Pages

Wednesday, February 15, 2012

4 டெக்ஸ் வில்லர் ஓவியர் Francesco Gamba (1926-2012) மறைவு: அன்னாருக்கு அஞ்சலி

Dear ComiRades,

இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து பல நல்ல விஷயங்கள் நடந்தவண்ணம் இருந்தாலும் காமிரேட்டுகள் உடன் பகிர்ந்து கொள்ள  சில சோக செய்திகளும் உள்ளன. அவற்றில் முதன்மையான ஒன்று நேற்றிரவு நான் கேள்விப்பட்டு இன்று காலையில் உறுதிப்படுத்திய தகவல்: இத்தாலியை சேர்ந்த பழம்பெரும் காமிக்ஸ் (சித்திரக்கதை) ஓவியரும், கதாசிரியருமாகிய ஃபிரான்செஸ்கோ கெம்பா உடல் நலக்குறைவு காரணமாக Feb 13-ம் தேதியன்று காலமானார் என்பதே. 

தமிழ் காமிக்ஸ் உலகின் ரசிகர்களுக்காக இந்த உபரித்தகவல்: இவர் நம்முடைய மனம் கவர்ந்த ரேஞ்சர் டெக்ஸ் வில்லர் தோன்றிய பதினைந்துக்கும் மேற்பட்ட கதைகளுக்கு ஓவியம் வரைந்து இருக்கிறார். அவற்றில் இரண்டினை எடிட்டர் எஸ்.விஜயன் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்தும் வெளியிட்டுள்ளார். அந்த இரண்டு கதைகள் என்னவென்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பாக அவர் வரைந்த சில ஓவியங்களின் சாம்பிள் மற்றும் அவரது சுருக்கமான வாழ்க்கை வரலாறு:

Francesco Gamba Artwork – Tex Willer Francesco Gamba Artwork – Tex Willer Francesco Gamba Artwork – Assorted Art Collection
Francesco Gamba Tex Francesco Gamba Tex & Kit Francesco Gamba Tex 2

இத்தாலியின் கடற்கரைப்பகுதியாகிய "லா ஸ்பெசியா" என்கிற நகரத்தில் 1926-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினைந்தாம் தேதியில் பிறந்த ஃபிரான்செஸ்கோ கெம்பாவிற்கு சிறு வயதில் ஓவியத்தின் மேல் ஈடுபாடு தோன்றாமல் போய் இருந்தால்தான் ஆச்சர்யப்பட வேண்டியிருந்திருக்கும். ஏனென்றால் ஃபிரான்செஸ்கோ கெம்பாவின் மூத்த சகோதரர் ஒரு புகழ் பெற்ற காமிக்ஸ் ஓவியர். ஆகையால் ஓவியங்கள் வரைவது இவருக்கும் இயல்பாகவே வந்தது. தன்னுடைய பதின்ம வயதுகளில் ஓவியங்கள் வரைவதையே தன்னுடைய முழுநேரப்பணியாக கொள்ள ஆரம்பித்த ஃபிரான்செஸ்கோ கெம்பா, தன்னுடைய இருபத்தியோராவது வயதில் முதன் முதலாக ரேஸ்ஸோ பில் என்கிற காமிக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட கதையை வரைந்தார்.

Palaivanap Paralogam ஐம்பதுகளில் கேசரொட்டி குழுமத்திற்காக பணி புரிந்தபோது கியான்லூய்ஜி போனெல்லி உருவாக்கிய யோர்கா என்கிற தொடருக்கு படம் வரைந்தார். அப்போதே போனெல்லி உடன் தொடர்பு ஏற்பட்டு பின்னர் போனெல்லி குழுமத்தின் பல கதைகளுக்கு படம் வரையவும் ஆரம்பித்தார். அப்போதுதான் இத்தாலியில் புகழ் பெற்ற காமிக்ஸ் ஹீரோவாகிய டெக்ஸ் வில்லர் கதைத்தொடருக்கும் படங்கள் வரைய தொடங்கினார். பின்னர் போனெல்லி குழுமத்தில் இருந்து வெளிவந்த ஜாகோர் தொடருக்கும் பிரதானமாக வரைந்தார்.

கிட்ட தட்ட பதினைந்து டெக்ஸ் வில்லர் கதைகளுக்கு மேலாக ஃபிரான்செஸ்கோ கெம்பா வரைந்து இருந்தாலும், தமிழில் வந்தவை இரண்டே இரண்டுதான் (என்று நினைக்கிறேன்). ஒரு முறை வீட்டிற்க்கு சென்று புத்தகங்களை எடுத்துப்பார்த்தால் உறுதியாக சொல்லிவிடுவேன். இப்போதைக்கு நினைவில் இருப்பதைக்கொண்டு சொல்வதானால் இந்த இரண்டு புத்தகங்களே.

S.No No Title Date Author Artist Cover S.No Date
1 112 பாலைவனப் பரலோகம் May-95 Gianluigi Bonelli  Francesco Gamba Aurelio Galeppini 34/35 Aug-63
2 126 நள்ளிரவு வேட்டை Nov-96 Gianluigi Bonelli  Francesco Gamba Aurelio Galeppini 48/49 Oct-64

இப்போதைக்கு அந்த புத்தகங்களின் உள் பக்கங்கள் ஸ்கான் கைவசம் இல்லாததால் வெறும் அட்டைப்படங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு.

Lion Comics Issue no 112 Top Ten Special Issue Dated May 1995 Palaivanap Paralogam Cover Lion Comics Issue no 112 Top Ten Special Issue Dated May 1995 Palaivanap Paralogam Back Cover Tex No 034 Issue Dated Aug 1963 Cover Paalaivanap Paralogam
Lion 112 Lion Top 10 Special Lion 112 Lion Top 10 Special 2 Tex No 034 Issue Dated Aug 1963 Paalaivanap Paralogam

டாப் டென் ஸ்பெஷல் பலரின் கைவசம் இல்லாமல் இருந்தாலும்கூட நள்ளிரவு வேட்டை புத்தகம் இருக்கும் என்று நம்புகிறேன். அதிலும் சமீப காலம் வரை இது லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் விற்பனைக்கு இருந்தது குறிப்பிடத் தக்கது.

Lion Comics Issue No 126 Diwali Special Issue Dated Nov 1996 Nalliravu Vettai Cover Lion Comics Issue No 126 Diwali Special Issue Dated Nov 1996 Nalliravu Vettai Back Cover Tex No 048 Issue Dated Oct 1964 Nalliravu Vettai
Lion Comics Issue No 126 Dated Nov 1996 Nalliravu Vettai Lion Comics Issue No 126 Dated Nov 1996 Nalliravu Vettai 2 Tex No 048 Issue Dated Oct 1964 Nalliravu Vettai

ஜாகோர் தொடருக்கு இவர் ஓவியம் வரைந்து புகழ் பெற்றவர் என்பதை முன்பே சொல்லியிருக்கிறோம் அல்லவா, அந்த தொடர் ரசிகர்கள் இவருக்காக உருவாக்கிய ஒரு வீடியோ உங்களுக்காக:

ஃபிரான்செஸ்கோ கெம்பா – R.I.P.

இதற்க்கு மேல் இவரின் மறைவைப்பற்றி  சொல்ல வார்த்தைகள்  எதுவும் இல்லை.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

4 comments:

  1. ஃபிரான்செஸ்கோ கெம்பாvukku en solute udanana iruthi anjaliyai seluthi kolgiren.

    ReplyDelete
  2. லயன் கௌ-பாய் ஸ்பெஷலில் வந்த டெக்ஸ் கதைக்கும் இவர்தான் ஓவியம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே,
      லயன் கௌ-பாய் ஸ்பெஷலில் வந்த டெக்ஸ் வில்லர் கதைக்கு ஓவியங்களை வரைந்தவர் ஃபேபியோ சிவிடெல்லி ஆவார். புதியதொரு பாணியில் வரையப்பட்ட அந்த ஓவியங்கள் உங்களைப்போலவே என்னையும் பெரிதும் கவர்ந்தன.

      இவர்தான் சமீப கால லயன் காமிக்ஸ் டெக்ஸ் வில்லர் வெளியீடுகளாகிய கபால முத்திரை, சதுப்பில் ஒரு சதிகார கும்பல், மரணத்தின் முன்னோடி, காற்றில் கரைந்த கழுகு, எமனின் எல்லையில் போன்ற கதைகளுக்கு ஓவியங்கள் வரைந்தவர்.

      Delete
  3. ஆத்மா சாந்தி அடையட்டும்....

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails