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கும் பூத வேட்டை இதழைப்பற்றி ஒரே ஒரு சிந்தனையை உங்கள் மனதில் தூவி விட்டு செல்கிறேன்: இது டெக்ஸ் வில்லரின் ஐம்பதாவது இதழ் அல்ல. காமிரேட்டுகள் விரும்பினால் (பல வருடங்களாக) கிடப்பில் இருக்கும் டெக்ஸ் வில்லரின் அட்டவணை மற்றும் அட்டைப்படங்களை கொண்ட பதிவை இங்கே தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில் இடலாம். டெக்ஸ் ரசிகர்களுக்கு வெறியர்களுக்கு இது சரியான வேட்டையாக இருக்கும். குறிப்பாக இன்று பிறந்த நாள் கண்ட சேலம் டெக்ஸ் விஜயராகவன் போன்ற ரசிகர்களுக்கும், சென்ற ஆண்டே இந்த பதிவைப்பற்றி விசாரித்த "டெக்ஸ் ஃபேன்" ஸ்ரீ ராமிற்கும் ஒரு விருந்தாக அந்த பதிவு இருக்கும்.
டேஞ்சர் டையபாலிக் கதை ஏற்கனவே ஒன்று தமிழில் வந்துள்ளது. இரண்டாவது கதையாக (இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து) வரவிருக்கும் கதை "குற்றத் திருவிழா". குற்றவியல் சக்கரவர்த்தி ஸ்பைடர் இடத்தினை (தற்காலிகமாகவேனும்) டையபாலிக் நிரப்புவார் என்றே நம்புவோம்.
ஹாட் லைன் காமிக்ஸ் டைம்: நமது பதிப்பக வெளியீடுகளில் பெரும்பான்மையான வாசகர்கள் முதலில் படிக்கும் பகுதி நமது எடிட்டரின் கைவண்ணத்தில் லயன் காமிக்ஸ் இதழ்களில் "ஹாட் லைன்" பகுதியும், முத்து காமிக்ஸ் இதழ்களில் "காமிக்ஸ் டைம்" பகுதியும் தான். ஆனால் இந்த இதழ் லயன் காமிக்ஸ் என்றாலும் இதில் காமிக்ஸ் டைம் என்று வந்து இருப்பதைக்கூட விட்டுவிடலாம், ஆனால் "எனது எழுத்துக்களிலிருந்து உங்களுக்கு ஒரு ப்ரேக்" என்று சொல்லி இருப்பதைத்தான் பொறுத்துக் கொள்ளவே இயலாது என்கிறேன்.
எடிட்டரின் இந்த அடாத செயலை கண்டித்து இன்றுமுதல் தொடர்ந்து வாழைப்பூ வடை சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன். இந்த அரச்சீற்றத்தில் பங்குபெற விரும்புவோர் உடனடியாக வாழைப்பூ வடையை சாப்பிட்டு எடிட்டருக்கு தங்களது கண்டனத்தை போட்டோ, ஸ்க்ரீன்ஷாட், வீடியோ மூலமாக தெரியப்படுத்துங்கள். அடுத்த வாரம் சிவகாசி செல்லலாம் என்று இருக்கிறேன், அப்போது சுடச்சுட ஒரு டஜன் வாழைப்பூ வடையை பார்சல் கட்டிக்கொண்டு செல்ல உத்தேசம்.
| Lion Comics No 217 Hot n Cool Special Wayne Shelton Story 1st Page | Lion Comics No 217 Hot n Cool Special Wayne Shelton Story Sample Page |
ஒரு ஒப்பந்தத்தின் கதை: கதாசிரியர் வான் ஹாம், அடிதடி, சண்டை மசாலாப் பட ரசிகர்களுக்காக இந்த கதையை ரூம் போட்டு யோசித்திருப்பாரோ என்று தோன்றுகிறது. பின்னே என்னங்க, விளம்பர இடைவேளைக்கு பிறகு கதை தொடரும் என்று நமது தொலைக்காட்சிகளில் வருவதுபோல சண்டைக்காட்சிகளுக்கு பிறகு கதை தொடரும் என்று கதையின் நடுவில் அடிக்கடி சண்டை ப்ரேக் விடுகிறார். மற்றபடி கதை என்று பார்த்தால் பிரம்மாதமாக ஒன்றுமில்லை தான்.
ஆனால் மூன்று பாக கதைகளில் மூன்றாவதாக வருவது க்ளைமேக்ஸ் தானே? க்ளைமேக்ஸில் சண்டையில்லாமல் இருந்தால் கல்யானவிருந்தில் பாயாசம் இல்லாதது போல குறையாகவே இருக்கும்.ஆகவே முதல் இரண்டு பாகங்களுக்கு இதுவே சரியான முடிவு. ஒருமுறை முதல் இரண்டு பாகங்களை படித்துவிட்டு, கதாபாத்திரங்களை நினைவில் கொண்டுவந்துவிட்டு பிறகு இந்த மூன்றாம் பாகத்திற்கு நுழைவது நலம்.
எடிட்டர் ஸ்பெஷல் ஆக வெளியிட்டு இருக்கும் இந்த சாம்பிள் பக்கத்தில் வேய்ன் ஷெல்டன் அந்த பெண்ணிடம் "பல்பு வாங்குவது" போல இருந்தாலும், கதையின் இறுதி பகுதியில் இதற்காக வட்டியும், முதலுமாக ஒரு செம பன்ச் வைத்து இருக்கிறார் கதாசிரியர். அநேகமாக அவர் ரஜினிகாந்த், விஜயஷாந்தி நடித்த மன்னன் படத்தின் ரசிகராக இருப்பார் போலும்....
இதுவரையில் வேய்ன் ஷெல்டன் கதைகள் (அஃபீஷியலாக) ஆங்கிலத்தில் வெளிவந்தது கிடையாது. ஆனால் பெங்களூருவில் நமது காமிக்-கான் முடிந்த மறுநாள் சினிபுக் நிறுவனத்தினர் மூலமாக இந்த தொடரின் முதல் பாகம் ஆங்கிலத்தில் வெளிவர இருக்கிறது. ஏற்கனவே லார்கொ வின்ச் தொடரை படித்துவிட்டு அதனை படமாக எடுப்பதற்கு இந்திய சினிமா உரிமையை வாங்கிய ஹீரோவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சந்தித்தேன். (இப்போதைக்கு அவர் இந்த லார்கொ வின்ச் கதையை படமாக எடுக்கப்போவதில்லை என்பது வேறு விஷயம்). அவரிடமே இந்த வேய்ன் ஷெல்டன் கதையையும் பரிந்துரைக்கலாம் என்றிருக்கிறேன். என்ன, இந்த வேய்ன் ஷெல்டன் கேரக்டரில் நடிக்க அவர் இன்னமும் ஒரு பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டி இருக்கும்.
| Lion Comics No 217 Hot n Cool Special Chick Bill Story 1st Page | Lion Comics No 217 Hot n Cool Special IznoGoud Story 1st Page No 104 |
ஒரு கழுதையின் கதை: இந்த தலைப்பிற்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று சிறிது குழப்பம் வந்தாலும், ஷெரிப் டாக்புல் மூலமாக "அந்த கழுதையே நீங்கதாங்க" என்று கிட ஆர்டினுக்கு சொல்லப்படுகிறது. ஒரிஜினல் கதை தலைப்பை சார்ந்தே (லானாவின் கழுதை) இந்த தலைப்பு வைக்கப்பட்டதாக எடிட்டர் சொல்கிறார்.
சமீப காலங்களில் வந்த சிக்பில் குழுவுனரின் கதைகள் காமெடியில் சற்றே பின் தங்கியிருப்பதாக எனக்கு ஒரு அவதானிப்பு உண்டு. குறிப்பாக நீலப்பேய் மர்மம்,விண்வெளியில் ஒரு எலி, விற்பனைக்கு இரு ஷெரிப், இரும்புக் கவ பாய், கொலைகாரக் காதலி என்று மினி லயன் கிளாசிக் வரிசையில் லயன் காமிக்ஸ் இதழ்களில் வந்த கதைகள் எதுவுமே இல்லை. நெவர் பிஃபோர் ஸ்பெஷல் இதழில் வந்த கதையும் இதே ரகத்தில் சேர்த்தி என்பதால் இந்த கதையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தேன். என்னுடைய காத்திருப்பு வீண் போகவில்லை.
கண்டிப்பாக இந்த கதையானது மினி லயன் கிளாசிக் சிக்பில் கதைகள் பட்டியலில் இடம் பிடிக்கும். மிகவும் எளிமையான கதையோட்டம், ஜாலியான சம்பவங்கள், கவுண்டமணி-செந்தில் காமெடி கலாட்டா, குள்ளனின் குறும்புகள் என்று கதை ரெகுலரான டெம்பிளேட்டில் நகர்ந்து எதிர்ப்பார்க்கப்பட்ட முடிவுடன் பயணிக்கிறது. கண்டிப்பாக மிஸ் செய்யாமல் படிக்க வேண்டிய சிக்பில் குழுவினரின் சாகசம்.
மதியில்லா மந்திரியின் ஒரு போஸ்டர் படலம்: நமது கதைகளில் "ஒரு" மற்றும் "படலம்" என்கிற வார்த்தைகள் அதிகமாக வருவதாக ஒரு சாரர் குற்றச்சாட்டை சுமத்திவரும் இந்த சூழலில் அந்த இரண்டு வார்த்தைகளை ஒருங்கே கொண்டு இந்த தலைப்பு. வழக்கமான பாணியில், நாம் எதிர்ப்பார்க்கும் வகையில் ஆனால் நாம் எதிர்பார்க்கவே முடியாத சம்பவங்களுடன் இந்த கதை அமைந்திருக்கிறது.
ஜாலியான நமது சுல்தானுக்கு குழிபறிக்க (அட, இந்த கதையில நிஜம்மாவே குழி பறிக்குராறு நம்ம மதியில்லா மந்திரி) முயன்று வழமை போலவே தோற்கும் ந மோடி மஸ்தானும், அவரது நிழலான ஜால்ரா பாயும் மட்டுமில்லாமல் வேறொரு நபரும் சேர்ந்துக் கொண்டு நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.இன்ஸ்டன்ட் கிளாசிக்.
நமது இதழ்களில் இப்போதெல்லாம் ரெகுலர் ஆகிவிட்ட இரத்தவெறியன் ஹேகர், குட்டிஸ் கார்னர் இங்கே உங்களின் பார்வைக்கு. மற்றும் கலரில் வந்துள்ள ஸ்பெஷல் விளம்பரம்.
கடைசியாக வந்துள்ள இந்த ஸ்பெஷல் விளம்பரத்தை பற்றியதே எனது அடுத்த பதிவு. அநேகமாக நாளை இரவுக்குள் பதிவிட முயல்கிறேன். ஆரம்பத்தில் சொன்ன அந்த சர்ஃப்ரைஸ் இந்த விளம்பரத்திலும், அடுத்த பதிவிலும் இருக்கிறது.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.

