Dear ComiRades,
லயன் காமிக்ஸ் எடிட்டர் திரு எஸ்.விஜயன் அவர்கள் தங்களுடைய சமீப பதிவுகளில் ரீபிரின்ட்டுகள் குறித்து எழுதி வருகிறார். அதில் (இந்த பதிவில்) காமிக்ஸ் கிளாசிக்ஸ் வரிசையில் வெறும் முத்து காமிக்ஸ் (+ ஸ்பைடர், ஆர்ச்சி) கதைகளை மட்டுமே ரீபிரின்ட் செய்யாமல் ஆரம்ப கால லயன்,மினி லயன், திகில் காமிக்ஸ் கதைகளையும் ரீபிரின்ட் செய்தால் என்ன? அப்படி செய்தால் வாசகர்களின் ரிபிரின்ட் லிஸ்ட் என்ன என்றும் எழுதி இருந்தார். அதற்க்கு பலத்த வரவேற்ப்பு. அப்போதே இந்த பதிவினை தயார் செய்து இருந்தாலும், நேரமின்மை காரணமாக இட இயலவில்லை. அடுத்த வாரமும் மும்பையிலேயே கழிக்க இருப்பதால், பதிவுகள் வருவது கேள்விக்குறியே.
என்னுடைய தாமதமான பதிவின் விளைவு: ஆசிரியரே முதல் ரீபிரின்ட் இதழ் பற்றிய விவரங்களையும் பதிவிட்டு விட்டார். முதல் ரீபிரின்ட்: என்னுடைய ரீபிரின்ட் லிஸ்ட்டில் மூன்றாவதாக இருந்த தலைவாங்கி குரங்கு (எடிட்டரின் பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்). இந்த ரீபிரின்ட் லிஸ்ட்டில் நுழையும் முன்னர் சில விளக்கங்கள்:
-
இந்த ரீபிரின்ட் லிஸ்ட் லயன் காமிக்ஸ், மினி லயன் + ஜூனியர் லயன், திகில் காமிக்ஸ், மற்றும் சார்ந்த காமிக்ஸ் என்று தனியாக வெளியிட ஆசை.
-
ஒவ்வொரு லிஸ்ட்டிலும் மொத்தம் பத்து கதை(கள்) இருக்கும்.
-
அவை எப்படி செலக்ட் ஆகியது என்று சின்னக்குறிப்புகள் பாயிண்ட்டுகளாக இருக்கும்.
-
லயன் காமிக்ஸ் வரிசையில் முதல் நூறு புத்தகங்கள் மட்டுமே பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன் பின்னர் வந்தவை கிட்டத்தட்ட (படிக்கவாவது) கிடைக்கும் என்பதால் இந்த முடிவு.
-
ஸ்பைடர், ஆர்ச்சி போன்ற டைஜெஸ்ட் கதைகளை ஏற்கனவே ரீபிரின்ட் செய்துக்கொண்டு இருப்பதால் அவற்றை விட்டுவிடலாம் (இன்னமும்கூட ஸ்பைடரின் இராட்சசக் குள்ளன், சைத்தான் விஞ்ஞானி, மரண ராகம் போன்ற கதைகளையும், நீதிக்காவலன் ஸ்பைடர் போன்ற கிளாசிக்குகளையும் வெளியிடாமல் இருக்கையில், அவற்றை பற்றி தனியாக எழுத வேண்டி இருப்பதாலும், இங்கே அவை -கவுண்டர் பாஷையில் சொல்வதானால்-அன் செலக்ட் செய்யப்படுகின்றன).
-
சமீபத்திய புத்தக கண்காட்சி விற்பனையில் கூட எனக்கு மிகவும் பிடித்த மாடஸ்டி கதைகள் மந்தமாக விற்பனையானதால் மாடஸ்டி கதைகள் கூட இங்கே அன் செலக்ட் ஆகின்றன. குறிப்பாக சொல்வதென்றால் இரட்டைவேட்டையர் கதையாகிய மர்ம எதிரி புத்தகத்தில் இரண்டாவது மூன்றாவது கதையாக வரும் மாடஸ்டியின் கதை மற்றும் தி ரிடர்ன் ஆப் கேப்ரியல் கதையே முதலில் ரீபிரின்ட் செய்யப்பட வேண்டிய மாடஸ்டி கதை. ஆனால் அவற்றை பின்னர் பார்ப்போம்.
இப்போதைக்கு இந்த விவரங்கள் போதும். ஆகையால் லயன் காமிக்ஸ் ரீபிரின்ட் லிஸ்ட்'ஐ பார்ப்போமா?
| -
கதை சதி வலை! -
-
வெளியீடு 13 -
-
மறுபதிப்புகள் இதுவரை இல்லை -
-
ஆசிரியர் S.விஜயன் -
அச்சிட்டோர் முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ், சிவகாசி -
நாயகர் ஜான் மாஸ்டர் -
மூலம் MASTER-SPY (ஆங்கிலம்) -
இதழ் TIGER (Weekly) -
வெளியீடு IPC MAGAZINES LTD. -
முதல் பதிப்பு APR 1983 TO JAN 1984 -
கதை ??? -
ஓவியம் SANDY JAMES -
தமிழில் S.விஜயன் -
பக்கங்கள் (கருப்பு வெள்ளை) -
சைஸ் 8"x11" -
விலை ரூ:4/- (1985 முதல் பதிப்பின் போது) -
-
தமிழில் வெளிவந்த முதல் விளையாட்டு சம்பந்தப்பட்ட காமிக்ஸ் ஹீரோ ஜான் மாஸ்டர் -
-
பெரிய சைசில், தெளிவான சித்திரங்களுடன் வெளிவந்த இந்த புத்தகம் ஒரு கலெக்டர்ஸ் டிரீம் என்று சொல்லப்படுகிறது.அதனாலேயே புத்தக சந்தையில் அதிக விலைக்கும் பேசப்படுகிறது. |
| -
கதை காணாமல் போன கடல் -
-
வெளியீடு 14 -
முதல் பதிப்பு ஜூன் 1985 -
மறுபதிப்புகள் இதுவரை இல்லை -
-
ஆசிரியர் S.விஜயன் -
அச்சிட்டோர் முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ், சிவகாசி -
நாயகர்(கள்) சிஐடி லாரன்ஸ் + ஜூடோ டேவிட் -
மூலம் Secret Agent Barracuda (ஆங்கிலம்) -
இதழ் Lion (Weekly) -
வெளியீடு IPC MAGAZINES LTD. -
முதல் பதிப்பு 18-03-1967 to 26-06-1967 -
கதை ??? -
ஓவியம் ரெனாடோ பொலீஸ் -
தமிழில் S.விஜயன் -
பக்கங்கள் (கருப்பு வெள்ளை) -
சைஸ் 10 x 14 CM -
விலை ரூ:2/- (1985 முதல் பதிப்பின் போது) -
சாகச ஜோடி லாரன்ஸ் + டேவிட் கதையின் புதிய (வாரந்திர) தொடர் வரிசை.வார இதழ்களில் வெளியானது. -
பழிக்கு பழி, நட்பு, சென்டிமென்ட் என்று ஒரு வித்யாசமான கலவை இந்த கதை. -
கிங் கோப்ரா என்கிற மாபெரும் ஆளுமையின் எதிர்நிலை உருவக அறிமுகம் (அதாங்க பிரம்மாண்ட வில்லன் அறிமுகம்). -
இந்த கதையின் தொடர்ச்சி (விளம்பரபடுத்தப்பட்டு) இருக்கிறது.ஆசிரியர் அதனை வெளியிட எண்ணினால், அதன் முதல் பகுதியாக இந்த கதை ஒரு தொடர்ச்சியாக இருக்கும். |
-
துடிப்பான, விறுவிறுப்பான சாகச ஜோடி இரட்டை வேட்டையரின் அறிமுகம். -
ஒரு சைக்கோ வில்லன் + பக்கத்திற்கு பக்கம் திகிலான திருப்பங்களுடன், பல தடைகளையும், பொறிகளையும் கடந்து மிகவும் வித்தியாசமான ஒரு முடிவை கொண்ட கதை. | -
கதை ஆப்பிரிக்க சதி -
-
வெளியீடு 20 -
முதல் பதிப்பு Dec1985 -
மறுபதிப்புகள் இதுவரை இல்லை -
-
ஆசிரியர் S.விஜயன் -
அச்சிட்டோர் முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ், சிவகாசி -
நாயகர்(கள்) இரட்டை வேட்டையர்கள் ஜார்ஜ் + டிரேக் -
மூலம் Hunters – S.I.6 (ஆங்கிலம்) -
இதழ் Battle (Weekly) -
வெளியீடு IPC MAGAZINES LTD. -
முதல் பதிப்பு FROM 27.02.1982 TO 03.04.1982 (6 ISSUES) -
கதை ஜான் ரிச்சர்ட் -
ஓவியம் கார்லோஸ் பினோ -
LETTERER - பீட் நைட் -
தமிழில் S.விஜயன் -
பக்கங்கள் (கருப்பு வெள்ளை) -
சைஸ் 10 x 14 CM -
விலை ரூ:4/- (1985 முதல் பதிப்பின் போது) |
| -
கதை மனித எரிமலை(& மரணப் பணி)! -
-
வெளியீடு 21 -
முதல் பதிப்பு ஜனவரி 1986 (பொங்கல் மலர்) -
மறுபதிப்புகள் மரணப் பணி(காமிக்ஸ் கிளாசிக்ஸில்) -
-
ஆசிரியர் S.விஜயன் -
அச்சிட்டோர் முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ், சிவகாசி -
நாயகர் இருப்புக் கை நார்மன் -
மூலம் Gaunt (ஆங்கிலம்) -
இதழ் Battle Picture Weekly -
வெளியீடு IPC MAGAZINES LTD. -
முதல் பதிப்பு 25 Jun 77 TO 16 Jul 77(The Haunted Man) 23 Jul 77 to 27 Aug 77(Blitzkreig) -
கதை John Wagner -
ஓவியம் John Hooper -
தமிழில் S.விஜயன் -
பக்கங்கள் (கருப்பு வெள்ளை) -
சைஸ் 6"x8" -
விலை ரூ:3/- (1986 முதல் பதிப்பின் போது)/ரூ:10/-(CC) -
-
இரும்புக்கை உளவாளி என்கிற ஒரு Pathos ஹீரோவின் அறிமுகம் -
அழுத்தமான வசனங்கள்.பிற்காலத்தில் கமல்ஹாசன் இதே வசனங்களை தனது குருதிப் புனல் படத்தில் உபயோகித்திருப்பார். -
Revenge-Is-My-Middle-Name Genre. இன்றும் அந்த முதல் கதையை படிக்கும்போது மனம் கனத்த ஒரு வலியுடனே இருக்கும். அதுவும் அந்த ஓவியங்கள், நார்மனின் கண்கள், பாரிஸ் வெறிநாயின் மறக்கமுடியாத அந்த வசியமூட்டும் திறன், கடைசியில் இருளில் அவனை பழிவாங்கும் நார்மன் என்று ஒரு அட்டகாசமான கதையமைப்பு இது. |
| -
கதை அதிரடி வீரர் ஹெர்குலஸ் -
-
வெளியீடு 26 -
முதல் பதிப்பு ஜூன் 1986 -
மறுபதிப்புகள் இதுவரை இல்லை -
-
ஆசிரியர் S.விஜயன் -
அச்சிட்டோர் முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ், சிவகாசி -
நாயகர் அதிரடி வீரர் ஹெர்குலஸ் -
மூலம் Cannonball Carmody (French) -
இதழ் TinTin -
வெளியீடு Operation One-Tel -
முதல் பதிப்பு 1984 (Lombard Edition) -
-
-
தமிழில் S.விஜயன் -
பக்கங்கள் (கருப்பு வெள்ளை) -
சைஸ் 10 x 14 CM -
விலை ரூ:2.50/- (1986 முதல் பதிப்பின் போது) -
என்னுடைய மனம் கவர்ந்த காமிக்ஸ் கதாசிரியர் லியோனார்ட் ஸ்டார் உருவாக்கிய சினிமா பாணியிலான ஆக்ஷன் கதை -
புதியதொரு ஹீரோ, சந்தானம் போன்ற ஒரு ரசிக்கத்தக்க சைட்கிக், மனோவியல் ரீதியிலான நடை என்று ஒரு கலக்கல் காம்பினேஷன் -
கதையில் வரும் ஒரு புதியதொரு எந்திரம்,அதனை ட்டரை செய்யும் கட்டம் மிகவும் ரசிக்கவைக்கும். மொட்டைத்தலை வில்லனும், விசித்திரமான ஒரு பெண்ணும் இந்த கதையின் முக்கிய பாத்திரங்கள். |
| -
கதை டிராகன் நகரம் -
-
வெளியீடு 50 -
-
மறுபதிப்புகள் இதுவரை இல்லை -
-
ஆசிரியர் S.விஜயன் -
அச்சிட்டோர் பிரகாஷ் பப்ளிஷர்ஸ், சிவகாசி -
நாயகர் டெக்ஸ் வில்லர் -
மூலம் டெக்ஸ் வில்லர் (இத்தாலி) -
இதழ் Tex (Monthly) -
வெளியீடு Sergio Bonnelli Editore -
முதல் பதிப்பு Tex No 46, Aug 1964 -
கதை Gianluigi Bonelli -
ஓவியம் Aurelio Galeppini -
தமிழில் S.விஜயன் -
பக்கங்கள் (கருப்பு வெள்ளை) -
சைஸ் 6"x8" -
விலை ரூ:5/- (1988 முதல் பதிப்பின் போது) -
-
நட்பின் வலிமையையும், கடமை உணர்ச்சியையும் சரிவிகிதத்தில் கலந்த ஒரு அக்மார்க் கமர்ஷியல் டெக்ஸ் வில்லர் கதம்பம் -
கன்பூஷியசை கோட் செய்யும் (கஞ்சா அடிக்கும்) வில்லன், டிராகன் முத்திரை, அமெரிக்காவில் சீன ராஜ்ஜியம் என்று கலக்கல் காக்டெயில். -
அசத்தலான வசனங்கள்,இளைய தளபதி பட வசனங்களைப்போல பல பன்ச் டையலாக்குகள் நிறைந்த கதை. |
| -
கதை வாரிசு வேட்டை -
-
வெளியீடு 58 -
முதல் பதிப்பு Feb 1989 -
மறுபதிப்புகள் இதுவரை இல்லை -
-
ஆசிரியர் S.விஜயன் -
அச்சிட்டோர் பிரகாஷ் பப்ளிஷர்ஸ், சிவகாசி -
நாயகர் ஹர்லக் ஷோம்ஸ் -
மூலம் Herlock Sholmes (Yugoslovian / Translated English0) -
இதழ் Plavi Vjaesnik (Yugoslovian) / Tingle (Weekly) -
வெளியீடு Plavi Vjaesnik (Yugoslovian) -
முதல் பதிப்பு 1967-1972 -
கதை Furtinger -
ஓவியம் Julio Radilovic. -
தமிழில் S.விஜயன் -
பக்கங்கள் (கருப்பு வெள்ளை) -
சைஸ் Crime Novel Size -
விலை ரூ:2.50/- (1989 முதல் பதிப்பின் போது) -
Parody அல்லது spoof வகையை சேர்ந்த கதை. தமிழில் இதுபோன்ற (மொழிபெயர்ப்பிலும்) முயற்சிகள் மிக,மிகக் குறைவே. -
ஷெர்லக் ஹோம்ஸ் கதாபாத்திரத்துக்கு முழுக்க முழுக்க காமிக்ஸ் வடிவிலான ஒரு ஹோமேஜ். -
இதைப்படித்துவிட்டு யாராவது சிரிக்காமல் இருக்க முடியுமா என்று போட்டியே கூட வைக்கலாம்.அந்த அளவிற்கு சிறப்பான சிரிப்பு கதை + வசனங்கள். |
| -
கதை மந்திர ராணி -
-
வெளியீடு 61 -
முதல் பதிப்பு June 1989 -
மறுபதிப்புகள் இதுவரை இல்லை -
-
ஆசிரியர் S.விஜயன் -
அச்சிட்டோர் பிரகாஷ் பப்ளிஷர்ஸ், சிவகாசி -
நாயகர் சாம்சன் -
மூலம் Taar – The Rebel (French) -
இதழ் The Golden Hourglass -
-
முதல் பதிப்பு Jan 1981 – Complete Edition -
-
-
தமிழில் S.விஜயன் -
பக்கங்கள் (கருப்பு வெள்ளை) -
சைஸ் 10 x 14 CM -
விலை ரூ:2/- (1989 முதல் பதிப்பின் போது) -
தமிழில் மந்திரக்கதைகளை காமிக்ஸ் வடிவில் படிக்க ஒரு அற்புதமான வரம் இந்த கதைதொடர்.உயிரோட்டமான ஓவியங்கள், துடிப்பான கதை. -
இந்த கதையில் வரும் புதிர்களும், விவேகமான முடிவுகளும் ரசிக்கத்தக்கவை. -
Sword & Sorcery வகை கதைப்பிரியர்களுக்கு முழு விருந்து. கலரில் இப்போது வெளியிட்டால் அட்டகாசமாக இருக்கும். |
| -
கதை எமனுக்கு எமன் -
-
வெளியீடு 67 -
முதல் பதிப்பு 1990 -
மறுபதிப்புகள் இதுவரை இல்லை -
-
ஆசிரியர் S.விஜயன் -
அச்சிட்டோர் பிரகாஷ் பப்ளிஷர்ஸ், சிவகாசி -
நாயகர் சார்ஜண்ட் தாமஸ் -
மூலம் TOP SERGEANT IRONSIDE (ஆங்கிலம்) -
இதழ் ஃப்ரண்ட்லைன் (FRONTLINE) தொடர் -
வெளியீடு IPC MAGAZINES LTD. -
-
கதை ??? -
ஓவியம் ??? -
தமிழில் S.விஜயன் -
பக்கங்கள் (கருப்பு வெள்ளை) -
சைஸ் Pocket Size -
விலை ரூ:2.50/- (1990 முதல் பதிப்பின் போது) -
-
இராணுவ மற்றும் போர்க்கதைகள் தமிழில் காமிக்ஸ் வடிவில் மிகவும் குறைந்த அளவிலேயே வந்துள்ளன. அவற்றில் மிகச்சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று. -
தலைமை பண்பு, போராடும் விடாப்பிடித்தனம், சமயோஜிதப்புத்தி, பாசம், அன்பினை வெளிபடுத்துதல், பழி வாங்கும் உணர்ச்சி, ராணுவ கட்டுப்பாடு, என்று பல உணர்சிகளின் வெளிப்பாடாக இந்த கதை அமைந்துள்ளது. |
| -
கதை கழுகு வேட்டை -
-
வெளியீடு 86 -
முதல் பதிப்பு Oct 1992 (தீபாவளி மலர்) -
மறுபதிப்புகள் இதுவரை இல்லை -
-
ஆசிரியர் S.விஜயன் -
அச்சிட்டோர் பிரகாஷ் பப்ளிஷர்ஸ், சிவகாசி -
நாயகர்(கள்) டெக்ஸ் வில்லர் -
மூலம் டெக்ஸ் வில்லர் (இத்தாலி) -
இதழ் Tex (Monthly) -
வெளியீடு Sergio Bonnelli Editore -
முதல் பதிப்பு Tex No 190 (Aug 1976)கதை Guido Nolitta -
ஓவியம் Aurelio Galeppini -
தமிழில் S.விஜயன் -
பக்கங்கள் (கருப்பு வெள்ளை) -
சைஸ் 6"x8" -
விலை ரூ:10/- (1992 முதல் பதிப்பின் போது) -
பழிக்கு பழி கதைக்கு பிறகு பழி வாங்குவதை மைய்யமாக கொண்ட ஒரு கதை. கார்சனின் கடந்த காலம், தலை வாங்கி குரங்கு, பழி வாங்கும் பாவை, பழிக்கு பழி கதைகளுடன் இந்த கதையும் டெக்ஸ் வில்லரின் டாப் கதைகளில் ஒன்று. -
இந்த கதையின் வில்லன் மிகவும் பயங்கரமான அதே சமயம் (பழிக்கு பழி ரூபி போல) ரசிக்கப்படும் பாத்திரம். அவனின் மறைவுக்கு ஒரு கனம் நீங்கள் கூட வருந்துவீர்கள். -
The Good,Bad & Ugly கிளைமேக்ஸ் காட்சி போல இந்த கதையின் முடிவில் வரும் சண்டையும், இசையை வெளிப்படுத்தும் அந்த கடிகாரமும் மறக்கவியலா விஷயங்கள். |
இந்த பதிவில் மிஸ் ஆன சில அருமையான கதைகள்:
- அதிரடிப் படை
- டேஞ்சர் டயபாலிக் (Purely for Collectors)
- Operation அலாவுதீன்
- காரிகன் - ஒரு பனி மலை பயங்கரம்
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
இரட்டை வேட்டையர் - ஆப்பரிக்க சதி
ReplyDeleteகதை - ஜான் ரிச்சர்ட்
ஓவியம் - கார்லோஸ் பினோ
LETTERER - பீட் நைட்
FROM 27.02.1982 TO 03.04.1982 (6 ISSUES)
தலைவர்,
அ.கொ.தீ.க.
காணாமல் போன கடல்
ReplyDeleteஓவியம் - ரெனாடோ பொலீஸ்
தலைவர்,
அ.கொ.தீ.க.
Viswa ji,
ReplyDeleteThis list is good but We can remove both Tex stories & include 2 stories from "திகில் காமிக்ஸ"
By,
Mariyappan S
The idea of this post was to pick my selection for the reprints amongst Lion comics issues only. hence i've chosen only lion comics only.
DeleteThere will be separate wish list for thigil comics and mini lion, and they will be posted here very soon.
நானும் இதை அப்படியே வழி மொழிகிறேன் !!!
ReplyDeleteவணக்கம் நண்பரே!
ReplyDeleteசிறு பிள்ளையிலிருந்தே வாண்டுமாமாவின் அதிதீவிர விசிறி நான். பழைய பூந்தளிர் இதழ்கள், பார்வதி சித்திரக் கதைப் பொத்தகங்கள் ஆகியவற்றைப் பொக்கிஷம் போல் போற்றிப் பாதுகாத்து வருபவன். ஆனால் இணைய உலகம் எனக்கு இரு ஆண்டுகளுக்கு முன்புதான் அறிமுகமானது. அதுவும் தொடக்க காலத்தில் எனக்கு இருந்த வசதிக்கு என்னால் கைப்பேசி வழியாகத்தான் இணையத்தை அணுக முடிந்தது. அண்மையில்தான் கணிணி வாங்கினேன். ஆனால் என் கெட்ட நேரம், நான் கணிணி வாங்கியதிலிருந்து நீங்கள், அ.கொ.தீ.க, அய்யம்பாளையத்தார் முதலான தீவிரப் பதிவர்கள் யாரும் செயல்படுவதேயில்லை. நானும் அண்மைக்காலமாகக் காமிக்ஸ் பதிவுலகிற்கு வருவதில்லை. இன்றுதான் உங்கள் தளத்தில் ஒரு புதுப் பதிவைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி! உங்களைப் போன்ற சிறுவர் இலக்கிய விரும்பிகள் தொடர்ந்து பதிவுலகில் இயங்க வேண்டுகிறேன்!
சிறுவர் இலக்கிய உலகம் அடைந்துள்ள வீழ்ச்சி கண்டு உள்ளம் நொந்திருப்பவன் எனும் முறையில் 'லயன் காமிக்'சின் இந்த மறுபதிப்புகள் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை அளிக்கின்றன. நானும் எட்டு வயது வரை இத்தகைய சித்திரக்கதைகளைப் பேரார்வத்துடன் படித்து வந்தவன்தான். ஆனால் வாண்டுமாமா கதைகளைப் படிக்கத் தொடங்கிய பிறகு இவை எனக்குச் சுவைக்கவில்லை! ஒன்பது, பத்து வயதுக்கு மேலான எனது இளம் பிராயப் பொழுதுகள் பூந்தளிர், பார்வதி சித்திரக்கதைகள், கோகுலம் ஆகியவற்றாலேயே வண்ணமூட்டப்பட்டு வந்தன. எனவே எனக்கு அத்தகைய சித்திரக்கதைகள்தாம் பிடிக்கும். அவற்றை மறுபதிப்புச் செய்யும் எண்ணம் ஏதும் இல்லையா நண்பரே?!
ஏன் நீங்கள் நினைத்தால், நண்பர் சிவ், நண்பர் அ.கொ.தீ.க, திரு.விஜயன் போன்ற எல்லாரையும் ஒன்றிணைத்து திரு.வாண்டுமாமாவிடமே இசைவு பெற்று அவருடைய சித்திரக்கதைகள் அனைத்தையும் மீண்டும் மறுபதிப்புச் செய்யலாமே? யார் வாங்குவார்கள் என நினைக்கிறீர்களா? கண்டிப்பாக வாங்குவார்கள்! அதற்குத் தேவை நல்ல விளம்பர உத்தி மட்டுமே.
எப்படிச் சொல்கிறேன் என்றால், கடந்த ஆண்டு, வாண்டுமாமா அவர்களின் பல நூல்கள் இன்றும் வானதி பதிப்பகத்தில் இருப்பதாகப் பதிவிட்டீர்கள் இல்லையா? அதைத் தொடர்ந்து நண்பர் அ.கொ.தீ.க வெளியிட்ட பதிவில், உங்கள் பதிவைக் கண்டவுடன் அவற்றில் பல நூல்கள் உடனே விற்றுத் தீர்ந்து விட்டதாகவும் மிச்சம் கொஞ்சம்தான் இருப்பதாகவும், ஆர்வம் உள்ளவர்கள் முந்திக் கொள்ளுமாறும் கூறி மிச்சமிருந்த நூல்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார். அப்படியானால் இன்றும் அத்தகைய நூல்களுக்கு எவ்வளவு வரவேற்பிருக்கிறது என்பதைத் தாங்கள் புரிந்து கொள்ளலாம்.
அது மட்டுமில்லை, உங்களுடைய அந்தப் பதிவையும், அ.கொ.தீ.க அவர்களின் பதிவையும் வெகு தாமதமாகப் பார்த்த நான் உடனே வானதி பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டேன். அ.கொ.தீ.க பட்டியலிட்டிருந்த நூல்கள் இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் என்னால் அவற்றை உடனே வாங்க முடியவில்லை. கடந்த வாரம்தான் தம்பியை அனுப்பினேன். ஆனால் எல்லாப் பொத்தகங்களும் அண்மையில் நடந்த பொத்தகக் கண்காட்சியில் விற்றுத் தீர்ந்து விட்டதாகக் கூறினார்கள். மூன்றுதான் கிடைத்தன! வாண்டுமாமா அவர்களுக்கு இன்றும் விசிறிகள் இருக்கிறார்கள் என்பதற்கு இஃது ஆணித்தரமான சான்று!
இத்தனைக்கும், திரு.வாண்டுமாமா அவர்களின் மிகப் பழைய கதைகள்தாம் இன்று வானதியில் கிடைப்பவை. ஆனால் பார்வதி சித்திரக் கதைகள் மூலமாக அவர் வெளியிட்ட கதைகளும், பூந்தளிரில் எழுதிய தொடர்களும் அங்கு வெளியிடப்படவேயில்லை என நினைக்கிறேன். அவை தொண்ணூறுகளில் எழுதியவை. அவை வெளியிடப் பெற்றால் எப்பேர்ப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என நினைத்துப் பாருங்கள்!
எனவே அன்னாரின் நூல்களையும் மறுபதிப்புக் கொண்டு வர தங்களைப் போன்ற ஆர்வலர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்பது என் பணிவன்பான கோரிக்கை!
நண்பரே,
Deleteநீங்கள் நினைப்பது போல ரீபிரின்ட் செய்வதோ, பதிப்பிப்பதோ அவ்வளவு சுலபம் அல்ல. இதனைப்பற்றி ஒரு முழு நீள பதிவை வெளியிடுகிறேன். அங்கே இதனைப்பற்றி விவாதிப்போம். உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
tex storyiku konjam leave vidungapaaaaaaa
ReplyDeleteமக்கள் ஆதரவு டெக்ஸ் வில்லர் கதைகளுக்கே.
Deleteமந்திர ராணி அட்டை இது அல்லவே?
ReplyDeleteDEY, ADANGUNGADAA.CHUMA TEX VILLAR, TEX VILLARNU AVANUKKE SOMBU THOOKKAADHEENGADA.
ReplyDeletePUDHUSA KADHAIYA PODA UNGALUKKU VAKKU ILLAIYAAA?
'அதிரடி வீரர் ஹெர்குலஸ்'ம் 'கழுகு வேட்டையு'ம் எடிட்டரின் லிஸ்டில் இருக்கும் கதைகள் என்பது என் guess
ReplyDeleteKing Viswa : Offbeat-ஆன தேர்வுகள் என்று தான் சொல்ல வேண்டும்....!
ReplyDeleteஇன்டர்நெட் பரிச்சயம் இல்லாத நண்பர்களின் குரலினையும் கேட்டிட வேண்டியது அவசியமே!So வரவிருக்கும் நமது இதழ்களில் ஒரு மினி லிஸ்ட் கொடுத்து, அதிலிருந்து வாசகர்களைத் தேர்வு செய்திடச் சொல்ல நினைக்கிறன். அதற்காக ஒரு கூப்பனும் அடுத்த இதழ்களில் இருந்திடும்..
உங்கள் பத்தில் - மினி-லிஸ்டில் இடம் பிடிப்பது 2 மட்டுமே .
அன்பு நண்பரே!
Deleteநமது பேரன்பிற்கும், தனிப்பெருமதிப்பிற்கும், ரசனைக்கும் உரிய திரு.வாண்டுமாமா அவர்களுக்கு ஃபேஸ்புக்கில் இதுவரை Fan page இல்லாமல் இருந்தது. எனவே அவருக்காக நான் புதிதாக ஒரு Fan page தொடங்கியுள்ளேன். சித்திரக்கதை பற்றிய பதிவர்கள் அனைவருக்கும் தலையாய பதிவராக இருக்கும் நீங்கள் அங்கு வந்து உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும் (அதாவது அந்த page-க்கு Like கொடுக்க வேண்டும்) எனவும் உங்கள் வலைப்பூ, ஃபேஸ்புக் அக்கௌண்ட் முதலியவற்றின் மூலம் உங்கள் நண்பர்கள் விசிறிகள் என அனைவருக்கும் இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அன்புடன் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி! வணக்கம்!
வாண்டுமாமா பக்கத்துக்கு Like கொடுக்க Vaandumama என ஃபேஸ்புக்கில் தேடுங்கள்! அல்லது சொடுக்குக: http://www.facebook.com/#!/pages/Vaandumama-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/256135227797792
ReplyDeletenalla vishayam gnana prakasare! nanum like-i thattidaren
ReplyDeletethaliavare!
ReplyDeleteMumbai sendralum pathivu idum ungal kadamai unarchi matrum comics mel ulla pasam bramikka vaikirathu.
Vijayan avargalin valai pakkathil ... intha reprint subscribergalukku appadiye anuppa ullathaga therivithirukkirar asathya dhairiyam matrum vasagargal mel ullam nambikkaiyum kandu viyandhu ullen ithu oru parallel series aga veli ittal athurkum subscribe panna nanga ready ! !
by the way how about new stories ?
Facebookla vaandumama nu surch panni parthen ethum varalai
ReplyDeleteNew post pls
ReplyDeleteநண்பரே,
Deleteஇப்போதுதான் சென்னைக்கே வந்து சேர்ந்தேன். கடந்த இரண்டு வாரங்களாக ஒரே பயண மயமாக இருந்ததால் எந்த பதிவையும் இட இயலவில்லை. நாளைக்கு கண்டிப்பாக புதியதொரு பதிவு வலையேற்றப்படும்.
Lion blog la commend serkka mudiyalai!
Delete//Facebookla vaandumama nu search panni parthen ethum varalai//
ReplyDeleteஅப்படியானால் இந்தச் சுட்டியைச் சொடுக்கிப் பாருங்கள் நண்பரே: http://www.facebook.com/#!/pages/Vaandumama-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/256135227797792
நன்றி ஜான் சைமன்!
ReplyDeleteஎனது ஒட்டு சதி வலைக்கே ;-)
ReplyDelete.
விஸ்வாஜி மேலும் ஒரு வேண்டுகோள் ஜான் மாஸ்டரின் கதைகள் மொத்தம் எத்தனை வந்துள்ளன ......
ReplyDeleteமீதம் வெளிவராமல் இருக்கும் அவரது மற்ற கதைகளையும் வெளியிடலாமே :))
.
Msakrates has left a new comment on your post "தமிழ் காமிக்ஸ் உலகம் - ரீபிரின்ட் ரெக்வெஸ்ட்கள் 01...":
ReplyDeleteLion blog la commend serkka mudiyalai! //
Just Now i posted a comment. May be blogger is playing up. try again.
நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
ReplyDeleteநன்றி
யாழ் மஞ்சு
ஈடேது நம் நண்பருக்கு நிகராக!!! மூன்று செலக்ஷன் வந்து விட்டதே?
ReplyDeleteherculus comics english download link iruka
ReplyDelete