Pages

Tuesday, March 15, 2016

40 தமிழ் காமிக்ஸ் உலகம் - We are Back

கி மு 44.

Beware the Ides of March.

ஜூலியஸ் சீசரிடம் ஒரு தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகள் இவை. ஐட்ஸ் ஆஃப் மார்ச் என்றால், மார்ச் மாதத்தின் 15 ஆம் தேதி. அந்த நாளில்தான் ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்டார். இந்த சரித்திர தகவலை மனதில் நிறுத்தி, மேற்கொண்டு படியுங்கள்.


தமிழில் சிறுவர் இலக்கியம் மற்றும் சித்திரக்கதைகள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன். 140 ஆண்டு கால தமிழ் சிறுவர் இலக்கியம் மற்றும் சித்திரக்கதைகள் குறித்தான தகவல்களை திரட்டி வைத்துள்ளேன். ஆனால், சமகாலத்தில் தமிழில் சிறுவர் இலக்கியம் மற்றும் சித்திரக்கதைகளின் நிலை என்ன? என்று கேட்டால், என்னால் ஒரு புன்னகையை மட்டுமே அளிக்க இயலும். (அங்கொன்றும் இங்கொன்றுமாக சிற்சில முயற்சிகள் இருந்தாலும், பெரும்பாலும் தமிழ் சிறுவர் இலக்கியம் என்பது பாலைவனமாகவே உள்ளது).

இந்த நிலையை மாற்றி, தமிழ் சிறுவர் இலக்கியம் மற்றும் சித்திரக் கதைகளின் ரசனை, வாசிப்பு மற்றும் செயல்படும் களனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, தமிழ் காமிக்ஸ் உலகம் சார்பாக ஒரு சிறு முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.



  • அந்த முயற்சி என்ன?
  • எந்த விதமான செயல்பாடுகள் இருக்கும்?
  • புதிய காமிக்ஸ் கதைகளை தமிழில் உருவாக்கப்போகிறோமா?
  • கிராஃபிக் நாவல்களை மொழிமாற்றம் செய்து கதைகளை வெளியிடப்போகிறோமா?
  • புதிய காமிக்ஸ் இதழ் உருவாக்கப்படுமா?
இப்படி பல கேள்விகள் உங்கள் மனதில் எழலாம். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்க உள்ளோம்.
 
முகநூலில்  ஏகப்பட்ட கேள்விகள். ஏகப்பட்ட யூகங்கள்.

  • புதிய காமிக்ஸ்
  • மறுபடியும் பூந்தளிர்
  • வாண்டுமாமாவின் சித்திரக்கதைகளின் மறுபதிப்பு
  • ஐரோப்பிய சிறுவர் காமிக்ஸ்களின் மொழிமாற்று 
  • செல்லம் அவர்களின் காமிக்ஸ் கதைகள்
என பல வகையான பதில்கள். இவற்றுக்கு எனது பதில்:

அனைத்துமே சரிதான். அனைத்துமே இல்லை.

என்ன குழப்பமாக இருக்கிறதா? சரி, விடுங்கள். இதோ தமிழ் காமிக்ஸ் உலகின் அடுத்த கட்ட முயற்சியின் ஒரு டீசர்.

என்னடா, ஒரே ஒரு லோகோவை மட்டுமே பதிலாக அளித்திருக்கிறேன் என்றுதானே யோசிக்கிறீர்கள்? யூகியுங்கள். சற்று நேரம் அளிக்கிறேன்.

வரும் திங்கள் (மார்ச் 21 அன்று) மாலை 6.23 (IST)க்கு நமது முயற்ச்சியின் அடுத்த கட்டத்தை பற்றிய தகவலுடன் வருகிறேன்.

பின் குறிப்பு: அது என்ன 6.23? என்றும் யோசியுங்கள். சரியான பதில் அளிப்பவர்களுக்கு ஒரு ஆச்சரியமான பரிசு காத்திருக்கிறது.

நன்றி.

40 comments:

  1. முயற்சி வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் விஸ்வா. சஸ்பென்ஸ் சங்கர்லாலாக இருக்கிறீர்களே?

    ReplyDelete
  2. ஆவல் அதிகமாகி கொண்டே போகிறது...!!!

    எதுவாயினும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. புது காமிக்ஸ் நிறுவனம் ஆரம்பிக்க போகின்றது.கோகுலம் போல் சிறுவர் மாத இதழ்கள் ஏதுவாயினும் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. லக்ஷ்மி நாராயணன்Tuesday, March 15, 2016 at 7:03:00 PM GMT+5:30

    வாழ்த்துகள்

    ReplyDelete
  5. வண்னமும் தேர்வும் நன்று

    ReplyDelete
  6. why are you dragging this? if you want to share something, better be it happen now. If you keep on teasing, then the quality be so good that it leaves us no space to complaint.

    ReplyDelete
  7. இப்படி சஸ்பென்ஸ் வைக்கிறீர்களே விஷ்வா...

    ReplyDelete
  8. இப்படி சஸ்பென்ஸ் வைக்கிறீர்களே விஷ்வா...

    ReplyDelete
  9. வா வா வசந்தமே சுகந் தரும் சுகந்தமே

    ReplyDelete
  10. வா வா வசந்தமே சுகந் தரும் சுகந்தமே

    ReplyDelete
  11. வாழ்த்துகள். லோகோ அருமை.

    ReplyDelete
  12. வாழ்த்துகள். லோகோ அருமை.

    ReplyDelete
  13. விஸ்வா ஜீஜீஜீ

    சீக்கிரம் சொல்லுங்கள்.

    ReplyDelete
  14. முயற்சிக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  15. மனப்பூர்வ வாழ்த்துக்கள் திரு King visva அவர்களுக்கு.

    ReplyDelete
  16. வாழ்த்துகளுடன் காத்திருக்கிறேன் சார் ...;-)

    ReplyDelete
  17. ரொம்பவே யோசிக்கிறவங்ககிட்ட இருந்து நல்லா ரசிக்கற மாதிரி ஏதும் நிச்சயம் வரும்கிற நம்பிக்கை இருக்கு..! தொடர்ந்து நாம காசு போட்டு வாங்கிபடிக்கிறாப்பல புக்ஸ் ஏதும் வந்தா சந்தோஷம்..! இலவசம், டவுன்லோடுன்னா இருபது வாண்டுங்க உங்களை செமத்தியா கவனிக்க வருவாங்க,அதுக்கு நான் பொறுப்புகிடையாது விஸ்வா அவர்களே..!

    அப்புறம் எனக்கு அந்த 6:23 விடை தெரியும், ஆனாக்கா சொல்லமாட்டேன். ஏன்னா ஏற்கனவே ஒரு கிரைம் நாவல் பரிசு உங்ககிட்ட பெண்டிங் இருக்கு..! [சோகமான விவேக் ரூபலா படம் இஸ்டத்துக்கு..]

    ReplyDelete
    Replies
    1. //அப்புறம் எனக்கு அந்த 6:23 விடை தெரியும், ஆனாக்கா சொல்லமாட்டேன்.//

      அப்படியா? ஆச்சரியமாக இருக்கே? சொல்லுங்கள் பார்ப்போம்.

      இதற்கான காரணத்தை ஒரு ஆடியோ ஃபைலில் நேரம் குறித்து ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறேன்.

      நீங்கள் “சொல்லும்” காரணம் மேட்ச் ஆனால்,,,,,,,

      ஆனால், 1000 ரூபாய் பரிசு உங்களுக்கே.

      Delete
  18. சஸ்பென்ஸ்! சஸ்பென்ஸ்! மேலும் சஸ்பென்ஸ்!

    ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்.!

    6:23., நிச்சயம் நியூமராலஜி மேட்டராக இருக்க வாய்ப்பில்லை.!!
    (இதற்கு ஏதேனும் பரிசு கிடைக்குமா சார்?? :-) )

    ReplyDelete
  19. 6மாதம் 23 புத்தகம் வெளியிடுயீம் தேதியாக இருக்காலம்.

    ReplyDelete
  20. இழந்த சொர்க்கமாக இருந்த சித்திரக்கதைகளை நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த வலைத்தளத்தால் மீண்ட சொர்க்கமாக மாற்றிய காமிக்ஸ்காதலரான கிங் விஸ்வா அவர்களுக்கு, ஒரு காமிக்ஸ் ரசிகனாக, அவரின் புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. இழந்த சொர்க்கமாக இருந்த சித்திரக்கதைகளை நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த வலைத்தளத்தால் அடியேனுக்கு மீண்ட சொர்க்கமாக மாற்றிய காமிக்ஸ்காதலரான கிங் விஸ்வா அவர்களுக்கு, ஒரு காமிக்ஸ் ரசிகனாக, அவரின் புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. விஸ்வா, வாழ்த்துகள்.

    கார்த்திகேயன் சோமசுந்தரம்.

    ReplyDelete
  23. கங்க்ராட்ஸ்.

    ஆனா இது எதுக்குன்னு கேட்டா, அதை நான் 21ஆம் தேதி மாலை 6.24க்கு சொல்றேன். ஓக்கேவா விஸ்வா?

    ReplyDelete
  24. Rathna Bala, Bala Mithra, Poonthalir, Gokulam ,Anil, 1980s Siruvarmalar ( Palamuga mannan Joe, X-Ray Kann ) combinationla Vandumama writing Style + his characters (balu, kapish, kaakai kaali, manthiri, arakkans etc ) chelllam's oviyam ,
    Ellaam kalanthu katti Oru sooooooper virunthu... kondutheenganna
    We will be very much thanful and our kids also will get benefits of reading.....

    My personal suggestion for logo :
    this kind of logo is good for stamping (muthirai) purpose only . Make as meaningful, instead of giving importance to the english letters "TCU"in the center

    for comics lover : Just a re-cap in below link ;

    Just have look on the below link :

    https://www.google.co.in/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D++%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwju9KCl0snLAhVYCY4KHfcrAP4Q_AUIBygB&biw=1600&bih=740


    All the best to your new endeavour, we are here to support. Best of Luck

    ReplyDelete
  25. {{வரும் திங்கள் (மார்ச் 21 அன்று) மாலை 6.23 (IST)க்கு நமது முயற்ச்சியின் அடுத்த கட்டத்தை பற்றிய தகவலுடன் வருகிறேன்.}}

    Today is March 22 and time is now 5:00 PM IST

    ReplyDelete
  26. Dear Viswa,
    Wish you success in your new venture.

    ReplyDelete
  27. Sirji, waiting for the good news...

    ReplyDelete
  28. When Australian war journalist, bryce wilson photographer first saw the devastation wrought by the war in Ukraine’s east, it was how most saw it – through the keyhole of a computer screen. Australian interest in the Russian-Ukrainian conflict reached its greatest following after the downing of Flight MH17 in 2014, which resulted in the deaths of 27 Australians.

    As Bryce sat at his desk being paid for work he detested, he read about and saw the suffering and hardship endured by hundreds of thousands of people in Ukraine. And then it stopped. Australian coverage dried up, so Bryce attempted to fill the space left behind by other media.

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails