Pages

Friday, August 31, 2012

40 சந்திரனே சாட்சி: காமிக்ஸ்–>தொடர்கதை->நாவல்:தமிழில் வாண்டுமாமாவின் புது முயற்சி

காமிரேட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம். முதலில் என்னுடைய உடல் நலம் குறித்தான அனைத்து விசாரிப்புகளுக்கும் நன்றி. இப்போதுதான் நாளொன்றுக்கு ஒரு பதிவு இடம் அளவிற்கு தேறி விட்டேனே? அனைவரின் அன்பிற்கும் நன்றி. இதற்காக நான் என்ன செய்து விடப்போகிறேன், வேறு சில (மொக்கையான) பதிவுகளை இடுவதைத் தவிர?

பதிவிற்கு செல்லும்முன் தமிழ் காமிக்ஸ் உலகின் முன்னோடியும், சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பியுமான திரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு பிடித்த எழுத்தாளர் வாண்டுமாமாவின் இந்த பதிவினை பிறந்த நாள் பரிசாக சமர்பிக்கிறேன். தன்னுடைய பதின்ம வயதினை முடித்துக்கொண்டு இருபதுகளில் காலடி வைக்கும் அன்னாரை வாழ்த்த (எனக்கு) வயதில்லை என்பதால் வணங்குகிறேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழின் மிகச்சிறந்த கதை சொல்லியாகிய வாண்டுமாமா அவர்களைப்பற்றி ஒரு முழுநீள வாழ்க்கை குறிப்பு அடங்கிய பதிவு இடும்வரை அவரைப்பற்றி இணையத்தில் தேடினால் கிடைத்தது நம்ம சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி அய்யம்பாளையம் சாரின் இந்த பதிவு மட்டுமே. இந்த பதிவுமேக்கூட நண்பரை தொடர்ந்து இம்சை செய்து இடப்பட்ட ஒன்று என்பது உள்நாட்டு தகவல்.

சென்ற தலைமுறையின் தலை சிறந்த கதை சொல்லியைப் பற்றி இந்த தலைமுறையினருக்கு தெரிந்து கொள்ளும் பக்குவம் இல்லையென்றாலும், வரலாற்றின் பக்கங்களில் இவரது பங்கீடு குறித்து தெரிவிக்கப்படவில்லை எனில் அவமானம் தமிழின் தலை சிறந்த கதை சொல்லிக்கு அல்ல,  தமிழுக்கும், வரலாற்றிக்கும் தான்

கல்கி வார இதழில் வந்த சந்திரனே சாட்சி கதைக்கான விளம்பரம்

Ad for Chandirane Satchi

அதனால்தான் அப்போது முதல் இன்று வரை முடிந்தவரை வாண்டுமாமா அவர்களின் புத்தகங்களைப்பற்றியும், தகவல்களையும் இந்த தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறோம். நம்மைப்போலவே பல நண்பர்களும் அவரைப்பற்றி எழுதி வருகிறார்கள். Children of all ages என்று அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு எழுத்தாளர் வாண்டுமாமா. அவரை சிறுவர் இலக்கியத்தின் சுஜாதா என்று நான் அடிக்கடி சொல்வேன். இப்படி சொல்வதால் சுஜாதா அவர்களுக்குத்தான் பெருமை என்பது உண்மையும் கூட.

ரீ பூட்டிங்: சமீபத்தில் உலக அளவில் இந்த ரீ பூட்டிங் என்கிற விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. தி அமேசிங் ஸ்பைடர்மேன், வரப்போகும் சூப்பர்மேன் போன்றவை அனைத்துமே ரீபூட்டப்பட்ட / படப்போகிற படங்களே. இந்த ரீபூட் பற்றி காமிரேட் லக்கிலூக் என்கிற யுவகிருஷ்ணா என்ன சொல்கிறார் என்பதை தெரிந்துகொண்டு தொடர்ந்து படியுங்கள்:

‘ரீபூட்’ என்றால் ’ரீபோக்’ மாதிரி ஏதோ பிராண்ட் என்கிற அளவுக்கு குழம்பிப் போயிருந்தேன். ஏனெனில் இச்சொல்லுக்கு நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு அர்த்தத்தையும், வெவ்வேறு விளக்கத்தையும் தந்து குழப்பித் தள்ளினார்கள். அண்ணன் பைத்தியக்காரன் தந்த விளக்கம்தான் துல்லியமான ஒரு தெளிவினை தந்தது. அதாவது வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா காமெடிதான் ரீபூட். “அதெல்லாம் ஒத்துக்க முடியாது. மறுபடியும் மொதல்லேருந்து ஸ்டார்ட் பண்ணுவோம்”. இவ்வளவு ஈஸியான விஷயத்தை ஏன் அப்படி இப்படியாக இடியாப்பச் சிக்கலாக நம் மக்கள் புரிந்துகொள்கிறார்களோ தெரியவில்லை.

தமிழில், காமிக்ஸ் வடிவத்தில் அப்படி ஒரு ரீ பூட் நடந்துள்ளது. அதுவும் முற்றிலும் மாறுபட்ட வடிவில்.அதனைப்பற்றியதே இந்த பதிவு. தமிழில் சிறுவர் இலக்கியம் சம்பந்தப்பட்ட எழுவாகினும் தன்னுடைய முத்திரையை பதித்துள்ள Trail-Blazer வாண்டுமாமா அவர்களே இந்த ரீ பூட் விஷயத்திலும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதோடில்லாமல் வித்தியாசமான ஒரு விஷயமாக பட்டதால் இந்த பதிவில் பின்னணி விவரங்களுடன் அரங்கேறுகிறது. இந்த ரீ பூட் நடந்ததால் திரு வாண்டுமாமா அவர்களின் பத்திரிக்கை வேலைக்கே ஆபத்து வந்ததும், பின்னர் அது பூமாரங் ஆக மாறி அவர் பணிபுரிந்த இதழின் எடிட்டரின் வேலைக்கு வெட்டு வைத்ததும் கிளைக்கதைகள்.

Circa 1962. கல்கி வார இதழில் தொடர்ந்து Sword & Sorcery என்கிற வகையில் வரும் மந்திரஜால,சரித்திரக் கால கதைகளையே சித்திரக்கதை வடிவில் வழங்கி வந்த திரு வாண்டுமாமா அவர்கள் ஒரு சமூக நாவலை சித்திரக்கதை வடிவில் வழங்க எண்ணினார். அவரது பல முயற்சிகளுக்கு பச்சைக்கொடி காட்டிய கல்கி நிர்வாகமும் இசைந்திட, ஓவியர் வினுவின் கூட்டணியுடன் ஒரு ஃக்ரிஸ்ட்மஸ் ஸ்பெஷல் கல்கி இதழில் ஆரம்பித்ததுதான் இந்த சந்திரனே சாட்சி சித்திரக்கதைத்தொடர்.

 

Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Kalki Serial Intro Page (ஸ்கான் உபயம் - காமிரேட் ஷிவ் அவர்கள்)
Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Kalki Serial Intro Page
Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Page 01 Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Page 02
Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Page 01 Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Page 02

சித்திரக் கதை வடிவில் வெளிவந்த இந்த கதையானது வாசகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றது என்பதை சொல்லவும் வேண்டுமோ? அப்படி வரவேற்ப்பை பெற்ற இந்த கதை சுமார் இருவது வருடங்கள் கழித்து வாண்டுமாமா அவர்களின் வாழ்வில் புயல் வீச காரணமாகவும் இருந்தது. கல்கி இதழில் தனது திறமையால் பிரகாசித்த வாண்டுமாமா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோகுலம் என்கிற சிறுவர் பத்திரிக்கையும் ஆரம்பித்தனர். அது ஆறு ஆண்டுகள் சிறப்பாக வெளிவந்துக்கொண்டிருக்கும் வேளையில், 1977ம் ஆண்டு ஜூன் மாதம் பல பிரச்சினைகளால் கல்கி நிறுவனமே பத்திரிக்கைத் தொழிலை நிறுத்தினர். அப்போது அங்கிருந்து வெளியேறிய வாண்டுமாமா பின்னர் குங்குமம் இதழில் பணியாற்றிவிட்டு மறுபடியும் கல்கி துவங்கியதும் கோகுலத்தின் ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் 1978ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதியிட்ட இதழுடன் கோகுலம் இதழில் இருந்து நிரந்தரமாக வெளியேறினார்.

பிரபலமான எழுத்தாளர் ஒருவரை ஆசிரியராகக் கொண்டு அப்போதுதான் தினமணிக் கதிர் என்கிற  அற்புதமான பத்திரிக்கை வந்துக்கொண்டு இருந்தது. அதில் வாண்டுமாமா அவர்கள் துணை ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். ஏற்கனவே அந்த எழுத்தாளருக்கும் இவருக்கும் ஒரு சிறிய வரலாறு உண்டு. இருந்தாலும் சகஜமாக பணிபுரிந்துக்கொண்டு இருந்தார் வாண்டுமாமா. அப்போது மலேசியாவில் வெளிவந்துக்கொண்டு இருந்த தமிழ் நேசன் என்கிற பத்திரிக்கையில் இருந்து வாண்டுமாமா அவர்களிடம் ஒரு தொடர்கதையை கேட்க, அவர் மறுத்து விட்டார். ஏனென்றால் அப்போது அவர் பணிபுரிந்து கொண்டிருந்த (எக்ஸ்ப்ரெஸ் க்ரூப்) நிறுவனத்தில் ஊழியர்கள் மற்ற பத்திரிக்கைகளில் எழுதக்கூடாது என்பது ஒரு விதியாக இருந்தது.

ஆனாலும் தமிழ் நேசன் நிர்வாகம் தொடர்ந்து வற்புறுத்த, தன்னுடைய சித்திரத் தொடர்கதையாகிய சந்திரனே சாட்சியை எழுத்துக் கதை வடிவில் தொடர்கதையாக வெளியிட ஒப்புக் கொண்டார் வாண்டுமாமா. டெக்னிகலாக பார்த்தால் இரண்டு விஷயங்களில் வாண்டுமாமா விதிகளை மீறாமல் நடந்துக்கொண்டு இருக்கிறார். ஒன்று:இந்தியாவில் வந்துக்கொண்டிருந்த எந்த பத்திரிக்கையிலும் அவர் எழுதவில்லை இரண்டு: இது அவர் ஏற்கனவே இருவது வருடங்களுக்கு முன்பாக எழுதியது. அதை ரீ பூட் செய்து வெளியிட்டு இருக்கிறார், அவ்வளவுதான்.

Vandumama Chandirane Saatchi July 1988 Cover Vandumama Chandirane Saatchi July 1988 Credits Vandumama Chandirane Saatchi July 1988 Title Page
Vandumama Chandirane Saatchi July 1988 Cover Vandumama Chandirane Saatchi Credits Vandumama Chandirane Saatchi 1st Page

ஆனால் அவர் மீது மிகுந்த கடுப்பில் இருந்த அந்த பத்திரிக்கை ஆசிரியர் தொடர்ந்து இதுபோல பல பிரச்சினைகளை கிளப்பினார். அந்த பத்திரிக்கை ஆசிரியரின் நலம் விரும்பியான ஒருவருக்கு வாண்டுமாமா வகித்த துணை ஆசிரியர் பதவியை கைமாற்றவே இத்துனையும். ஆனால் முற்பகல் செய்யின் குறளுக்கேற்ப அந்த பத்திரிக்கை ஆசிரியரையே வேளையில் இருந்து நீக்கியது நிர்வாகம். இப்படியாக வாண்டுமாமா அவர்களின் வாழ்வில் ஒரு புயலை வீசிவிட்டே இந்த சாட்சி சென்றது என்றால் அது மிகையல்ல.

இந்த தொடர்கதை தொகுக்கப்பட்டு முழுநீள நாவலாக வானதி பதிப்பக வெளியீட்டில் வந்தபோது (இத்துனை விஷயங்கள் நடந்து இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல்) மிகுந்த சிரத்தையுடன் அழகாக வாண்டுமாமா எழுதியுள்ள இந்த முன்னுரையை படியுங்கள்.

 

Vandumama Chandirane Saatchi July 1988 வாண்டுமாமா முன்னுரை Vandumama Chandirane Saatchi Story 1st Page
Vandumama Chandirane Saatchi Foreword Vandumama Chandirane Saatchi Story 1st Page

கதை சுருக்கம்: பிரபல வக்கீல் சேகரை தேடிக்கொண்டு ஒரு முதியவர் வருகிறார். ஒரு வேலையை அவரிடம் கொடுக்க முன்வரும் அவர் மயங்கி விழுந்து கோமாவிற்கு சென்றுவிடுகிறார். சிறு சிறு கட்டங்களாக, ஒன்றுமே தெளிவில்லாமல், சம்பந்தமில்லாமல் சில குறிப்புகள் மட்டுமே இருக்க, அவற்றை ஒன்று சேர்த்து ஒரு Zig-Zag புதிரை அமைதியாக,அலட்டல் இல்லாமல் ஷெர்லக் ஹோல்ம்ஸ்,சங்கர்லால் பாணியில் துப்பறிந்து இடியப்ப சிக்கல்களை தீர்ப்பதே இந்த கதை.

இந்த புத்தகமானது இன்றும் வானதி பதிப்பகத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

வானதி பதிப்பகம்/திருவரசு பதிப்பகம்
13, தீனதயாளு தெரு
தியாகராய நகர்
சென்னை - 600017
Ph: +9144-24342810

தியாகராய நகரில் பாண்டி பஜாரில் உள்ள பேருந்து நிலையத்தில் இறங்கி (ICICI வங்கி ATM எதிரில்) உள்ள பூக்கடை சந்தில் சென்றால் (Left) அங்கு தியாகராயர் நகரின் தபால் ஆபிஸ் இருக்கும். அதன் எதிரில் இருக்கும் தெருதான் தீனதயாளு தெரு. இரண்டாவது மாளிகை நம்ம வானதி பதிப்பகம்.

நாளைக்கும், அதன் பிறகும் தொடர்ச்சியாக பதிவிட ஆசை. முயற்சிக்கிறேன்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

பின் குறிப்பு - வாண்டுமாமா அவர்களைப்பற்றிய ஏனைய பதிவுகளுக்கான லிங்குகள்:

 

  • வாண்டுமாமா அவர்களின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை -ஒரு சிறப்பு பார்வை-கிங் விஸ்வா-தமிழ் காமிக்ஸ் உலகம்

  • வாண்டுமாமாவின் கனவா? நிஜமா? தமிழின் முதன்மையான சித்திரக்கதை-தமிழ் காமிக்ஸ் உலகம் சிறப்பு பதிவு

  • வாண்டுமாமாவின் தேச தேசக் கதைகள் - உலக நாடுகளின் சிறந்த கதை தொகுப்பு

  • ஒற்று உளவு சதி வாண்டுமாமா 190* Not அவுட் வாண்டுமாமாவின் அற்புதமான உளவாளிகளின் குறிப்பேடு

  • வாண்டுமாமா அவர்கள் எழுதிய துப்பறியும் கதைகள் - பூந்தளிரில் வந்தவை - தமிழ் காமிக்ஸ் உலகம் சிறப்பு பதிவு

  • எதிர்நீச்சல்-வாண்டுமாமாவின் வாழ்க்கை வரலாறு-கங்கை புத்தக நிலைய வெளியீடு-தமிழ் காமிக்ஸ் உலகின் சிறப்பு பதிவு

  • சென்னை புத்தக கண்காட்சியில் வாண்டுமாமா அவர்களின் புத்தகங்கள் பற்றிய கிங் விஸ்வாவின் பதிவு 2

  • சென்னை புத்தக கண்காட்சியில் வாண்டுமாமா அவர்களின் புத்தகங்கள் பற்றிய கிங் விஸ்வாவின் பதிவு 1

  • வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு + அவர்களின் லேட்டஸ்ட் படம் கொண்ட கிங் விஸ்வாவின் பதிவு

  • வாண்டுமாமா குறித்த விக்கிபீடியா இடுகை

  • வாண்டுமாமா சித்திரக்கதைகள் 1 -  ரத்தினபுரி ரகசியம் - காமிக்ஸ் பூக்கள் சிறப்பு விமர்சனம்

  • பூந்தளிரின் முதல் இதழ் பற்றிய அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் அற்புதமான பதிவு: காமிக்ஸ் பூக்கள்

  • பூந்தளிரின் முதல் வருட இதழ்களையும், கதைகளை பற்றிய அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் அற்புதமான பதிவு

  • வாண்டுமாமா அவர்களை பற்றிய அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் அற்புதமான ஒரு அறிமுகம்

  • வாண்டுமாமா அவர்களின் சித்திரக்கதைகளை பற்றிய சிறந்த பதிவு

  • வாண்டுமாமா எழுதிய திரைவிமர்சனம் பற்றிய பதிவு

  • கனவா நிஜமா குறித்த நண்பர் சிவ்வின் பதிவு

  • சி.ஐ.டி.சிங்காரம் குறித்த நண்பர் சிவ்வின் பதிவு

  • வாண்டுமாமா அவர்கள் எழுதிய சினிமா விமர்சனம்

  • Wednesday, August 29, 2012

    20 Comic Cuts 47-News 47: இரத்தப் படலம், பெருங்களத்தூர் புத்தகக்கடை, ரஸ்கின் பான்ட்டின் ஃகிராபிக் நாவல் மற்றும் பல செய்திகள்

    காமிரேட்ஸ்,

    இந்த காமிக் கட்ஸ் - செய்திகள் பதிவானது பல நாட்களாக என்னுடைய கணினியில் தூங்கிக் கொண்டு இருந்தது. இந்த பதிவில் சொல்லப்பட்ட காரணங்களால் இவ்வளவு தாமதமாக வலையேறுகிறது. வழக்காமான தாமதத்திற்கு நான் காரணம் என்றாலும், இம்முறை அந்தப் பழி என்மீதில்லை என்ற வரைக்கும் சந்தோஷமே.

    இரத்தப் படலம் - லயன் காமிக்ஸ் ஜம்போ ஸ்பெஷல் - தினகரன் வெள்ளி மலர் சிறப்பு கட்டுரை:  சுமார் நான்கு வாரங்களுக்கு முன்பு ஒரு சனிக்கிழமை மதியம் நம்முடைய லயன், முத்து காமிக்ஸ் சந்தாதாரர் தோழர் சிவராமன் அவர்கள் எனக்கு கைபேசியில் அழைப்பு விடுத்திருந்தார். வழமை போல அப்போதும் ஒரு மீட்டிங்கில் இருந்து தொலைத்த நான், சிறிது நேரம் கழித்து அவரிடம் பேசினேன். இரத்தின சுருக்கமாக பேசும் அவர், இரத்தப்படலம் பற்றிய சில விவரங்களையும், லயன் காமிக்ஸ் அலுவலக தொலைபேசி எண்ணையும் கேட்டு வாங்கிக்கொண்டு, பிறகு பேசுகிறேன் என்று சொல்லி விட்டார். அதன் பிறகு நானும் அந்த சம்பவத்தை மறந்து விட்டேன்.

    இது நடந்து இரண்டு வாரம் கழித்து ஒரு புனித வெள்ளிகிழமை அன்று தினகரன் வெள்ளிமலரை படித்தால், பின்னட்டையில் இந்த அற்புதமான கட்டுரை (காமிக்ஸ் பற்றிய நியூஸ் வந்ததால் அந்த வெள்ளி, புனித வெள்ளியாக மாறியது என்பதை சொல்லவும் வேண்டுமோ?). அடுத்து நான் சொல்லப்போகும் வசனத்தை பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தின் தம்பியாக வரும் இன்ஸ்பெக்டர் சஷிகுமார் போல படிக்கவும். சாதாரண ஒரு எடிட்டர் எழுதிய கட்டுரை அல்ல இது. நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாவற்றிலும் காமிக்ஸ் வெறி ஊறிப்போன ஒருவராலேயே இப்படிப்பட்ட கட்டுரையை எழுத முடியும்.

    இந்த கட்டுரை வெளியான அன்று அடியேன் இந்தியத் தலைநகரில் இருந்ததாலும், அங்கு ஸ்கான் வசதிகள் சரிப்படாததாலும் உடனடியாக பதிவிட முடியவில்லை. ஈரோட்டின் காமிக்ஸ் குபேரர் ஸ்டாலின் அவர்கள் இந்த பதிவில் இதைப்பற்றி இட்ட பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்.

     

    Dinakaran Tamil Daily Friday Supplement Velli Malar Book Dated 10082012 Page No 24 Bourne Legacy Article by ComiRade K.N.Siva Raman
    Dinakaran Tamil Daily Friday Supplement VelliMalar Book Dated 10082012 Page No 24 Bloune Legacy Article

    ஒரு சோகமான பின்குறிப்பு: இந்த நியூஸ் வெளியான சிறிது நேரத்திலேயே (மதியம் பனிரெண்டு மணிக்குள்ளாக) சுமார் நாற்பது தொலைபேசி அழைப்புகள் லயன் ஜம்போ ஸ்பெஷல் இரத்தப்படலம் பற்றி விசாரித்து விற்பனைக்காக வர ஆரம்பித்து விட்டது. இது ஆரம்ப நிலை. ஆனால் சோகமான தகவல் என்னவெனில் ஏற்கனவே இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் இதழ்கள் முற்றிலும் விற்று தீர்ந்துவிட்டன என்பதே. ஒரு தர்ம சங்கடமான நிலையை ஆசிரியருக்கும், லயன் காமிக்ஸ் அலுவலக ஊழியர்களுக்கும் ஏற்படுத்தியமைக்கு இங்கே மன்னிப்பு கோருகிறேன். இருந்தாலும் தோழர் அவர்கள் என்ன விஷயத்திற்காக தகவல் சேகரித்தார் என்பது தெரியாத சூழலிலேயே நான் தகவல் தெரிவித்தேன். ஆகையால் .....

    பெருங்களத்தூர் புத்தகக் கடை மீரா முருகன்: ஏற்கனவே திரு நூல் பாண்டியன் அவர்களின் புத்தகக் கடை பற்றிய செய்திகளை வெளியிட்டு இருந்தோம். இப்போது அடுத்த புத்தகக் கடைக்காரர். ஆனாலும் மிகவும் இனிய, பழகுவதற்கு எளிய, கூச்ச சுபாவம் கொண்ட மருகன் அவர்களிடம் காமிக்ஸ் எதுவும் இல்லையாம். பின்னே, தகவல் வந்து ஒரு மாதம் கழித்து போன் செய்தால் எப்படி இருக்கும்? என்று சொல்கிறார் நண்பர் இரவுக் கழுகு. ஆனால் அவரது Behind the screen story படிப்பதற்கு அருமையாக இருக்கிறது.

     

    Anandha Vikatan Tamil Weekly Supplement En Vikatan Dated 15082012 Page No 112 113 Meera Old Book Shop Article by S.Kiruba Karan
    Anandha Vikatan Tamil Weekly Supplement En Vikatan Dated 15082012 Page No 112 113 Meera Old Book Shop Article

    குங்குமம் வரவேற்பறை:  விகடனை தொடர்ந்து குங்குமம் வார இதழிலும் இப்போது ஒவ்வொரு வாரமும், ஒரு புத்தகம், ஒரு இணையதளம் என்று சிறப்பாக அறிமுகம் செய்கிறார்கள். சிறுவர்களுக்கான இரண்டு தகவல்கள் இருந்ததால் அந்த ஸ்கான்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.

     

    Kungumam Tamil Weekly Dated 13082012 Page No 106 107 Pavalakkodi Magazine Intro
    Kungumam Tamil Weekly Dated 13082012 Page No 106 107 Pavalakkodi Magazine Intro
    Kungumam Tamil Weekly Dated 06082012 Page No 085 Tamil Tutor Site F0r Children
    Kungumam Tamil Weekly Dated 06082012 Page No 085 Tamil Tutor Site Fir Childrens

    பழைய வின்டேஜ் காமிக்ஸ் விற்பனை: படிக்க ஆரம்பிக்கும் முன் ஒரு தகவல். சத்தியமாக நம்மூரில் இல்லை. இனி தொடர்ந்து படிக்கவும். அட, எங்க சார் போறீங்க? ஓ, இதுக்கு மேல படிக்க என்ன இருக்கு என்று தானே? அதுவும் ஒரு வகையில் சரிதான். தகவலுக்காக இந்த ஸ்கான்.

     

    Deccan Chronicle Chennai Edition Supplement Chennai Chronicle Page No 27 Comics Sales Article
    Deccan Chronicle Chennai Edition Supplement Chennai Chronicle Page No 27 Comics Sales Article

    ராப்பிட் ராப் - ஆங்கில ஃகிராபிக் நாவல்: ஃபாரூக்கி தம்பதியினரின் இந்த சித்திரக்கதை வடிவ நாவலை மிகவும் விரும்பி படித்தேன். பள்ளி / கல்லூரி நாட்களில் அனிமல் ஃபார்ம் என்கிற அட்டகாசமான கதையை நினைவூட்டினாலும், ஒரு சதாவீதம் கூட சார்ந்திராமல் ஒரு தனிப்பட்ட கதையாகவே இந்த நாவல் இருக்கிறது. சாவகாசமான ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியநேரத்து வாசிப்புக்கு உகந்தது.

     

    The Hindu Daily Sunday Magazine Page No 08 Rabbit Rap Graphic Novel Review by Swati
    The Hindu Daily Sunday Magazine Page No 08 Rabbit Rap Graphic Novel Review

    ரஸ்கின் பான்ட் - ஒரு ரசிக்கும்படியான பேட்டி: சிறுவயதில் வாண்டுமாமா அவர்களுடனே பயணம் செய்ததால் ரஸ்கின் பான்ட் அவர்களின் கதை சொல்லும் திறனை ரசிக்க முடியவில்லை (அவர் ஆங்கிலத்தில் தான் எழுதுகிறார் என்பது வேறொரு கிளைக்கதை). பின்னர் பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் சுபா இனைந்து நடத்திய உங்கள் ஜூனியர் மாத நாவலில் வந்த உலக புத்தக அலமாரி என்கிற கதை தொடரில் ரஸ்கின் பான்டின் ஒரு சிறுகதையின் தமிழாக்கத்தை படித்து வியந்தேன். அதனைவிட அந்த கட்டுரையாசிரியர் அந்த சிறுகதையை நாம் ஏன் காதலிக்கவேண்டும் என்று விவரித்தவிதம் என்னை கவர்ந்தது. இதில் கொடுமை என்னவெனில் அந்த சிறுகதையை ஏற்கனவே நான்-டீடெயில் ஆக பள்ளியில் ஏற்கனவே படிதிருந்ததுதான். அதன் பின்னர் அவரது அனைத்து சிறுகதைகளையும் தேடிப்பிடித்து படித்து விட்டேன். வாசகர்களுக்கும் பரிந்துரைக்கிறேன். இந்தமாத (ஆங்கில) கோகுலம் இதழில் இவரைப்பற்றிய ஒரு கவர் ஸ்டோரியும் வந்துள்ளது. இனி இவரது பேட்டி:

     

    Times Of India English Daily Chennai Edition Supplement Chennai Times Page No 01 Ruskin Bond Interview
    Times Of India English Daily Chennai Edition Supplement Chennai Times Page No 01 Ruskin Bond Interview
    Times Of India English Daily Chennai Edition Supplement Chennai Times Page No 07 Ruskin Bond Interview Part 02

    நாளைக்கும், அதன் பிறகும் தொடர்ச்சியாக பதிவிட ஆசை. முயற்சிக்கிறேன்.

    இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

    Thanks & Regards,

    King Viswa.

    Tuesday, August 28, 2012

    15 #RIP நீய்ல் ஆர்ம்ஸ்ட்ராங் - ஒரு காமிரேட்டின் இறுதி அஞ்சலி

    காமிரேட்ஸ்,

    வணக்கம். கடந்த மூன்று வாரங்களாக உடல் நிலை சரியில்லாத காரணங்களால், மருத்துவரின் ஆலோசனைப்படி முழுக்க முழுக்க பெட் ரெஸ்ட் எடுக்கும்படி ஆகி விட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் இப்படி ஒரேடியாக ஓய்வு எடுத்தது கிடையாது என்பதால் ஆரம்ப நாட்களில் நன்றாக இருந்தாலும், மூன்றாவது நாளில் இருந்து போரடிக்க ஆரம்பித்து விட்டது. அதற்கடுத்த இரண்டு வாரங்கள் கழிவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. இதில் ஒரே பொசிஷனில் சாய்ந்து படுத்து இருந்ததால் கழுத்து வலி வேறு.

    கடந்த ஓரிரு நாட்களாக பரவாயில்லை என்பதாலும், இப்போது உடலில் ஓரளவு சக்தி கூடியிருப்பது போல தெரிவதாலும் இந்த பதிவு. இடைப்பட்ட காலத்தில் ஏராளமான பதிவுகள் மிஸ் ஆகி விட்டன. புதிய லயன் காமிக்ஸ் வெளியீடு, காமிக் கட்ஸ் செய்திகள், ஒரு முழு நீளக்காமிக்ஸ் கதை, காமிக்ஸ் சந்திப்பு, என்று பல. இன்று முதல் பதிவிட்டு அவற்றை சரிகட்ட முயலுமா என்று பார்ப்போம்.

    சரி, இந்த மாதம் முழுக்க இப்படியே ஓடி விட்டது, முழுவதுமாக ரெஸ்ட் எடுத்துவிட்டு அடுத்த மாதம் முதல் பதிவிட ஆரம்பிக்கலாம் என்றால், ஞாயிறு இரவு மாலையில் நண்பர் "ஒலக காமிக்ஸ் ரசிகர்" போன் செய்து நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்த நீய்ல் ஆர்ம்ஸ்ட்ராங் இறந்து விட்டார். அவர் சம்பந்தப்பட்ட பதிவு ஏதாவது இடுகிறீர்களா? என்று விசாரித்தார்.

    நான் மனித எரிமலை நார்மன் போல பெருங்கோபம் கொண்டு அவரை திட்ட, அவர் உடனே "என்னிடம் மனிதன் நிலவுக்கு சென்றதைப்பற்றிய ஒரு அம்புலிமாமா கட்டுரை இருக்கிறது" என்று சொன்னார். சொன்னதோடில்லாமல் அதனை ஸ்கான் செய்து எனக்கு நேற்றிரவே அனுப்பியும் வைத்து விட்டார். கட்டுரையும் நன்றாகவே இருந்ததால் இந்த நேரத்தில் இந்த பதிவை வெளியிட்டு விடுவது என்று முடிவெடுத்து ஒரு மூன்று மணி நேரம் கஷ்டப்பட்டு டைப் அடித்து இந்த பதிவை வலையேற்றுகிறேன். நீய்ல் ஆர்ம்ஸ்ட்ராங் பற்றி நாம் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவரது விக்கிபீடியா லிங்கை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

     

    அம்புலிமாமா - ஆகஸ்ட் 1969: மனிதன் நிலவில் காலடிஎடுத்து வைத்த பிறகு கண்டிப்பாக தமிழர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை உருவாகி இருக்கும். சிறு வயதில் பாட்டி நிலவில் வடை சுட்ட கதையை சொல்லியே வளர்த்தார்கள். இப்போதுதான் நிலவும் பூமி போல ஒரு இடம்தான் என்றாகி விட்டதே, அதன் பிறகாவது கதையின் அமைப்பை மாற்றினார்களா? அல்லது சிறு குழந்தைகள் நாட்டு நடப்பை தெரிந்து கொண்டு கதையை மாற்ற சொல்லி போராடினார்களா? நம்ம சிபி அண்ணன் போன்ற புத்திசாலி குழந்தைகளே இதற்க்கு பதில் சொல்ல வேண்டும்.

    இந்த பதிவை டைமிங் பதிவு என்று சொல்பவர்கள் அம்புலிமாமா ஆசிரியரை பற்றி சிறிது யோசிக்க வேண்டும். மனிதன் நிலவில் கால பதித்த அந்த நேரத்தில் சரியாக நமது புராண இதிகாசங்களினபடி நிலவினைப்பற்றிய முழு வரலாற்றினையும், அதற்க்கு அடுத்து லேட்டஸ்ட் அப்டேட் ஆக மனிதனின் நிலவுப் பயணத்தை பற்றியும் கட்டுரையை அழகாக அமைத்து இருக்கிறார். முதலில் நமது புராண வரலாற்றினைப் படிப்போம். இதனை எழுதியது யாரென்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் உதவலாம்.

     

    Ambulimama Tamil Monthly Magazine Issue Dated August 1969 Page No 01 Ambulimama Tamil Monthly Magazine Issue Dated August 1969 Page No 02
    Ambulimama August 1969 01 Ambulimama August 1969 02
    Ambulimama Tamil Monthly Magazine Issue Dated August 1969 Page No 03 Ambulimama Tamil Monthly Magazine Issue Dated August 1969 Page No 04
    Ambulimama August 1969 03 Ambulimama August 1969 04
    Ambulimama Tamil Monthly Magazine Issue Dated August 1969 Page No 05 Ambulimama Tamil Monthly Magazine Issue Dated August 1969 Page No 06
    Ambulimama August 1969 05 Ambulimama August 1969 06

    மனிதனின் நிலவுப் பயணம்: இந்த ஸ்கான் பக்கங்கள் இதழின் நடுவில் தனியாக பக்க இலக்கமிடப்பட்டு இருந்ததாக நண்பர் ஒலக காமிக்ஸ் ரசிகர் கூறுகிறார். அதாகப்பட்டது, ரெகுலர் இதழ் அச்சிடப்பட்ட பின்னர் இந்த விஷயம் பிரிண்ட் செய்யப்பட்டு நடுவில் இணைக்கப்பட்டு இருக்கலாம் என்பது அவரது வாதம். இந்த வாதம் சரியாகவும் இருக்கலாம்.

     

    Ambulimama Tamil Monthly Magazine Issue Dated August 1969 Page No 07

    Ambulimama Tamil Monthly Magazine Issue Dated August 1969 Page No 08

    Ambulimama August 1969 07

    Ambulimama August 1969 08

    Ambulimama Tamil Monthly Magazine Issue Dated August 1969 Page No 09

    Ambulimama Tamil Monthly Magazine Issue Dated August 1969 Page No 10

    Ambulimama August 1969 09

    Ambulimama August 1969 10

    Ambulimama Tamil Monthly Magazine Issue Dated August 1969 Page No 11 Ambulimama Tamil Monthly Magazine Issue Dated August 1969 Page No 12
    Ambulimama August 1969 11 Ambulimama August 1969 12

    இந்த கட்டுரையை படிக்கும்போது திரு வாண்டுமாமா அவர்களின் உண்மையான தாக்கத்தை உணர்ந்தேன். இந்த கட்டுரை சிறப்பாக எழுதப்பட்டு இருந்தபோதிலும், நம்முடைய சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி அவர்களின் கைவண்ணத்தில் இந்த கட்டுரை வந்திருந்தால் கண்டிப்பாக (கம்ப ராமாயணத்தில் சொல்லப்பட்டது போல) அழகுக்கு அழகு சேர்ந்தது போல இருக்கும். எந்த ஒரு விஞ்ஞான கட்டுரையையும் தன்னுடைய அழகான நடையால் ஒரு சுவாரஸ்யமான கதை போல மாற்றி கொடுக்கும் அந்த ரசவாத நிபுணரின் கைவண்ணம் யாருக்கு வரும்?

    நாளைக்கும், அதன் பிறகும் தொடர்ச்சியாக பதிவிட ஆசை. முயற்சிக்கிறேன்.

    இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

    Thanks & Regards,

    King Viswa.

    Related Posts with Thumbnails