Pages

Friday, May 03, 2013

30 சுஜாதாவின் காமிக்ஸ் கதைகள் - சுஜாதா பிறந்த நாள் சிறப்பு பதிவு

டியர் காமிரேட்ஸ்,

இன்று (மே மூன்றாம் தேதி) அமரர் சுஜாதா அவர்களின் பிறந்த நாளாகும். இன்று புதியதாக வந்த லயன் காமிக்ஸ் இதழை பற்றி பதிவிடலாம் என்று இருந்தபோது நண்பர் ஒருவர் காலையிலேயே தொலைபேசியில் அழைத்து சுஜாதாவின் கதைகளைப்பற்றியும் அவரது ஓவிய, காமிக்ஸ் ரசனை குறித்தும் ஒரு பதிவிட முடியுமா? என்று கேட்டார். சுஜாதாவின் தீவிர ரசிகரும், நமது லயன் காமிக்ஸ் ரசிகருமாகிய அவரின் வேண்டுகோளுக்கிணங்கி இந்த சுஜாதா பிறந்த நாள் சிறப்பு பதிவு.

Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition Cover நானறிந்த வரையில் சுஜாதா அவர்களின் கதைகள் இதுவரை மொத்தம் மூன்று காமிக்ஸ் வடிவில் வந்துள்ளன. அவை மூன்றுமே என்னிடம் இருக்கிறது இருந்தது என்பது பெருமை படத்தக்க விஷயமாக கருதுகிறேன். ஆகையால் அவற்றை பற்றி இன்று ஒரு பதிவு இடலாம் என்று சிந்தனை வந்தபோது, கடந்த சென்னை புத்தக திருவிழாவில் விகடன் வெளியிட்ட சுஜாதா சிறப்பு மலரில் வந்த கட்டுரை ஒன்றும் நினைவுக்கு வந்தது. சரி அந்த கட்டுரையையும் இந்த பதிவில் இணைத்து ஒரு முழுமையான பதிவாக்கிவிடுவோம் என்று முடிவெடுத்தேன்.

என் இனிய ஜீனோ: எண்பதுகளின் இறுதியில் தொலைக்கட்சியில் என் இனிய இயந்திரா என்றொரு தொடர் வெளியானது நம்மில் எத்துனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை. பூனைக்கண் நடிகைகளில் முதல்வராகிய சிவரஞ்சனி (தெலுங்கில் இவரது பெயர் ஊஹா) ஹீரோயினாக நடித்த இந்த தொடர் சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஜீனோ என்று கூட அவர் எழுதினர்.

தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் வாசுகி என்று ஒரு மாதமிருமுறை இதழ் வந்துக்கொண்டு இருந்தது. இந்தியா டுடே அளவில் மிகவும் அருமையான பேப்பர் குவாலிட்டியில் அற்புதமான கட்டுரைகளையும், கதைகளையும் தாங்கி வந்துக்கொண்டு இருந்த அந்த இதழின் ஒரு தீபாவளி சிறப்பு மலரில் (1993 Dec) வந்த தொடர் கதை தான் என் இனிய ஜீனோ. சரி, மற்றுமொரு சுஜாதா தொடர் கதைதானே? இதில் என்ன சிறப்பு என்று யோசிக்க வேண்டாம். ஓவியர் ஜெயராஜின் கைவண்ணத்தில் முழு வண்ணத்தில் காமிக்ஸ் வடிவில் வந்ததே இந்த தொடர் கதையின் சிறப்பு அம்சம்.

கடைசியில் ஒரு வாரம் மட்டும் கருப்பு வெள்ளையில் வந்த இந்த தொடர் கதை மொத்தம் பதிமூன்று அத்தியாயங்கள் வந்து பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த தொடர் கதையை இப்போது யாராவது மறுபடியும் ஒரு முழு வெளியீடாக பதிப்பித்தால் அற்புதமாக இருக்கும். கிழக்கு பதிப்பகம் பத்ரி நமது பதிவுகளை படிப்பவர். இதனை கவனிப்பார் என்றே நம்புகிறேன்.

 

Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition En Iniya Jeeno Part 01 Page 01 Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition En Iniya Jeeno Part 01 Page 02
Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition En Iniya Jeeno Part 01 Page 03 Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition En Iniya Jeeno Part 02 Page 01
Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition En Iniya Jeeno Part 02 Page 02 Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition En Iniya Jeeno Part 02 Page 03

ப்ரிய சித்ரா மாத இதழ் - நைலான் கயிறு: நைலான் கயிறு நாவலானது சுஜாதாவின் நாவல்களில் மிகவும் முக்கியமானது ஆகும். சுஜாதாவின் முதல் நாவலான இந்த கதை  1968ல் குமுதம் இதழில் தொடர்கதையாக எழுதப்பட்டு 14 வாரங்கள் வெளிவந்தது.இந்த கதையை பற்றி ஏற்கனவே நமது ஈரோடு ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டு இருக்கிறார். இருப்பினும் அந்த கதையை பற்றிய முழுமையான விவரங்களை அளிப்பது இந்த பதிவின் சிறப்பாகும் என்பதால் இங்கே இடம்பெறுகிறது.

எழுத்தாளர் இந்துமதி அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்துக்கொண்டு இருந்த மாதமிருமுறை இதழ் அஸ்வினி. எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்துக்கொண்டு இருந்த இந்த இதழின் வெளியீட்டாளர் கீதா வெங்கட்ராமன். எண்பதுகளின் ஆரம்பத்தில் தமிழகத்தில் இருந்த காமிக்ஸ் பேரலையில் இவர்களும் கவரப்பட்டு ஒரு சித்திரக்கதை மாத இதழை ஆரம்பித்தனர். அதன் பெயர் ப்ரியசித்ரா என்பதாகும்.

புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நாவல்களை சித்திரக்கதை வடிவில் கொண்டு வருவதே இவர்களின் எண்ணம். ப்ரியசித்ரா வெளியிட்ட  இதழ்கள் பின்வருமாறு:

  • நைலான் கயிறு - சுஜாதா (ஓவியங்கள் ஜெயராஜ் - இருவண்ணத்தில் 64 பக்கங்கள்) November 1983.
  • ஹைவே 117 - புஷ்பா தங்கதுரை (ஓவியங்கள் ஜெயராஜ் - இருவண்ணத்தில் 64 பக்கங்கள்)
  • மறுபடியும் தேவகி ரா.கி ரங்கராஜன் (ஓவியங்கள் ஜெயராஜ் - இருவண்ணத்தில் 64 பக்கங்கள்)

சரியான அளவில் வரவேற்ப்பு இல்லாததாலும் வேறு சில காரணங்களாலும் ப்ரியசித்ரா இதழ் மூன்றாவது இதழுடனே முடிவடைந்தது. இதற்க்கு பிறகு அடுத்த இதழ்கள் வரவில்லை என்பது பதிப்பாளர் அளித்த தகவல்.ஆகவே இந்த இதழின் முதல் பக்கம் உங்களின் பார்வைக்கு (என்னுடைய புத்தகம் நண்பர் ஒருவரால் கபளீகரம் செய்யப்பட்டதால் நண்பர் ஸ்டாலினின் ஸ்கான்கள்-மேம்படுத்தப்பட்டு-இங்கே அளிக்கப்படுகிறது. வெகு விரைவில் அந்த -முன்னாள்-நண்பரிடமிருந்து என்னுடைய புத்தகங்கள் திரும்ப பெறப்பட்டவுடன் புதியதொரு பதிவில் அட்டைப்படங்கள் மற்றும் பல சுவையான தகவல்களுடன் வெளியாகும்).

 

Priya Chithra Monthly Nov 1983 Issue No 1 Nylon Kyiru 1st Page Priya Chithra Monthly Nov 1983 Issue No 1 Nylon Kyiru Last Page
Priya Chithra Monthly Nov 1983 Issue No 1 Nylon Kyiru 1st Page copy Priya Chithra Monthly Nov 1983 Issue No 1 Nylon Kyiru Last Page

இந்த ப்ரிய சித்ரா வெளியான அதே சமயத்தில் இதே ஐடியாவில் வேறொரு பதிப்பகமும் புத்தகங்களை வெளியிட்டது. அவற்றில் பெரும்பாலும் நமது ஆஸ்தான ஓவியர் செல்லம் வரைந்தார் என்பது சிறப்பு தகவல் அந்த பதிப்பகத்தின் முதல் சித்திரக்கதை எழுத்தாளர் ராஜேந்திர குமாரின் மூடுபனி. அந்த காமிக்ஸ் இதழ் என்ன என்பதை கமென்ட்டுகளின் மூலம் தெரிவிப்பவர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு காத்திருக்கிறது .

சுஜாதா அவர்களை பற்றி ஓவியர் ஜெயராஜ் - விகடன் சுஜாதா மலர்: சென்ற சென்னை புத்தக திருவிழாவில் ஆனந்தவிகடன் வெளியீடான சுஜாதா மலரில் இரண்டே இரண்டு கட்டுரைகள் மட்டுமே ஒரளவுக்கு என்னுடைய கவனத்தை ஈர்த்தது. அதில் முதலாவது சுஜாதாவின் நாவல்களை காமிக்ஸ் வடிவில் கொண்டு வந்த ஓவியர் ஜெயராஜின் நினைவு பின்னல்களை கொண்ட இந்த கட்டுரை.

திடீரென்று இந்த பதிவு இடப்படுவதால் வேறு சில விஷயங்களை இங்கே அரங்கேற்ற முடியவில்லை. விரைவில் நானும் சுஜாதா அவர்களை பற்றிய ஒரு முழுநீள பதிவினை இடுகிறேன். அதில் அவர் கைப்பட எழுதி எனக்கு அளித்த புத்தகம் மற்றும் அவரை நான் சந்தித்த சுவையான சம்பவம் பற்றியும் எழுதுகிறேன். அதுவரையில் இந்த பதிவில் ஜெயராஜ் அவர்களின் நினைவு நாடாக்களை சுழலவிட்டு அவற்றை ரசிப்போம்.

Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 01 Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 02
Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 01 Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 02
Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 03 Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 04
Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 05 Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 06

சுஜாதாவுக்கு பிடித்த கார்ட்டூன்: சுஜாதா ஒரு மாஸ்டர் என்பது அவரை படித்த அனைவருக்கும் தெரியும் அவர் காமிக்ஸ் பற்றிய ஒரு ஆழ்ந்த ஞானம் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாது. ஓவியங்களையும், கார்ட்டூன்களையும் அவர் ரசித்தவர். அவருடைய விருப்பமான கார்டூன் பற்றி இந்த கட்டுரையில் அவர் குறிப்பிடுவதால் இந்த கட்டுரையும் இங்கே இடம் பிடிக்கிறது.

Vikatan Sujatha Malar Dec 2012 Sujatha on Cartoon Art Page 01 Vikatan Sujatha Malar Dec 2012 Sujatha on Cartoon Art Page 02
Vikatan Sujatha Malar Dec 2012 Sujatha on Cartoon Art Page 01 Vikatan Sujatha Malar Dec 2012 Sujatha on Cartoon Art Page 02

சென்ற இதழில் பதிவில் கேட்ட கேள்விக்கு இன்னமும் சரியான பதில் வராததால் ஒரு மறு ஒளிபரப்பு:

உங்கள் அனைவருக்கும் ஒரு சிறிய போட்டி: செக்ஸ்டன் ப்ளேக் கதைகள் (அதாவது வாலியண்ட் இதழில் வந்த கதைகள்) ஒரு குறிப்பிட்ட காமிக்ஸ் ஹீரோவின் கதைகளுடன் "எதேச்சையாக" பொருந்தி இருக்கும். அந்த மற்ற ஹீரோவின் கதையும் தமிழில் வந்துள்ளது. அதனைப்பற்றி நமது முத்து விசிறி அவர்களும் பதிவிட்டுள்ளார்.

  • அந்த மற்றொரு ஹீரோ யார்?

  • அவரது கதைகளுக்கும் செக்ஸ்டன் ப்ளேக் கதைகளுக்கும் என்ன ஒற்றுமை?

  • அந்த மற்றொரு ஹீரோவின் கதை எந்த காமிக்ஸில் வந்தது?

இந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் நபர்களுக்கு நமது பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தில் இருந்து A4 சைசில் வெளிவந்த ஆங்கில காமிக்ஸ் இதழ் ஒன்று இலவசமாக அளிக்கப்படும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Related Posts with Thumbnails